இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லி அட்டல் பார்க் பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா, டெல்லி முதல்வர் திருமதி. ரேகா குப்தா ஆகிய இருவரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மேலும் தமிழகத்தைச் சேர்ந்த ஏ. அங்கப்பன் என்கிற அருண் ( தேவர் குழும நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி ), அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு மரக்கன்றுகள் நடுவதன் மூலம் பசுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

இந்த நிகழ்வில் முதலமைச்சர் ரேகா குப்தா பேசுகையில், மரக்கன்றுகள் நடுவது ஒரு சடங்கு மட்டுமல்ல, வருங்கால தலைமுறைகளுக்கான நமது பொறுப்பாகும். ஒவ்வொரு நபரும் ஆண்டுக்கு குறைந்தது ஒரு மரம் நட்டு, அதை முறையாக பராமரிக்க வேண்டும் என்று அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில், ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.






