முதலமைச்சருக்கு தமிழக பாஜக வேண்டுகோள் !

Spread the love

தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதாவது நமது பாரதத்தின் துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ள தமிழ் மண்ணின் மைந்தரும், மகாராஷ்டிரா ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து இந்தியா கூட்டணியிலும் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருமனதாக ஆதரவு அளிக்க வேண்டும் என ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன்.

தென் பாரதத்தில் இருந்து ஒரு பெருமைமிகு தமிழரை, மூத்த தலைவரை, துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளாராக தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்துள்ளது தமிழகத்திற்கு கிடைத்த முக்கியமான அங்கீகாரம் ஆகும்.

இத்தருணத்தில் இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வை நினைவுபடுத்த விரும்புகிறேன். 2022-ல் நமது மாண்புமிகு குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு அவர்களை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக அறிவித்த போது, ஒடிசா மண்ணின் மகளான அவரை முன்னாள் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கட்சி வித்தியாசங்களையும், அரசியல் மாறுபாடுகளையும் தாண்டி தனது கட்சியினரை வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

நவின் பட்நாயக் அவர்களுக்கு அன்றிருந்த பெருந்தன்மையும், மாநிலப் பற்றும் திமுகவிற்கும், அதன் தலைவரும், தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் அவர்களுக்கும் இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

ஆகவே, நமது தமிழ் மண்ணின் மைந்தரான சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு தனது முழு ஆதரவையும் நல்குமாறு மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்!

Related Posts

கோவையை நாசமாக்கிய திமுகவை புறக்கணிக்க வேண்டும் ! அண்ணாமலை ஆவேசம் !

Spread the love

Spread the loveதமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர், நயினார் நாகேந்திரனின், ‘தமிழகம் தலைநிமிர, தமிழனின் பயணம்’ யாத்திரை நிகழ்ச்சி கோவை கிணத்துக்கடவு பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் தலைவர் அண்ணாமலை, தமிழக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன்,…

Read more

தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டம் ! நயினார் நாகேந்திரன் கண்டனம் !

Spread the love

Spread the loveதமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடக்கும் தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகமே பற்றி எரிவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்.. திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி 285-ன்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

“திரௌபதி_2” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“திரௌபதி_2” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“வா வாத்தியார்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“வா வாத்தியார்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

சிவகார்த்திகேயனின் “பராசக்தி” படத்தின் விமர்சனம்

சிவகார்த்திகேயனின் “பராசக்தி” படத்தின் விமர்சனம்

ஜீவாவின் நடிப்பில் உருவாகியுள்ள “தலைவர் தம்பி தலைமையில்” படத்தின் முன்னோட்டம் வெளியீடு !

ஜீவாவின் நடிப்பில் உருவாகியுள்ள “தலைவர் தம்பி தலைமையில்” படத்தின் முன்னோட்டம் வெளியீடு !

பிரபல கஞ்சா வியாபாரி கைது, குற்றவாளிகளின் கூடாரமான திமுக !

பிரபல கஞ்சா வியாபாரி கைது, குற்றவாளிகளின் கூடாரமான திமுக !