பல்லடம் நகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து, தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் அறிவித்த பொதுமக்கள் !

Spread the love

திருப்பூர் மாவட்டம், பல்லடம் நாகராட்சிக்குட்பட்ட பகுதியில் 18 வார்டுகள் அமைந்துள்ளது. இந்நிலையில் 10 வது வார்டு பகுதிக்குட்பட்ட ஜே.கே.ஜே காலனியில் சுமார் நூற்றுக்கும் அதிகமான வீடுகள் உள்ளன. மேலும் இப்பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பே சாக்கடை கழிவு நீர் வெளியேற்றுவதற்கு  பொதுமக்கள் தங்களது சொந்த செலவில் கழிவு நீர் வாய்க்கால் ஏற்படுத்தியுள்ளனர்.
இதனிடையே பல்லடம் நகராட்சி சார்பில், மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள ஆயத்த பணிகள் நடைபெற்றுவந்தன. இப்பணிகள் துவங்க அப்பகுதி பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கருத்து தெரிவிக்கையில், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பே பொதுமக்கள் சொந்த செலவில் கழிவுநீர் வெளியேற வாய்க்கால் அமைத்துள்ளதாகவும், தற்போது பல்லடம் நகராட்சி சார்பில் புதிதாக மழை நீர் வடிகால் அமைப்பதால் ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கும் சாக்கடை கழிவு நீர் வாய்க்கால் பாதிக்கபடுவதோடு மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாகவும் தெரிவித்து வருகிறோம் என தெரிவித்தனர்.

மேலும் மழை நீர் வடிகால் திட்டத்தை நகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும் எனவும் இல்லையெனில் வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக தெரிவித்தனர். பல்லடம் நகராட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Posts

கறிக்கோழி உற்பத்தியாளர்கள் புகார் ! விவசாயிகள் சங்கத் தலைவர் கைது !

Spread the love

Spread the loveகறிக்கோழி உற்பத்தியாளர்கள் கூலி உயர்வு கேட்டு கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மட்டுமல்லாது தமிழக முழுவதும் பல இடங்களில் கடந்த சில நாட்களாக, கறிக்கோழி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், தனியார்…

Read more

காவலர்கள் கொண்டாடிய சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் !

Spread the love

Spread the loveதிருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்துள்ள கணியூர் காவல்நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில், காவலர்கள் வேஷ்டி, சட்டை அணிந்தும், பெண் காவலர்கள் பாரம்பரிய முறைப்படி சேலை அணிந்து வந்து காவல்நிலைய வளாகத்தில் பொங்கல் வைத்து விவசாயத்தை போற்றும்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏகமனதாக விடியல் ராஜூ தேர்வு  !

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏகமனதாக விடியல் ராஜூ தேர்வு  !

“அந்தோனி” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

“அந்தோனி” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

ஹாரர் & த்ரில்லர் படமாக உருவாகியுள்ள “99/66” திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியீடு !

ஹாரர் & த்ரில்லர் படமாக உருவாகியுள்ள “99/66” திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியீடு !