இசையில் வரலாறு படைத்துள்ளார் இளையராஜா ! தமிழில் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி

Spread the love

லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றிய தமிழ்நாட்டைச் சேர்ந்த இசைஞானி இளையராஜாவிற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் என பலரும் பெருமையோடு வாழ்த்து தெரிவித்திருந்தனர். முதலமைச்சர் மு க ஸ்டாலின் இளையராஜாவின் 50 ஆண்டுகால திரையிசை பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவு செய்துள்ளதாக அறிவித்திருக்கிறார்.

இந்நிலையில் பிரதமர் மோடியை சந்தித்த இளையராஜா, மோடியை சந்தித்து எனது சிம்பொனி 01 Valiant குறித்தும், பல்வேறு விஷயங்கள் குறித்தும் உரையாடி அவரது வாழ்த்தையும், ஆதரவையும் பெற்றுக் கொண்டேன் என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

இதையடுத்து பிரதமர் மோடி, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு இளையராஜா அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இசைஞானியான அவரது மேதைமை நமது இசை மற்றும் கலாச்சாரத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எல்லா வகையிலும் முன்னோடியாக இருக்கும் அவர், சில நாட்களுக்கு முன் லண்டனில் தனது முதலாவது மேற்கத்திய செவ்வியல் சிம்பொனியான வேலியண்ட்டை வழங்கியதன் மூலம் மீண்டும் வரலாறு படைத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சி உலகப் புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மோனிக் இசை குழுவுடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்த முக்கியமான சாதனை அவரது இணையற்ற இசைப் பயணத்தில் மற்றொரு அத்தியாயத்தை குறிக்கிறது. உலக அளவில் தொடர்ந்து மேன்மையுடன் விளங்குவதை இதை எடுத்துக்காட்டுகிறது என்று தமிழில் வாழ்த்து சொல்லி எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

Related Posts

தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாக செயல்பாடுகளை கண்டித்து, உறுப்பினர்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பு !

Spread the love

Spread the loveதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டாமல் செயலற்ற நிலையில், இருப்பதை கண்டித்து சங்கத்தின் உறுப்பினர்களின் கண்டனம் மற்றும் ஆலோசனை கூட்டம் தனியார் விடுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசும்போது, சங்கத்தின் நிர்வாகிகள் வருடந்தோறும் கூட்ட வேண்டிய…

Read more

தேமுதிக சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

Spread the love

Spread the loveராமநாதபுரம் மாவட்ட தேமுதிக சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களை நியமனம் செய்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி மாவட்ட மகளிர் அணி செயலாளர் செல்வி பரமக்குடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராகவும், மாவட்ட அவைத்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

“தேசிங்குராஜா_2” விமர்சனம்

“தேசிங்குராஜா_2” விமர்சனம்

“உருட்டு உருட்டு” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“உருட்டு உருட்டு” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“டிரெண்டிங்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“டிரெண்டிங்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“கைமேரா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“கைமேரா” படத்தின் இசை வெளியீட்டு விழா !