உச்சநீதிமன்றத்திடம் குடியரசு தலைவர் கேட்கும் விளக்கம் அரசியலா ?.!

Spread the love

ஆளுநரின் அதிகாரம் குறித்த 2 பேர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பில் ஆளுநரின் அதிகாரம் குறித்தும், மசோதாக்கள் குறித்தும், குடியரசு தலைவர் குறித்த காலக்கெடு குறித்து இருநபர் அமர்வு அளித்த தீர்ப்பை திமுகவினர் கொண்டாடிவரும் நிலையில், ஜனாதிபதி உச்சநீதிமன்றத்திடம் சில விளக்கங்கள் கேட்டுள்ளார்.

இதுசம்பந்தமாக வழக்கறிஞரும், மூத்த அரசியல்வாதியுமான கே.எஸ். ராதாகிருஷ்ணன் கூறுகையில், அந்த நேரத்திலேயே குடியரசுத்தலைவர் குறித்த உச்ச நீதிமன்ற உத்தரவை சட்டம் அறிந்தோர் இதுபோன்ற அரசியலமைப்பு சம்பந்தப்பட்ட விவகாரங்களில் லார்ஜர் பெஞ்ச் தான் முடிவு செய்ய முடியும், இதில் மத்திய அரசு மேல்முறையீடு போகலாம் அல்லது குடியரசு தலைவரே அரசியலமைப்புச் சட்டம் ஆர்ட்டிகல் 143-ன் கீழ் சில விளக்கங்களை உச்ச நீதிமன்றத்தில் கேட்கலாம் என தெரிவித்தனர்.

அவ்வாறு கேட்கும் பட்சத்தில் உச்ச நீதிமன்றம் லார்ஜர் பெஞ்ச் விசாரணைக்கு உத்தரவிடும் என என்போன்றோர் தெரிவித்தோம். இது குடியரசு தலைவருக்கான உரிமை. இது அரசியல் அல்ல. ஆனால் இன்றைய முதல்வரின் அறிக்கையை பார்க்கும்போது எனக்கு அதிர்ச்சியும், வியப்பும் ஏற்பட்டது.

முதல்வருக்கு யார் இவ்வாறு தப்பு, தப்பான ஆலோசனை கொடுப்பது ? குடியரசு தலைவர் உச்ச நீதிமன்றத்தில் விளக்க்ம் கோருவது அரசியலமைப்பு அவருக்கு கொடுத்துள்ள உரிமை. அவர் கான்ஸ்டிடியூஷன் ஹெட், அவருக்கான கேள்வியை எழுப்ப அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்கிறது. இதை பாஜகவுடன் சம்பந்தப்படுத்தி அரசியல் செய்ய முதல்வரால் எப்படி முடிகிறது.

இதற்கு முன் 1952-ல் குடியரசுத்தலைவர் ராஜேந்திர பிரசாத் காலத்தில் பிரதமர் நேரு, ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் யாருக்கு அதிகாரம் என 143 பிரிவின் படி Article கீழ் கேட்டுள்ளார். 1988-ஆம் ஆண்டு ராமஜென்ம பூமி பிரச்சனை குறித்து அப்போதைய குடியரசுத்தலைவர் ஆர். வெங்கட்ராமன் 143 ஆர்ட்டிகல் கீழ் கேட்டுள்ளார்.

குடியரசுத்தலைவர் உரிமையில் தலையிட்டு அரசியல் செய்ய தமிழக முதல்வருக்கு யார் தவறான ஆலோசனை சொல்வது ? இது அத்துமீறும் செயலாகும். முதல்வர் தன் அறிக்கையை திரும்ப பெற வேண்டும். லார்ஜர் பெஞ்சுக்கு ஆளுநர் அதிகாரம் குறித்த விவகாரம் போனால் தற்போது வாங்கிய தீர்ப்பு காலாவதியாகும் என்கிற பயம் முதல்வருக்கும், திமுகவினருக்கும் உள்ளது அப்பட்டமாக வெளிப்படுகிறது. அரசியலமைப்பு சட்டத்தின்படி பதவி பிரமாணம் எடுத்தவர் அதையே கேலிக்கூத்தாக்கும் வகையில் அரசியல் செய்வதை யாரும் அனுமதிக்க முடியாது.

இந்நிலையில்தான்  உச்சநீதிமன்றத்திடம் ஆலோசனை கருத்தை பெறும் வகையில், 14 கேள்விகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு எழுப்பினார்.

1. ஒரு சட்ட மசோதா கவர்னரிடம் சமர்ப்பிக்கப்படும் போது அரசியல் சட்டத்தின் 200வது பிரிவின் படி அவருக்கு உள்ள சட்ட ரீதியான வாய்ப்புகள் என்ன ?

2. அவ்வாறு மசோதா கவர்னரிடம் சமர்ப்பிக்கப்படும்போது அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனைக்கு கவர்னர் கட்டுப்பட்டவரா ?

3. அரசியல் சட்டத்தின் 200வது பிரிவின்படி, கவர்னருக்கு உள்ள சட்ட ரீதியான தனி உரிமை என்பது ஏற்றுக்கொள்ள கூடியதா ?

4. அரசியல் சட்டத்தின் 361வது பிரிவு, அரசியல் சட்டத்தின் 200வது பிரிவின் படி, கவர்னரின் செயல்பாடுகள் ஆய்வுக்கு  தடையாக உள்ளதா ?

5. அரசியல் சட்டத்தில் கவர்னரின் செயல்பாடுகளுக்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படாத நிலையில், நீதிமன்ற உத்தரவின் மூலம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா ?

6. அரசியல் சட்டத்தின் 201வது பிரிவின் படி, ஜனாதிபதியின் தனி உரிமை ஏற்றுக்கொள்ள கூடியதா ?

Related Posts

பிரபல கஞ்சா வியாபாரி கைது, குற்றவாளிகளின் கூடாரமான திமுக !

Spread the love

Spread the loveதமிழகத்தில் போதைப்பொருட்கள் விற்பனையே இல்லை என சமீபத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியிருந்தார். ஆனால் பிரபல கஞ்சா வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். அதோடு அவர் திமுக நிர்வாகி என்பதும் குறிப்பிடத்தக்கது. இது சம்பந்தமாக பாஜக முன்னாள் தலைவர்…

Read more

மரம் நடுவது ஒவ்வொருவரின் கடமை ! டெல்லி முதல்வர் வேண்டுகோள் !

Spread the love

Spread the loveஇந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லி அட்டல் பார்க் பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா, டெல்லி முதல்வர் திருமதி. ரேகா குப்தா…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

“திரௌபதி_2” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“திரௌபதி_2” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“வா வாத்தியார்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“வா வாத்தியார்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

சிவகார்த்திகேயனின் “பராசக்தி” படத்தின் விமர்சனம்

சிவகார்த்திகேயனின் “பராசக்தி” படத்தின் விமர்சனம்

ஜீவாவின் நடிப்பில் உருவாகியுள்ள “தலைவர் தம்பி தலைமையில்” படத்தின் முன்னோட்டம் வெளியீடு !

ஜீவாவின் நடிப்பில் உருவாகியுள்ள “தலைவர் தம்பி தலைமையில்” படத்தின் முன்னோட்டம் வெளியீடு !

பிரபல கஞ்சா வியாபாரி கைது, குற்றவாளிகளின் கூடாரமான திமுக !

பிரபல கஞ்சா வியாபாரி கைது, குற்றவாளிகளின் கூடாரமான திமுக !