ஆறு மணிக்கு அதிரவைக்கும் வெடிச்சத்தம் ! அதிர்ச்சியில் பொதுமக்கள் !

Spread the love

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாலை சுமார் ஆறு மணியானதும் அலாரம் வைத்தார் போல் தொடர்ச்சியாக சிறிது இடைவெளி விட்டு அதிர வைக்கும் வெடிச்சத்தம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லடத்தை அடுத்துள்ள செம்மிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட குப்புசாமிநாயுடுபுரத்தில் பிரபல நூற்பாலை அமைந்துள்ளது. மேலும் இங்கு சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக மாலை சுமார் ஆறு மணி ஆனதும் மேற்கு பகுதியில் சூரியன் மறைந்த பிறகு ரம்மியமாக காணப்படும். மேலும் மாலை வேளைகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் மேற்கு நோக்கி அணி வகுத்து பறப்பதும், காலையில் கிழக்கு நோக்கி பறவைகள் பறப்பது காண்போரின் கண்ணுக்கு விருந்தாக அமையும். இதனிடையே திடீரென மாலை பயங்கர சத்தத்துடன் மேற்கு பகுதியில் உள்ள தோப்பில் வெடிக்கும் சத்தம் பொதுமக்களை அதிர வைத்துள்ளது. மேலும் தொடர்ச்சியாக வெடிசத்தம் கேட்பதால் மாலை நேரம் கூடு தேடி வரும் பறவைகள் ஆயிரக்கணக்கில் அலறிய படி கூட்டம் கூட்டமாக வானில் வட்டமடிக்கிறது.

மேலும் அதிக சத்தத்துடன் கூடிய வெடிகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இது போன்ற விஷமிகளின் செயல் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அருகில் உள்ள கோடங்கிபாளையத்தின் கல்குவாரி வெடிச்சத்தம் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், மர்ம வெடிச்சத்தம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டால் மட்டுமே வெடியின் வீரியத்தை தவிர்க்க முடியும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Related Posts

பல்லடம் நகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து, தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் அறிவித்த பொதுமக்கள் !

Spread the love

Spread the loveதிருப்பூர் மாவட்டம், பல்லடம் நாகராட்சிக்குட்பட்ட பகுதியில் 18 வார்டுகள் அமைந்துள்ளது. இந்நிலையில் 10 வது வார்டு பகுதிக்குட்பட்ட ஜே.கே.ஜே காலனியில் சுமார் நூற்றுக்கும் அதிகமான வீடுகள் உள்ளன. மேலும் இப்பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பே சாக்கடை கழிவு…

Read more

கறிக்கோழி உற்பத்தியாளர்கள் புகார் ! விவசாயிகள் சங்கத் தலைவர் கைது !

Spread the love

Spread the loveகறிக்கோழி உற்பத்தியாளர்கள் கூலி உயர்வு கேட்டு கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மட்டுமல்லாது தமிழக முழுவதும் பல இடங்களில் கடந்த சில நாட்களாக, கறிக்கோழி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், தனியார்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏகமனதாக விடியல் ராஜூ தேர்வு  !

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏகமனதாக விடியல் ராஜூ தேர்வு  !

“அந்தோனி” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

“அந்தோனி” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

ஹாரர் & த்ரில்லர் படமாக உருவாகியுள்ள “99/66” திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியீடு !

ஹாரர் & த்ரில்லர் படமாக உருவாகியுள்ள “99/66” திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியீடு !