“பேரன்பும் பெருங்கோபமும்” விமர்சனம்

Spread the love

E-5 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில், காமாட்சி ஜெய கிருஷ்ணன் தயாரிப்பில், விஜித் பச்சன், ஷாலி நிவேகாஸ், மைம் கோபி, அருள்தாஸ், கீதா கைலாசம், பவா செல்லத்துரை உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “பேரன்பும் பெருங்கோபமும்”.

கதைப்படி.. அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்டு, போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை கூறி சிறை செல்கிறார் ஜீவா ( விஜித் பச்சன் ). இவரது பின்னணியை விசாரணை செய்ய அவரது சொந்த கிராமத்திற்கு செல்கிறது போலீஸ். அங்கு குறிப்பிட்ட ஆதிக்க சாதியினர் வீட்டுப் பெண்ணை, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பையன் காதலித்ததால், அடக்குமுறைக்கு ஆளாகி தீயிட்டு கொளுத்தப்படுகிறான். பின்னர் அந்தப் பெண்ணும் சித்ரவதைக்கு உட்படுத்தப்பட்டு பைத்தியமாக சுற்றித்திரிகிறார்.

அதேபோல் ஜீவா கேராளாவில் படிக்கப்போன இடத்தில் காதலித்து அழைத்து வரும் சாராவும் ( சாலி நிவேகாஸ் ) சாதிய அடக்குமுறைக்கு ஆளாகி பலியானதும் போலீஸ் விசாரணையில் தெரியவருகிறது. இதற்கிடையில் அமைச்சர் ( மைம் கோபி ) ஜீவா விஷயத்தில் கோபமாகிறார்.

போலீசாரிடம் ஜீவா சொன்ன திடுக்கிடும் தகவல்கள் என்ன ? அமைச்சர் ஏன் ஜீவாவை கொள்ள துடிக்கிறார் என்பது மீதிக்கதை..

இளமையில் தான் பட்ட வேதணைகளுக்கு, முதுமையில் பழிவாங்கத்துடிக்கும் ஜீவா கதாப்பாத்திரத்தில் விஜித் பச்சன், இன்னும் நடிப்பு பயிற்சி எடுத்துக்கொண்டு நடித்திருக்க வேண்டும் என்றுதான் சொல்ல வேண்டும். நாயகி ஷாலி நிவேகாஸ் சிறப்பாக தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கிராமம், நீதிமன்றம் காட்சிகளில் லாஜிக் இல்லாமல் செயற்கைத் தனமாக காட்சிகள் நகர்வது அப்பட்டமாக தெரிகிறது. இயக்குநர் திரைக்கதையிலும், நடிகர்களை வேலை வாங்கியதிலும் கவனம் செலுத்தியிருக்கலாம்‌. ஒளிப்பதிவாளர் தனது பணியை சிறப்பாக செய்துள்ளார்.

Related Posts

“பூங்கா” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

Spread the love

Spread the loveஅழகு மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள “பூங்கா” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஜாகுவார் தங்கம்,  “லவ் டுடே” படத்தின் இயக்குனர் பாலசேகரன், நடிகர் ஜாவா சுந்தரேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு,…

Read more

“வீர தமிழச்சி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

Spread the love

Spread the loveமகிழினி கலைக்கூடம் நிறுவனத்தின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சுரேஷ் பாரதி இயக்கத்தில் நடிகர்கள் சஞ்சீவ் வெங்கட், இளயா, சுஷ்மிதா சுரேஷ் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘வீர தமிழச்சி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

“பூங்கா” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

“பூங்கா” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

“வீர தமிழச்சி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“வீர தமிழச்சி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

34 ஆண்டுகளாக பொது மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

34 ஆண்டுகளாக பொது மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

இராமநாதபுரத்தில் தொகுதி அளவிலான விளையாட்டு போட்டிகள் !

இராமநாதபுரத்தில் தொகுதி அளவிலான விளையாட்டு போட்டிகள் !

“சுமதி வளவு” திரைப்படம் செப்டம்பர் 26 முதல் ஜீ-5 தளத்தில் வெளியீடு !

“சுமதி வளவு” திரைப்படம் செப்டம்பர் 26 முதல் ஜீ-5 தளத்தில் வெளியீடு !