தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டம் ! நயினார் நாகேந்திரன் கண்டனம் !

Spread the love

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடக்கும் தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகமே பற்றி எரிவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்.. திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி 285-ன் படி, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றும்படி, கடந்த சில தினங்களாக சென்னை, கடலூர், திருநெல்வேலி, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தூய்மைப்பணியாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களைத் தொடர்ந்து போராடவிட்டால் அது திமுகவிற்கு எதிரான பெரும் மக்கள் புரட்சியாக உருவெடுக்கும் என்பதை உணர்ந்த அறிவாலயத்தின் தலைவர்கள் கொஞ்சம் கூட கருணையின்றி அம்மக்களை அடித்து விரட்டுகிறார்கள். வலுக்கட்டாயமாகக் கைது செய்து அவர்களை சிறையில் அடைக்கிறார்கள். போராட்டக்காரர்களுக்கு உதவும் சமூக ஆர்வலர்களையும் சிறைக்காவலில் தாக்கித் துன்புறுத்துகிறார்கள். உழைக்கும் வர்க்கத்தினை இவ்வாறு ஒடுக்குவது தான் திமுகவின் சமூகநீதி மாடலா ?

ஒவ்வொரு தேர்தலின் போதும் வறுமையின் பிடியில் சிக்கியுள்ள உழைக்கும் வர்க்கத்தினருக்கு ஆயிரம் ஆசை வார்த்தைகளைக் கூறிவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களைத் திட்டமிட்டு இப்படி ஏமாற்றுவதற்கு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு மனது உறுத்தவில்லையா ? தனது ஆட்சியின் இறுதி காலங்களிலாவது தூய்மைப் பணியாளர்களின் துயரங்களைத் துடைத்து அம்மக்களின் வாழ்வில் ஒளியேற்றுவதை விட்டுவிட்டு, மென்மேலும் அம்மக்களை வதைக்கும் திமுகவின் அகங்காரம் உண்மையிலேயே வெட்கக்கேடு.

எனவே, திமுகவால் வஞ்சிக்கப்பட்ட தமிழகத் தூய்மைப் பணியாளர்களுக்கு பக்க பலமாக என்றும் களத்தில் பாஜக நிற்கும் என்பதையும், இந்த அராஜக அரசின் மீதான மக்களின் கடுங்கோபத்தையும், ஆற்றாமையையும் அடக்குமுறைகளால் அணைத்துவிட முயன்றால் அது பேராபத்தில் சென்று முடியும் என்பதையும் முதல்வருக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts

முதலமைச்சருக்கு தமிழக பாஜக வேண்டுகோள் !

Spread the love

Spread the loveதமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதாவது நமது பாரதத்தின் துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ள தமிழ் மண்ணின் மைந்தரும், மகாராஷ்டிரா ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து…

Read more

18 ஆண்டுகள் மத்தியில் அதிகாரத்தில் இருந்த திமுக, மாநில உரிமைகளுக்காக பேசாதது ஏன் ? கனிமொழிக்கு கே.எஸ். ராதாகிருஷ்ணன் கேள்வி

Spread the love

Spread the loveதிமுக மக்களவை குழு தலைவரும், துணை பொதுச் செயலாளருமான கனிமொழி, மாநில உரிமையை பறிகொடுத்த எடப்பாடிபழனிச்சாமியை, தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கனிமொழி…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

“பிளாக்மெயில்” படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு !

“பிளாக்மெயில்” படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு !

“லோகா” படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு நிகழ்வு !

“லோகா” படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு நிகழ்வு !

“இரவின் விழிகள்” படப்பிடிப்பில் நாயகியை சில்மிஷம் செய்த இளைஞர்கள் !

“இரவின் விழிகள்” படப்பிடிப்பில் நாயகியை சில்மிஷம் செய்த இளைஞர்கள் !

“குமார சம்பவம்” படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“குமார சம்பவம்” படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“கட்டா குஸ்தி-2” படப்பிடிப்பு பூஜையின் துவங்கியது !

“கட்டா குஸ்தி-2” படப்பிடிப்பு பூஜையின் துவங்கியது !