பிரபல கஞ்சா வியாபாரி கைது, குற்றவாளிகளின் கூடாரமான திமுக !

Spread the love

தமிழகத்தில் போதைப்பொருட்கள் விற்பனையே இல்லை என சமீபத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியிருந்தார். ஆனால் பிரபல கஞ்சா வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். அதோடு அவர் திமுக நிர்வாகி என்பதும் குறிப்பிடத்தக்கது. இது சம்பந்தமாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்… சென்னை ஒக்கியம்  துரைப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் கஞ்சா வியாபாரி ஒருவர், 18 வது முறையாக  கைது செய்யப்பட்டிருக்கிறார். இதில் உச்சகட்ட நகைச்சுவை என்னவென்றால், தமிழ்நாட்டில் “கஞ்சா நடமாட்டமே இல்லை” என்று கூறிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுடனும், இந்தப் பெண் கஞ்சா வியாபாரி புகைப்படம் எடுத்திருக்கிறார்.

ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழக மாணவி மீது பாலியல் வன்முறையில் ஈடுபட்ட பாலியல் குற்றவாளி ஞானசேகரனுடனான புகைப்படத்துக்கு பல காரணங்களைச் சொல்லி மழுப்பிய, அமைச்சர் மா. சுப்பிரமணியன், பல முறை கைது செய்யப்பட்ட கஞ்சா வியாபாரியுடனான புகைப்படத்துக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ?

இந்நிலையில், அந்தப் பெண் கஞ்சா வியாபாரி, 196 வது ‘அ’ வட்ட கண்ணகிநகர் திமுக துணை செயலாளர் என்று கூறப்படுகிறது. அமைச்சர்கள் வரை நெருக்கமாக இருக்கும் போதைப் பொருள் வியாபாரிகள் மற்றும் பாலியல் குற்றவாளிகள், திமுகவை தங்கள் கூடாரமாக வைத்திருப்பதில் ஆச்சரியமில்லை என பதிவிட்டுள்ளார்.

Related Posts

லஞ்ச, ஊழல் வழக்கில் அமைச்சர் நேரு மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவு

Spread the love

Spread the loveநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணிநியமனத்தில், ரூ 888 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில், அமைச்சர் கே.என். நேரு மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை வரவேற்று பாரதிய…

Read more

“நம்பிக்கை” குளோபல் லாஞ்ச் நிகழ்வு !

Spread the love

Spread the loveமலேசியாவில் கடந்த 27 ஆண்டுகளாகத் தனி முத்திரை பதித்து வரும் ‘நம்பிக்கை’ ஊடகம், இந்தியாவில் தனது புதிய கிளையைச் சென்னையில் கோலாகலமாகத் தொடங்கியது. இதன் தொடக்க விழாவில், அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள், ஊடகப் பிரதிநிதிகள்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏகமனதாக விடியல் ராஜூ தேர்வு  !

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏகமனதாக விடியல் ராஜூ தேர்வு  !

“அந்தோனி” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

“அந்தோனி” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

ஹாரர் & த்ரில்லர் படமாக உருவாகியுள்ள “99/66” திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியீடு !

ஹாரர் & த்ரில்லர் படமாக உருவாகியுள்ள “99/66” திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியீடு !