எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

Spread the love

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அண்ணாஜீ ராவ் சாலை விரிவாக்கம், ஒன்றாவது தெருவில் இரும்பு கடை வைத்துள்ள ராஜிக் என்பவர் எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோவை வடக்கு மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் இவரது வீட்டில் அமலாக்க துறையைச் சேர்ந்த ஐந்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அதிக அளவில் சட்ட விரோத பண பரிவர்த்தனை நடந்துள்ளதாக சந்தேகத்தின் பேரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

அதே போல் இரும்பு பொருட்கள் விற்கும் கடை உரிமையாளரும், எஸ்.டி.பி.ஐ கட்சியின் உறுப்பினருமான வாகித் ரகுமான் மற்றும் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் பழக்கடை நடத்தி வரும் ரீலா என்பவரது கடையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கேரளா பதிவு எண் கொண்ட கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மூன்று பிரிவுகளாக பிரிந்து, மூன்று இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். சோதனை நடைபெறும் வீடுகளிலிருந்து யாரும் வெளியேறவோ, புதிதாக யாரும் உள்ளே நுழையவோ அனுமதிக்கப்படவில்லை. சோதனை நடைபெற்ற இடங்களின் வெளியே துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சோதனை நடைபெறும் வீட்டின் முன்பு திரண்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினர், அமலாக்க துறையின் சோதனையை கண்டித்து முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து வாகித் ரஹ்மான் வீட்டில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட வாகித் ரகுமானை பலத்த பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் காரில் அழைத்துச் சென்றனர்.

அப்போது அவரது வீட்டின் முன்பு கூடி இருந்த எஸ்.டி.பி.ஐ கட்சியினர் அமலாக்கத்துறைக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். இந்த சோதனையின் போது காவல்துறை டிஎஸ்பி அதியமான் மற்றும் ஆய்வாளர் சின்னகாமானன் ஆகியோர் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுனர்.

Related Posts

34 ஆண்டுகளாக பொது மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

Spread the love

Spread the loveகோயம்புத்தூர் மாவட்டம், கோவை வடக்கு வட்டாரத்தில் உள்ள விளாங்குறிச்சி கிராமத்தில், முருகன் நகர், விநாயகபுரம், சங்கரா நகர் ஆகிய இடங்களில் வசிக்கும் பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 34 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்துள்ளனர்.…

Read more

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி பணியிடமாற்றம் !

Spread the love

Spread the loveபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே 13ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என கோவை மகளிர் நீதிமன்றம் அறிவித்த சில நிமிடங்களிலேயே அந்த நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொள்ளாச்சி பாலியல் குற்றம் தொடர்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏகமனதாக விடியல் ராஜூ தேர்வு  !

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏகமனதாக விடியல் ராஜூ தேர்வு  !

“அந்தோனி” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

“அந்தோனி” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

ஹாரர் & த்ரில்லர் படமாக உருவாகியுள்ள “99/66” திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியீடு !

ஹாரர் & த்ரில்லர் படமாக உருவாகியுள்ள “99/66” திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியீடு !