முருக பக்தர்கள் மாநாட்டிற்கு இடையூறு விளைவிக்கும் திமுக ! பாஜக தலைவர் குற்றச்சாட்டு

Spread the love

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில், ராணி அஹில்யா பாய் 300-வது பிறந்தநாள் இன்று மாலை ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க சார்பில் கொண்டாடப்படுகிறது. இதில் கலந்து கொள்ள பா.ஜ.க தேசிய அமைப்பு இணைச்செயலாளர் சிவப்பிரகாஷ், தமிழக பா.ஜ.க மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் இன்று காலை ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க அலுவலகம் வந்தடைந்தனர். அவர்கள் இருவருக்கும் மாவட்ட பொதுச்செயலாளர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ். சண்முகநாதன் தலைமையில் பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

பின்னர் அச்சுந்தன்வயல் பகுதியில் உள்ள பா.ஜ.க மாவட்ட அலுவலகத்தில் நிருபர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் கூறியதாவது.. மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டை திட்டமிட்டே நடத்த விடாமல் தி.மு.க அரசு தடுக்கிறது. இம்மாநாடு நடைபெற்று விட்டால் எங்கே பெரும் எழுச்சி தமிழகத்தில் ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சத்தில் தி.மு.க உள்ளது. யாருக்கும் தொந்தரவு இல்லாத முருக பக்தர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் பொதுவான இடத்தில் நடைபெற உள்ள இந்த மாநாடு எங்கே வெற்றிகரமாக நடந்து முடிந்து விட்டால் தமிழகத்தில் பா.ஜ.க அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்து விடும் என்கிற பயமும் தி.மு.க-விற்கு வந்துவிட்டது.

அ.தி.மு.க-பா.ஜ.க எப்போது கூட்டணி அமைத்ததோ அன்றிலிருந்தே தி.மு.க கூட்டணி கட்சிகளுக்கு தோல்வி பயம் வந்துள்ளது. கூட்டணி தொடர்பான விமர்சனம் நாளொரு வண்ணம், பொழுதொரு மேனியுமாக அரங்கேறி வருகிறது. மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு நீதிமன்றத்தின் அனுமதியுடன் நடைபெறும். எதிர் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்காளர்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள் என கூறினார்.

முன்னதாக பா.ஜ.க மாநிலப் பொதுச்செயலாளர்கள் பொன். பாலகணபதி, கருப்பு முருகானந்தம், முன்னாள் கயறு வாரிய தலைவர் குப்புராமு, ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க தலைவர் கி.முரளிதரன், மாவட்ட பொதுச்செயலாளர் கவுன்சிலர் ஜி‌.குமார், மாவட்ட துணைத்தலைவர்கள் முத்துச்சாமி, சௌந்தரராஜன், மாவட்ட செயலாளர்கள் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முருகன், சிவசங்கர், மாவட்ட ஊடகப் பிரிவு தலைவர் எஸ்.பி.குமரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பு அழைப்பாளர்களுக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

Related Posts

இராமநாதபுரத்தில் தொகுதி அளவிலான விளையாட்டு போட்டிகள் !

Spread the love

Spread the loveஇராமநாதபுரத்தில் சட்டமன்ற தொகுதி அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியை மெரா யுவா பாரத் (MY Bharat), நேரு யுவா கேந்திரா (NYK), இராமநாதபுரம் மற்றும் இளையோர் மன்றங்கள்   இணைந்து Block Level Sports Meet 2025– ஐ,…

Read more

மகளிர் சுய உதவிக் குழுவினரை ஏமாற்றிய வங்கி அதிகாரிகள் ! சாலை மறியலால் பரபரப்பு..!

Spread the love

Spread the loveராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மகளிர் சுய உதவிக் குழு, பெண்கள் நல அறக்கட்டளை சார்பில் பரமக்குடி சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்குக்கும் மேற்பட்ட பெண்கள் கடந்த 2020 – 2022 ஆம் ஆண்டு ஐம்பதாயிரம் ரூபாய் கடன்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

“பூங்கா” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

“பூங்கா” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

“வீர தமிழச்சி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“வீர தமிழச்சி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

34 ஆண்டுகளாக பொது மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

34 ஆண்டுகளாக பொது மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

இராமநாதபுரத்தில் தொகுதி அளவிலான விளையாட்டு போட்டிகள் !

இராமநாதபுரத்தில் தொகுதி அளவிலான விளையாட்டு போட்டிகள் !

“சுமதி வளவு” திரைப்படம் செப்டம்பர் 26 முதல் ஜீ-5 தளத்தில் வெளியீடு !

“சுமதி வளவு” திரைப்படம் செப்டம்பர் 26 முதல் ஜீ-5 தளத்தில் வெளியீடு !