“திரௌபதி_2” விமர்சனம்

Spread the love

இயக்குநர் மோகன் ஜீ இயக்கத்தில், நட்டி நடராஜ், ரிச்சர்ட் ரிசி, ரக்ஷனா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “திரௌபதி_2”.

கதைப்படி…தனது மகளின் திருமணத்திற்காக நிலத்தை விற்கப் போனால் அது #வக்பு வாரியத்திற்குள் வருகிறது அதனை விற்க வக்பு அனுமதி வேண்டும் என்கிற சிக்கலில் படம் துவங்குகிறது. இந்த பிரச்சினைக்காகவும், காடவர்கள் கட்டிய சொர்ணகாமாட்சி ஆலய புனரமைப்பிற்காகவும் பிரபா என்ற இளைஞர் போராட முன் வருகிறார். இந்த விசயத்தை அறிந்த கம்போடிய வாழ் இந்தியர் சொர்ணகாமாட்சி ஆலய புனரமைப்பிற்கு ஆகும் செலவை ஏற்றுக் கொள்வதாகவும் அதற்கு உதவியாக தனது இரு மகள்களையும் அனுப்பி வைக்கிறார்.

அந்த இரு மகள்களில் ஒருவர் மீது திரெளபதி ஆவி வந்து பேசுகிறது. நம்மை எழுநூறு ஆண்டுகளுக்கு முன் அழைத்துச் செல்கிறது. திருவண்ணாமலையை ஆண்ட வல்லாளர் தனது தளபதியாக காடவனை நியமிக்கிறார். அவனுக்கு உதவியாக தாராசூரனை எடுத்துக் கொள்கிறான். காடவனுக்கு முடிசூட்டி அவனுக்கு திரெளபதி என்ற பெண்ணை திருமணம் செய்து வைக்கிறார் வல்லாளர்.

கண்ணனூர் கோட்டையை முற்றுகையிட்டு சுல்தானை பணிய வைக்க காடவன் முயல்கிறான். சுல்தான் பணிவது போல் நடித்து ஒரு சந்தர்ப்பத்தில் வல்லாளரை கொல்கிறான். இந்த தகவலை திரௌபதியிடம் தவறாக தகவல் சொல்லி வல்லாளரை காப்பாற்றாமல் காடவன் துரோகம் செய்து விட்டதாக தாராசூரன் திரெளபதியை நம்ப வைத்து தம்பதியை பிரிக்கிறான்.

காடவன் துக்ளக்கின் தம்பி பல்வானை கொன்று பின் துக்ளக்கையும் கொன்று வல்லாள இளவரசனையும் மீட்டு தான் துரோகியல்ல என்று நிரூபித்து உயிர் துறக்கிறான். தாராசூரன் செய்த சக்தியையும், கணவன் காடவனின் தியாகத்தையும் உணர்ந்து மதுரை சுல்தானை சந்தித்த திரெளபதி அவனது நிபந்தனைகளுக்கு உடன் படுவதாகவும், சொர்ணகாமாட்சி சிலையை ஒப்படைப்பதாகவும் நடித்து மதுரை சுல்தானை விட்டே தாராசூரனை கொல்ல வைப்பதோடு, பின் மதுரை சுல்தானையும் கொன்று விடுகிறாள். இந்த வரலாறுகளை கூறும் திரெளபதி ஆவி பிரபாவாக பிறந்திருக்கும் காடவனிடம் மன்னிப்பு கோருவதோடு சொர்னகாமாட்சி சிலை மறைத்து வைக்கப் பட்ட இடத்தையும் கூறுகிறது.

சிலை கிடைத்ததா ? ஊர் மக்களின் நீண்ட நாள் கனவான சொர்ண காமாட்சி கோவிலுக்கு குடமுழுக்கு நடைபெற்றதா ? இல்லையா என்பது மீதிக்கதை..

தமிழர்கள் பரவலாக அறியாத வல்லாளர் வரலாற்று,  சுல்தான்கள் நடத்திய வெறியாட்டங்கள், சுல்தான்கள் இந்துக்களை மதம் மாற்ற நடத்திய கொடூரங்கள், இந்துக்களின் மத நம்பிக்கை, வலிகள், காயங்கள், இந்து தர்மத்தை பாதுகாக்க இந்துக்கள் நடத்திய போராட்டங்களை இயக்குநர் காட்சிப்படுத்திய விதம் அனைவரையும் ரசிக்க வைக்கிறது. ஒரு வரலாற்றுக் கதையை இயல்பாக பதிய வைத்த மோகன்ஜி பாராட்டுக்குறியவர்.

வல்லாளராக நட்டி நடராஜ் நடித்துள்ளார். சிறப்பான நடிப்பு எனினும் வசன உச்சரிப்பில் கவனம் செலுத்தியிருக்கலாம்.
இன்றைய கால பிரபாவாக அன்றைய கால காடவனாக ரிச்சர்ட்ரிஷி இயல்பான நடிப்பை தந்திருக்கிறார்.
திரெளபதியாக ரக்‌ஷனா அசத்தியிருக்கிறார்.

Related Posts

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

Spread the love

Spread the loveபாடகரும், இசைக் கலைஞருமான ஹர்ஷவர்தன் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார் என உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கிறது. திரையிசை பாடலுக்கு நிகராக தற்போது திறமை வாய்ந்த இசை கலைஞர்கள் உருவாக்கும் இன்டிபென்டன்ட் மியூசிக் வீடியோ ஆல்பத்திற்கும் கிடைத்து வருகிறது. ஜென்…

Read more

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

Spread the love

Spread the loveMillion Dollar Studios மற்றும் Neo Castle Creations இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் இனிதே வெற்றிகரமாக நிறைவு பெற்றிருக்கிறது. தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களங்களை தொடர்ந்து வழங்கி வரும் Million Dollar Studios, ‘குட்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏகமனதாக விடியல் ராஜூ தேர்வு  !

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏகமனதாக விடியல் ராஜூ தேர்வு  !

“அந்தோனி” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

“அந்தோனி” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

ஹாரர் & த்ரில்லர் படமாக உருவாகியுள்ள “99/66” திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியீடு !

ஹாரர் & த்ரில்லர் படமாக உருவாகியுள்ள “99/66” திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியீடு !