தமிழர் உருவாக்கிய குறியீடு மாற்றம் ! “ரூ” குறியீடுக்கு அண்ணாமலை கண்டனம்

Spread the love

தமிழ்நாடு அரசின் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை 14 ஆம் தேதி சட்டமன்றத்தில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். இந்நிலையில் நிதிநிலை அறிக்கைக்கான லட்சினையை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில் ரூபாயை குறிக்கும் தேவ நாகரிக எழுத்தான ( ₹ ) என்பதற்கு பதிலாக தமிழ் எழுத்தான ரூ என்னும் எழுத்தை பயன்படுத்தி லட்சினை வெளியிடப்பட்டுள்ளது

புதிய கல்விக் கொள்கையும், அதில் இருக்கும் மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் என்றும் தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கைதான் நீடிக்கும் என, தமிழ்நாடு அரசு வலுவாக சொல்லி வருகிறது. இந்நிலையில் இந்தி மொழிக்கு அடிப்படையாக இருக்கும் தேவ நாகரிக குறியீடான (₹ ) என்பதற்கு பதிலாக தமிழ் எழுத்தான ரூ பயன்படுத்தி இருப்பது அனைவரின் கவனத்தைப் பெற்றுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், தமிழர் ஒருவர் உருவாக்கி பாரதம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ரூபாய் ( ₹ ) சின்னத்தை, தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையில் மாற்றுகிறது. தமிழ்நாடு அரசு மாற்றி உள்ள ரூபாய் குறியீடு திமுக முன்னாள் எம்எல்ஏ வின் மகன் உருவாக்கியது என பதிவிட்டுள்ளார்

Related Posts

கோவையை நாசமாக்கிய திமுகவை புறக்கணிக்க வேண்டும் ! அண்ணாமலை ஆவேசம் !

Spread the love

Spread the loveதமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர், நயினார் நாகேந்திரனின், ‘தமிழகம் தலைநிமிர, தமிழனின் பயணம்’ யாத்திரை நிகழ்ச்சி கோவை கிணத்துக்கடவு பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் தலைவர் அண்ணாமலை, தமிழக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன்,…

Read more

தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டம் ! நயினார் நாகேந்திரன் கண்டனம் !

Spread the love

Spread the loveதமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடக்கும் தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகமே பற்றி எரிவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்.. திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி 285-ன்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

“திரௌபதி_2” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“திரௌபதி_2” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“வா வாத்தியார்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“வா வாத்தியார்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

சிவகார்த்திகேயனின் “பராசக்தி” படத்தின் விமர்சனம்

சிவகார்த்திகேயனின் “பராசக்தி” படத்தின் விமர்சனம்

ஜீவாவின் நடிப்பில் உருவாகியுள்ள “தலைவர் தம்பி தலைமையில்” படத்தின் முன்னோட்டம் வெளியீடு !

ஜீவாவின் நடிப்பில் உருவாகியுள்ள “தலைவர் தம்பி தலைமையில்” படத்தின் முன்னோட்டம் வெளியீடு !

பிரபல கஞ்சா வியாபாரி கைது, குற்றவாளிகளின் கூடாரமான திமுக !

பிரபல கஞ்சா வியாபாரி கைது, குற்றவாளிகளின் கூடாரமான திமுக !