ஹாரர் & த்ரில்லர் படமாக உருவாகியுள்ள “99/66” திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியீடு !

Spread the love

மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற பட நிறுவனம் சார்பில், எம்.எஸ். மூர்த்தி கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி தயாரித்துள்ள படம்
“99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு” இந்தப் படத்தில் சபரி, ரோகிந்த் இருவரும் கதா நாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ரக்சிதா மகாலட்சுமி, ஸ்வேதா இருவரும் நடித்துள்ளனர். மற்றும் பவன்கிருஷ்ணா, கே.ஆர். விஜயா, கே.எஸ். வெங்கடேஷ், எஸ். சினேகா, குமாரி கனிஷ்கா, ஸ்ரீலேகா, சிங்கம் புலி, புஜ்ஜிபாபு, சாம்ஸ், அம்பானி சங்கர், முல்லை, கோதண்டம், பி.எல்.தேனப்பன், ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் தயாரிப்பாளரும் இயக்குநருமான  எம்.எஸ். மூர்த்தி நடித்துள்ளார்.

இந்தப் படத்திற்கு சேவிலோ ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை மீனாட்சி சுந்தரம் கையாள, ஜெயமுருகன் கலை இயக்கத்தைச் செய்துள்ளார். நடன இயக்குநர்களாக ஸ்ரீதர், ஆனந்த் இருவரும் பணியாற்றியுள்ளனர். பயர் கார்த்திக் பரபரப்பான சண்டைக்காட்சிகளை உருவாக்கியுள்ளார்.

படம் பற்றித் தயாரிப்பாளரும் இயக்குநருமான எம்.எஸ். மூர்த்தி  கூறுகையில், படத்தின் கதை சென்னையில் உள்ள 99 வீடுகள் கொண்ட ஓர் அடுக்கு மாடிக் குடியிருப்புப் பகுதியில் நடைபெறுகிறது. அதனால் தான் இந்தப் படத்திற்கு “99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு” என்று பெயர் வைத்துள்ளோம்.

அந்தக் குடியிருப்பில் நடைபெறும் சில அமானுஷ்ய சம்பவங்கள் குடியிருப்பு வாசிகளை அச்சத்திலும், பீதியிலும் ஆழ்த்துகின்றன. அவை ஏன் நடைபெறுகின்றன ? அதன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன ? என்பதை ஹாரர் கலந்து குடும்பத்தோடு பார்க்க கூடிய சுவாரஸ்யமான திரைக்கதையில் படமாக்கியுள்ளோம்.

இதுவரை சினிமாவில் காட்டப்படாத  ஐநூறு புத்த பிக்குகள் நடித்துள்ளனர்.
இதற்காக அரசு அனுமதியை பெற்று தாய்லாந்து, பர்மா, இலங்கை போன்ற பகுதிகளில் புத்த மடலாயத்தின் உள்ளேயே சென்று காட்சிகளை பிரம்மாண்டமாக படமாக்கினோம். மேலும், AI-CG காட்சிகள் நவீன தொழில்நுட்பத்தில், மிகப் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளதும் இப்படத்தின் முக்கிய அம்சமாகும்.

இந்த படத்தின் மூன்று விதமான ஆன்மீகம் சார்ந்த பாடல்கள் இடம்பெற இருக்கிறது. அதில் “அருவா மீசை காரன்” என்ற கருப்பசாமி பாடலும், “யாரு பிள்ளையாரு” என்ற விநாயகர் பாடலும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
படத்தை வருகிற மார்ச் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடுகிறோம் என்றார்.

Related Posts

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

Spread the love

Spread the loveபாடகரும், இசைக் கலைஞருமான ஹர்ஷவர்தன் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார் என உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கிறது. திரையிசை பாடலுக்கு நிகராக தற்போது திறமை வாய்ந்த இசை கலைஞர்கள் உருவாக்கும் இன்டிபென்டன்ட் மியூசிக் வீடியோ ஆல்பத்திற்கும் கிடைத்து வருகிறது. ஜென்…

Read more

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

Spread the love

Spread the loveMillion Dollar Studios மற்றும் Neo Castle Creations இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் இனிதே வெற்றிகரமாக நிறைவு பெற்றிருக்கிறது. தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களங்களை தொடர்ந்து வழங்கி வரும் Million Dollar Studios, ‘குட்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏகமனதாக விடியல் ராஜூ தேர்வு  !

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏகமனதாக விடியல் ராஜூ தேர்வு  !

“அந்தோனி” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !