“ஹாட் ஸ்பாட்_2” படத்தின் விமர்சனம்

Spread the love

ஜே.கே.பி டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பில், அஷ்வின், பவானி ஶ்ரீ, ஆதித்யா பாஸ்கர், ரக்ஷன், பிரியா பவானி ஷங்கர், சஞ்சனா திவாரி, எம்எஸ் பாஸ்கர், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடிப்பில், விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “ஹாட் ஸ்பாட்_2”.

கதைப்படி… ஒரு தயாரிப்பாளரிடம் பெண் இயக்குநர் ( பிரியா பவானி ஷங்கர் ) கதை சொல்ல ஆரம்பிக்கிறார். அதுவே காட்சிகளாக நகர்கிறது. அதாவது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் இருவரின் தீவிர ரசிகர்கள் ஒருவருக்கொருவர் ஆக்ரோஷமாக மோதிக் கொள்கிறார்கள். இந்நிலையில் இரு நாயகர்களின் படங்களும் ஒரே நாளில் வெளியாகிறது. இரண்டு ரசிகர்களின் குடும்பத்தினரையும் கடத்தி வைத்துக்கொண்டு, இரு நாயகர்களும் ஒரே லைனில் பேச வேண்டும். பேசினால் குடும்பத்தினரை விடுவிப்பதாக கெடுவிதிக்கிறது கடத்தல் கும்பல். அதன்பிறகு என்னானது என்பது மீதிக்கதை…

வெளிநாட்டில் படித்துவிட்டு ஊர் திரும்பும் மகளை ( சஞ்சனா ) அழைத்துவர தந்தை ( தம்பி ராமையா ) விமான நிலையம் செல்கிறார். மகள் அரைகுறை ஆடையுடன் ஒரு பையனுடன் வருகிறார். தந்தை தமிழ் கலாச்சாரம் பண்பாடு, பழக்க வழக்கத்தில் ஊரிப்போனவர் என்பதால் மகளின் நடவடிக்கையை பார்த்து அதிர்ச்சி ஆகிறார். பின்னர் அவரது முதலாளி தனது மகனுக்கு பெண் கேட்கிறார். அப்போதும் அரைகுறை ஆடையில் வந்து, வெளிநாட்டு கலாச்சாரத்துடன் பேசி இதுதான் மாடர்ன் என்கிறார். குடும்பத்தில் ஈகோ உருவாகி குழப்பம் நீடிக்கிறது. அதன்பிறகு என்னானது என்பது மீதிக்கதை.‌‌.

இதேபோல் மேலும் இரண்டு கதைகள். ஒரு படத்தில் நான்கு கதைகள். நான்கும் வெவ்வேறு திசைகளில் பயணித்து விறுவிறுப்பாக நகர்கிறது.

தயாரிப்பாளரிடம் கூறிய நான்கு கதைகளில், எந்த கதை தேர்வானது, எந்த நோக்கத்திற்காக இந்த கதைகள் சொல்லப்பட்டது என்பது மீதிக்கதை.‌‌

Related Posts

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

Spread the love

Spread the loveபாடகரும், இசைக் கலைஞருமான ஹர்ஷவர்தன் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார் என உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கிறது. திரையிசை பாடலுக்கு நிகராக தற்போது திறமை வாய்ந்த இசை கலைஞர்கள் உருவாக்கும் இன்டிபென்டன்ட் மியூசிக் வீடியோ ஆல்பத்திற்கும் கிடைத்து வருகிறது. ஜென்…

Read more

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

Spread the love

Spread the loveMillion Dollar Studios மற்றும் Neo Castle Creations இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் இனிதே வெற்றிகரமாக நிறைவு பெற்றிருக்கிறது. தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களங்களை தொடர்ந்து வழங்கி வரும் Million Dollar Studios, ‘குட்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏகமனதாக விடியல் ராஜூ தேர்வு  !

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏகமனதாக விடியல் ராஜூ தேர்வு  !

“அந்தோனி” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

“அந்தோனி” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

ஹாரர் & த்ரில்லர் படமாக உருவாகியுள்ள “99/66” திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியீடு !

ஹாரர் & த்ரில்லர் படமாக உருவாகியுள்ள “99/66” திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியீடு !