திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்துள்ள கணியூர் காவல்நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில், காவலர்கள் வேஷ்டி, சட்டை அணிந்தும், பெண் காவலர்கள் பாரம்பரிய முறைப்படி சேலை அணிந்து வந்து காவல்நிலைய வளாகத்தில் பொங்கல் வைத்து விவசாயத்தை போற்றும் விதமாக பொங்கலோ பொங்கல் என சத்தமாக கூறி, காவல்நிலைய ஆய்வாளர் திருமதி. பஞ்சுலட்சுமி தலைமையில் கொண்டாடினர்.


மேலும் பொங்கல் விழாவை முன்னிட்டு விளையாட்டு வீரர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி பாராட்டினார். மேலும் காவல்நிலைய உதவி ஆய்வாளர் கார்த்தி, சிறப்பு உதவி ஆய்வாளர் குணா, ராஜேந்திரன் மற்றும் சக காவலர்கள், அப்பகுதியை சேர்ந்த அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு பொங்கல் விழாவை சிறப்பித்தனர்.






