பல்லடம் அருகே நிலக்கரி சுரங்கமா ? கண்டுகொள்ளாத வருவாய்த்துறை அதிகாரிகள் !

Spread the love

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே மண் அள்ளும் குட்டையில் நிலக்கரி வெட்டி எடுக்கப்படுவதாக பொதுமக்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். பல்லடம் தாலுக்கா கே. அய்யம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில், அனுப்பட்டி செல்லும் சாலையின் இருபுறத்திலும் திடீரென பூமி உள்வாங்கியது போல் கோடிக்கணக்கான மதிப்பிலான கிராவல் மண் காணாமல் போயுள்ளது.

மேலும் குறிப்பிட்ட ஆழத்திற்கு பிறகு கருப்பு நிறத்தில் வெட்டி எடுக்கப்பட்டுள்ள பாறைத்துகள்கள் நிலக்கரி கல் போல் காட்சி அளிக்கிறது. இது வரை எந்த ஒரு இடத்திலும் சட்டவிரோதமாக மண் அள்ளப்படும்போது, கருப்பு நிறத்தில் மண் காணப்பட்டதில்லை. இந்த அதிசய நிகழ்வினை கண்டுபிடித்து விசாரணை மேற்கொள்ளவேண்டிய கிராம நிர்வாக அலுவலர் முதல் வருவாய் துறை வரையுள்ள அதிகாரிகள் உறக்கத்தை கலைத்து உண்மையை கண்டறிய வேண்டும். குளம் குட்டைகளை தூர்வாரிவநத நிலையில், தற்போது மண் வளம் மறைந்து நிலக்கரி கிடைக்க ஆரம்பித்திருக்கிறதா ? அல்லது மண் தன்மை விஷமாக மாறியுள்ளதா ? என மண் பரிசோதனை மூலம் வருவாய் துறை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

மேலும் மண் அள்ளப்பட்ட குட்டைக்கு மிக அருகிலேயே அதிக மின் அழுத்த டவர்லைன் செல்வதால் ஆபத்து ஏற்ப்படவும் வாய்ப்புள்ளது. திடீரென பல்லடத்தில் மக்கள் நடமாட்டமுள்ள சாலையின் இருபுறமும் சட்டவிரோத மண் அள்ளும் கும்பல் ரகசியமாக வெட்டப்பட்ட இடத்தை ஆய்வு செய்து மண் திருட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Posts

பல்லடம் நகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து, தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் அறிவித்த பொதுமக்கள் !

Spread the love

Spread the loveதிருப்பூர் மாவட்டம், பல்லடம் நாகராட்சிக்குட்பட்ட பகுதியில் 18 வார்டுகள் அமைந்துள்ளது. இந்நிலையில் 10 வது வார்டு பகுதிக்குட்பட்ட ஜே.கே.ஜே காலனியில் சுமார் நூற்றுக்கும் அதிகமான வீடுகள் உள்ளன. மேலும் இப்பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பே சாக்கடை கழிவு…

Read more

கறிக்கோழி உற்பத்தியாளர்கள் புகார் ! விவசாயிகள் சங்கத் தலைவர் கைது !

Spread the love

Spread the loveகறிக்கோழி உற்பத்தியாளர்கள் கூலி உயர்வு கேட்டு கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மட்டுமல்லாது தமிழக முழுவதும் பல இடங்களில் கடந்த சில நாட்களாக, கறிக்கோழி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், தனியார்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏகமனதாக விடியல் ராஜூ தேர்வு  !

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏகமனதாக விடியல் ராஜூ தேர்வு  !

“அந்தோனி” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

“அந்தோனி” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

ஹாரர் & த்ரில்லர் படமாக உருவாகியுள்ள “99/66” திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியீடு !

ஹாரர் & த்ரில்லர் படமாக உருவாகியுள்ள “99/66” திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியீடு !