Spread the love

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், பத்தாயிரம் ஏக்கரில் எலுமிச்சை சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சந்தைக்கு விற்பனைக்கு வரும் எலுமிச்சை பழங்களின் அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

கடந்த ஆண்டு கிலோ 140 ரூபாய்க்கு விற்பனையான எலுமிச்சை பழங்கள், தற்போது 30 முதல் 35 ரூபாய்க்கு விற்பனையாவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். கடையநல்லூர் பகுதியில், குளிர்பதன சேமிப்பு கிடங்கு அமைத்து, எலுமிச்சையை மதிப்பு கூட்டு பொருளாக மாற்றி விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.