மோகன்லால் நடித்துள்ள “எம்புரான்” படத்தின் திரைவிமர்சனம்

Spread the love

ஆசீர்வாத் சினிமாஸ், ஶ்ரீ கோகுலம் மூவீஸ், லைகா புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், மோகன்லால் மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் பிருத்விராஜ் இந்திரஜித் சுகுமாரன் அபிமன்யு சிங் சுராஜ் வெஞ்சரமூடு ஜெரோம் பிளின் எரிக் எபோனி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “எம்புரான்”.

கதைப்படி.. குஜராத்தில் நடைபெற்ற இன கலவரத்தில் ஒரு அரண்மனையில் தஞ்சம் புகுந்த இஸ்லாமிய குடும்பத்தினர் அனைவரையும் மிகவும் கொடூரமான முறையில் கொன்று குவித்ததோடு அந்த அரண்மனையை அபிமன்யு சிங் தலைமையிலான கும்பல் அபகரித்துக் கொள்கின்றனர். அதில் பிருத்விராஜ் மட்டும் அவரது தந்தையின் உதவியுடன் தப்பிக்கிறார்.

இந்நிலையில் கேராளாவில் ஐ. யூ.எப் கட்சியின் தலைவராகி முதல்வராக பொறுப்பேற்ற டொவினோ தாமஸ் பணம் மற்றும் தேசிய அரசியலுக்கு ஆசைப்பட்டு ஜ.யூ.எப் கட்சியிலிருந்து விலகி அபிமன்யு சிங்குடன் இணைந்து புதிய கட்சியில் ஐக்கியமாகிறார். கேரளாவின் முக்கியமான அணை சம்பந்தமாக மக்களுக்கு விரோதமான முடிவையும் எடுக்கிறார். பின்னர் தனது தங்கை மஞ்சு வாரியரையும் ஐ.யூ.எப் கட்சியின் மூலம் அரசியலுக்கு வரக்கூடாது என தடுக்கிறார்.

அதனைத் தொடர்ந்து, வெளிநாட்டில் இருக்கும் மோகன்லாலுக்கு, கேரள அரசியல் நிலவரங்கள் குறித்து இந்திரஜித் சுகுமாரன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு மோகன்லாலும் கேரளாவுக்கு வருகிறார்.

பின்னர் மக்கள் விரோத ஆட்சி நடத்தும் டொவினோ தாமஸின் முதல்வர் பதவி மற்றும் மஞ்சு வாரியரின் அரசியல் எதிர்காலம் என்னானது ? சிறுவயதில் தனது குடும்பத்தை அழித்த அபிமன்யு சிங்கை பழிவாங்க துடிக்கும் பிருத்விராஜின் எண்ணம் நிறைவேறியதா? என்பது மீதிக்கதை.‌..

படம் ஆரம்பித்த முதல் காட்சியிலிருந்து, இறுதிவரை காட்சி வடிவமைப்புகள் அனைத்தும் புதுமையாகவும் பிரமாண்டமாகவும் காட்சிகளை வடிவமைத்துள்ளார் இயக்குநர். அதாவது சண்டை காட்சிகள் அனைத்தும் புதுமையாகவும், பிரமாண்டமாகவும் காட்சிகளை வடிவமைத்துள்ளார். மோகன்லால் புதுவிதமான முகபாவணையிடன் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் என்றே சொல்லலாம். மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், பிருத்விராஜ், இந்திரஜித் சுகுமாரன், அபிமன்யு சிங் உள்ளிட்ட ஒவ்வொரு கதாப்பாத்திர தேர்வும் சிறப்பு.

மொத்தத்தில் பிரமாண்டமாக புதுவிதமான அனுபவத்தை கொடுத்துள்ளது எம்புரான்.

Related Posts

“கப்புள் ஃப்ரண்ட்லி” படத்தின் திரைவிமர்சனம்

Spread the love

Spread the loveUV கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில், அஜய் குமார் ராஜூ தயாரிப்பில், சந்தோஷ் ஷோபன், மானசா வாரனாசி, யோகி பாபு, சுனில் ரெட்டி உள்ளிட்டோர் நடிப்பில், அஷ்வின் சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “கப்புள் ஃப்ரண்ட்லி. கதைப்படி.. திருச்சியில் குடும்பத்தினருடன்…

Read more

“பூக்கி” படத்தின் திரைவிமர்சனம்

Spread the love

Spread the loveவிஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பில், ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும், அஜய் திஷான், தனுஷா, பாண்டியராஜன், சுனில், லட்சுமி மஞ்சு உள்ளிட்டோர் நடிப்பில், கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு & இயக்கத்தில்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏகமனதாக விடியல் ராஜூ தேர்வு  !

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏகமனதாக விடியல் ராஜூ தேர்வு  !

“அந்தோனி” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

“அந்தோனி” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

ஹாரர் & த்ரில்லர் படமாக உருவாகியுள்ள “99/66” திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியீடு !

ஹாரர் & த்ரில்லர் படமாக உருவாகியுள்ள “99/66” திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியீடு !