“க்ராணி” படத்தின் விமர்சனம்

Spread the love

விஜயாமேரி யுனிவர்சல் நிறுவனம் தயாரிப்பில், வடிவுக்கரசி, கஜராஜ், சிங்கம்புலி, திலீபன், ஆனந்த் நாக் உள்ளிட்டோர் நடிப்பில், விஜய குமாரன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “க்ராணி”.

கதைப்படி.. இரவு நேரத்தில் காட்டுப்பகுதியில் ஒரு வயதான பாட்டி நடந்து செல்கிறார். பின்னால் பாட்டி.. பாட்டி என பெண் குழந்தை செல்கிறது. பின்னர் அதிகாலையில் தோட்டத்தில் பெண் சடலம் கிடக்கிறது. அதுவும் மிகவும் கொடூரமான முறையில் ரத்த வெள்ளத்தில் கிடக்கிறது. பின்னர் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்குகின்றனர். இதற்கிடையில் லண்டனில் இருந்து மனைவி, இரு குழந்தைகளுடன், சாஃப்ட் வேர் வேலையை விட்டுவிட்டு விவசாயம் செய்ய வேண்டும் என அந்த ஊரில் உள்ள பெரிய வீட்டில் தங்குகிறார் ஆனந்த் நாக். அந்த சமயத்தில் வயதான பாட்டி அந்த வீட்டிற்கு வரும்போது, மயங்கி கீழே விழுகிறார். அந்த தம்பதியினர் அவரை உள்ளே கொண்டுவந்து அவர்மீது கரிசனம் காட்டுகிறார்கள்.

இதற்கிடையில் ஊரில் உள்ளவர்கள் கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன்பு அந்த ஊரில் நடந்த சம்பவங்களை கூறுகின்றனர். அதனை நம்ப மறுக்கிறார் ஆனந்த் நாக். பின்னர் வீட்டிற்குச் செல்கிறார். அங்கு பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதை பார்க்கிறார். அதன்பிறகு என்னானது என்பது மீதிக்கதை…

படத்தின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை எதிர்பார்ப்புடன் பார்வையாளர்களை அமர வைத்திருக்கிறார் இயக்குநர்.

வடிவுக்கரசிக்கு மேக்கப் சிறப்பாக அமைந்திருக்கிறது. அவருக்கு வசனங்கள் குறைவாக இருந்தாலும், தனது நடிப்பின் மூலம் நிறைய பேசியிருக்கிறார். அதேபோல் சிங்கம்புலிக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். மாற்றுத்திறனாளிகளாக நடித்துள்ள இரண்டு குழந்தைகளின் நடிப்பு சிறப்பு. படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

Related Posts

“கப்புள் ஃப்ரண்ட்லி” படத்தின் திரைவிமர்சனம்

Spread the love

Spread the loveUV கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில், அஜய் குமார் ராஜூ தயாரிப்பில், சந்தோஷ் ஷோபன், மானசா வாரனாசி, யோகி பாபு, சுனில் ரெட்டி உள்ளிட்டோர் நடிப்பில், அஷ்வின் சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “கப்புள் ஃப்ரண்ட்லி. கதைப்படி.. திருச்சியில் குடும்பத்தினருடன்…

Read more

“பூக்கி” படத்தின் திரைவிமர்சனம்

Spread the love

Spread the loveவிஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பில், ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும், அஜய் திஷான், தனுஷா, பாண்டியராஜன், சுனில், லட்சுமி மஞ்சு உள்ளிட்டோர் நடிப்பில், கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு & இயக்கத்தில்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏகமனதாக விடியல் ராஜூ தேர்வு  !

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏகமனதாக விடியல் ராஜூ தேர்வு  !

“அந்தோனி” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

“அந்தோனி” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

ஹாரர் & த்ரில்லர் படமாக உருவாகியுள்ள “99/66” திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியீடு !

ஹாரர் & த்ரில்லர் படமாக உருவாகியுள்ள “99/66” திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியீடு !