தாறுமாறாக ஓடும் மணல் லாரிகள் ! பணியாளர்கள் சென்ற வேன் விபத்துக்குள்ளாகி பெண்கள் படுகாயம் !

Spread the love

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாப்பம்பட்டியிலிருந்து ஐவர் மலை செல்லும் சாலையில் பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற வேண் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் நான்கு பெண்கள் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர் விபத்து குறித்து அப்பகுதியினர் கூறுகையில், பாப்பம்பட்டி, ஐவர் மலை செல்லும் சாலையில் நாள்தோறும் மணல் லாரிகள் இடைவிடாமல் சாரை சாரையாக எப்போதும் சென்றுகொண்டே இருக்கும். இந்த குறுகலான சாலையில் அதிவேகமாக லாரிகள் செல்வதால், வேலைக்குச் செல்லும் பொதுமக்கள், பள்ளி செல்லும் குழந்தைகள், விவசாயிகள் என அனைவரும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் செல்கின்றனர்.

அதேபோல்தான் இன்றும் பெண் பணியாளர்கள் சென்ற வேன் அந்த வழியாக சென்றபோது,  மணல் லாரி தாறுமாறாக வந்ததால், வேன் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நடந்ததாக கூறுகின்றனர். இதுசம்பந்தமாக துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Posts

டாஸ்மாக் பாரில் பெண்களுக்கு சம உரிமை ! திராவிட மாடல் சாதனை !

Spread the love

Spread the loveதிண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கியமான நகரம் பழனி. இங்கு தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி மலை அமைந்திருப்பதால், தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த நகரம் எப்போதும் மக்கள் நெருக்கம் நிறைந்த நகரமாகவே…

Read more

பழனியில் தடைசெய்யப்பட்ட லாட்டரி, போதைப்பொருள் விற்பனை காவல்துறைக்கு தெரியாமல் நடைபெறுகிறதா ?.!

Spread the love

Spread the loveதிண்டுக்கல் மாவட்டம் பழனியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள், பள்ளி, கல்லூரி வளாகங்களில் போதை பொருள் விற்பனை நடைபெறுவதை சுட்டிக்காட்டி ஏற்கனவே செய்திகள் வெளியாகியும், பழனி காவல்துறையினர் இதுவரை லாட்டரி விற்பனையை தடுக்கவில்லை. இருசக்கர வாகனத்தில் லாட்டரி சீட்டுகள்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏகமனதாக விடியல் ராஜூ தேர்வு  !

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏகமனதாக விடியல் ராஜூ தேர்வு  !

“அந்தோனி” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

“அந்தோனி” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

ஹாரர் & த்ரில்லர் படமாக உருவாகியுள்ள “99/66” திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியீடு !

ஹாரர் & த்ரில்லர் படமாக உருவாகியுள்ள “99/66” திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியீடு !