பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அமித்ஷா வாழ்த்து !

Spread the love

தமிழ்நாடு பாஜக தலைவராக கடந்த நான்கு வருடங்களாக அண்ணாமலை பதவி வகித்து வந்தார். இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவருக்கான தேர்தல் அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. அதில், பாஜக எம்.எல்.ஏவும், தமிழ்நாடு சட்டமன்ற பாஜக குழு தலைவராகவும் இருந்துவரும் நயினார் நாகேந்திரன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மாநிலத் தலைவர் பதவிக்கு வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததன் காரணமாக அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பாஜக மாநில நிர்வாகிகளுடனான ஆலோசனைக்காகவும், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி குறித்தான பேச்சுவார்த்தைக்காகவும் இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ள அமித்ஷா கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கி அந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் வேட்புமனு தாக்கல் நேரம் நிறைவடைந்தைத் தொடர்ந்தும், வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததைத் தொடர்ந்தும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பின்னர் அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் பாஜக தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரனிடம் மட்டுமே வேட்பு மனு பெறப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை பாராட்டத்தக்க சாதனைகளை செய்துள்ளார். பிரதமர் மோடியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதாக இருந்தாலும் சரி, கட்சியின் திட்டங்களை கிராமம் கிராமமாக எடுத்துச் செல்வதாக இருந்தாலும் சரி, அண்ணாமலையின் பங்களிப்பு முக்கியமானது. கட்சியின் தேசிய கட்டமைப்பில் அண்ணாமலையின் திறன்களை பாஜக பயன்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

Related Posts

லஞ்ச, ஊழல் வழக்கில் அமைச்சர் நேரு மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவு

Spread the love

Spread the loveநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணிநியமனத்தில், ரூ 888 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில், அமைச்சர் கே.என். நேரு மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை வரவேற்று பாரதிய…

Read more

“நம்பிக்கை” குளோபல் லாஞ்ச் நிகழ்வு !

Spread the love

Spread the loveமலேசியாவில் கடந்த 27 ஆண்டுகளாகத் தனி முத்திரை பதித்து வரும் ‘நம்பிக்கை’ ஊடகம், இந்தியாவில் தனது புதிய கிளையைச் சென்னையில் கோலாகலமாகத் தொடங்கியது. இதன் தொடக்க விழாவில், அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள், ஊடகப் பிரதிநிதிகள்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏகமனதாக விடியல் ராஜூ தேர்வு  !

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏகமனதாக விடியல் ராஜூ தேர்வு  !

“அந்தோனி” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

“அந்தோனி” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

ஹாரர் & த்ரில்லர் படமாக உருவாகியுள்ள “99/66” திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியீடு !

ஹாரர் & த்ரில்லர் படமாக உருவாகியுள்ள “99/66” திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியீடு !