“திரௌபதி_2” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

Spread the love

நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி, ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷனுடன் இணைந்து தயாரித்த ‘திரௌபதி 2’ திரைப்படம் 14 ஆம் நூற்றாண்டின் தென்னிந்தியாவில் வேரூன்றிய காலகட்டக் கதையை திரையில் பிரம்மாண்டமாக கொண்டுவரவுள்ளது. இயக்குநர் மோகன் ஜியின் வரலாற்று ஆக்‌ஷன் கதையான ’திரௌபதி 2’ திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாகவும், ரக்ஷனா இந்துசூடன் கதாநாயகியாகவும், நட்டி நடராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். பலமொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடைபெற்றது.

நிகழ்வில் பேசிய நடிகர் YG மகேந்திரன், இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் சிறியது என்றாலும் கதை கேட்ட போதே வைப் நன்றாக இருந்தது. படத்தின் பாடல்களையும் ட்ரைலரையும் தற்பொழுது பார்க்கும் பொழுது மோகன் படத்தை அடுத்த லெவலுக்கு எடுத்து சென்றுள்ளார் என தெரிகிறது. ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். இந்தக் கதை இன்னொரு ‘பாகுபலி’. இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சரித்திர சான்றுகளோடு அற்புதமாக எடுக்கப்பட்ட படம் இது. தேசிய உணர்வோடு பாரம்பரியத்தையும் இந்த கதை சொல்லும். ராம நாமி என்ற கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். நிறைய ஆராய்ச்சி செய்து மோகன் இந்த படத்தை எடுத்திருக்கிறார் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.

மும்பை எம்.எல்.ஏ. கேப்டன் தமிழ்ச்செல்வன் சகோதரர் மோகன் பேசுகையில், என் அண்ணன் தான் இந்த படத்தை பூஜை போட்டு ஆரம்பித்து வைத்தார், அதன் பிறகு படத்திற்கு வந்த சின்ன சின்ன பிரச்சனைகளை இயக்குநர் மோகன் ஜி சமாளித்து படத்தை வெற்றிகரமாக முடித்தார். நிதின் தேசாய் ஸ்டுடியோவில் என் அண்ணனும் மோகன் ஜிக்கு பக்கபலமாக இருந்தார். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.

’வீர வல்லாள மகாராஜா’ புத்தகத்தின் எழுத்தாளர் ஆறு அண்ணல் கண்டார் பேசுகையில், என் கனவை மோகன் வாயிலாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். மோகனைப் போன்ற தன்னம்பிக்கையான ஒருவரை நான் பார்த்தது கிடையாது. அருணாச்சல புராணம் என்ற சமஸ்கிருத நூலை எள்ளப்பநாதர் தமிழ்ப்படுத்தினார். அதில் ஒன்றுதான் வல்லாள மகாராஜாவின் சரிதம். அவரது ஆட்சியில் தர்மம் மேலோங்கி இருந்தது. இருந்தாலும் தனக்கு பின்னால் நாடு என்னவாகும் என சிவ பெருமானுக்கு மனக்குறை இருந்தது. இதனால் சிவனடியாராக பூமிக்கு வல்லாள மகாராஜாவிடம் வருகிறார். சிவனடியாரின் மனக்குறையை வல்லாள மகாராஜா தீர்த்து வைக்க அவருக்கே பிள்ளையாகிறார் சிவன். இந்தக் கதையை இன்னும் விரிவாக படத்தில் நீங்கள் பார்ப்பீர்கள் என்றார்.

இயக்குநர் சரவண சுப்பையா பேசுகையில், மோகன் ஜியுடன் நான் ஏற்கனவே வேலை பார்த்திருக்கிறேன். கடுமையான உழைப்பாளி. இசையமைப்பாளர் ஜிப்ரானும் எனர்ஜிடிக்கான இசையை கொடுத்துள்ளார்.  உங்களை மிரள வைக்கும் பல காட்சிகள் படத்தில் உள்ளது. எல்லோரும் கடுமையாக இந்தப் படத்திற்காக உழைத்துள்ளனர். வாழ்த்துக்கள் என்றார்.

நடிகர் சிராக் ஜானி பேசுகையில், தமிழ் கலாச்சாரத்துடன் இந்தப் படம் தொடர்புடையது. யாருக்கும் அதிகம் தெரியாத வீர வல்லாள மகாராஜா பற்றி மோகன் படமாக எடுத்துள்ளார். தமிழ்நாடு என்பது பண்பாடு, அடையாளம், மண்ணுடைய வீரம், வரலாறு, அன்பு இதெல்லாம் உள்ளடக்கியது. இதுபோன்ற கதை மீது நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. என்னுடைய கதாபாத்திரம் மிகவும் வலிமையானது. துக்ளக் கதாபாத்திரத்தை மிகவும் சின்சியராக நடித்திருக்கிறேன். ரிச்சர்ட் சாருக்கு நன்றி. தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர். நல்ல கதைகளுக்கு ரசிகர்கள் எப்போதும் வரவேற்பு கொடுப்பீர்கள் என நம்பிக்கை உள்ளது என்றார்.

இயக்குநர் முத்தையா பேசுகையில், ’திரெளபதி2’ மோகனின் ஐந்தாவது படம். தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் இது முக்கியமான படம். பெரும் வெற்றி பெற்று அனைவருக்கும் படம் பிடித்தமானதாக வர வாழ்த்துக்கள் என்றார்.

நடிகர் வேல ராமமூர்த்தி பேசுகையில், மோகன் ஜி சினிமா துறைக்கு வந்ததில் இருந்து அவரது படங்களில் எப்போது நடிப்போம் என்ற தீ எனக்குள் இருந்தது. ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் வாய்ப்பு வந்தது. ஆனால், அது கொரோனா நேரம் என்பதால் நடிக்க முடியாமல் போனது. நான் சினிமாவுக்கு வந்து இத்தனை ஆண்டுகளில் நடித்திருக்கும் முதல் சரித்திர படம் இது. துணிச்சலாக சரித்திர வரலாற்று படத்தை மோகன் ஜி எடுத்துள்ளார். பல எதிர்ப்புகள் வந்தபோதிலும் அதை எல்லாம் தைரியமாக எதிர்கொண்டு இந்தப் படத்தை முடித்துள்ளார். தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். இந்த வருடத்தின் முக்கியமான படத்தில் சிறப்பான இசையை ஜிப்ரான் கொடுத்துள்ளார். இது ‘திரெளபதி’ பொங்கல். திருவண்ணாமலையை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்த வீர வல்லாள தேவராயரின் சரித்திர கதை இது. ‘திரெளபதி2’ மிகப்பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.

நடிகர் நட்டி நடராஜ் பேசுகையில், இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி. இந்தக் கதை மூலமாக வரலாற்றை தெரிந்து கொண்டேன். படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் கடின உழைப்பைக் கொடுத்துள்ளனர். குறைந்த நாட்களில் இந்த படத்தை முடிப்பது சாதாரண விஷயம் கிடையாது. ஜிப்ரான் இசையில் எம் கோனே பாடல் அருமை. படத்திற்காக பிரம்மாண்டமாக செலவழித்திருக்கிறார் தயாரிப்பாளர். இந்தப் படத்திற்காக ரிச்சர்ட் கொடுத்த உழைப்பு மிகப்பெரியது. படத்தின் வில்லன்கள் எல்லோரும் நேரில் பார்க்க ஹீரோ மாதிரி உள்ளார்கள். ஹீரோயின்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்றார்.

இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசுகையில், ஒரு படத்தின் இயக்குநருடன் பயணம் செய்யும் அந்த நேரம் பயனுள்ளதாக சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அது மோகன் ஜியுடன் நன்றாக செட் ஆனது. அவருக்குள் ஒரு குழந்தை உள்ளது. தெளிவும் நம்பிக்கையும் அவரிடம் நிறைய உள்ளது. இந்தப் படத்தில் எனக்கு நிறைய புது அனுபவங்கள் கிடைத்தது. எம் கோனே போன்ற ஒரு மெலோடி பாடலை ஓகே செய்ததற்கு நன்றி. ’திரெளபதி’ என்பதற்கு பின்னால் நிறைய சர்ச்சைகளும் இருந்தது. ஆனால், அதை எல்லாம் தாண்டி அவசியம் சொல்லப்பட வேண்டிய இந்த வரலாற்றை எடுக்க முன் வந்த தயாரிப்பாளருக்கு நன்றி என்றார்.

நடிகை ரக்‌ஷனா இந்துசூடன் பேசுகையில், நெருப்பில் இருந்து பிறந்தவள் திரெளபதி. அந்தப் பெயரை ‘திரெளபதி2’ படத்தில் எனக்கு கொடுத்த இயக்குநர் மோகன் சாருக்கு நன்றி. இந்த கதை 14 ஆம் நூற்றாண்டில் நடந்தது. என்னை நம்பிய மோகன் சாருக்கு நன்றி. இந்த கதாபாத்திரத்திற்குள் வருவதும் வந்த பின்பு அதை விட்டு வெளியே போவதும் எனக்கு கடினமான ஒன்றாகதான் இருந்தது. இந்த கதாபாத்திரத்திற்காக எடை கூடியுள்ளேன். இயக்குநருடைய தெளிவான திட்டமிடல் மூலம்தான் படத்தை இவ்வளவு குறைந்த நாட்களுக்குள் முடிக்க முடிந்தது. பல தடைகளை தாண்டி பொங்கலுக்கு  தமிழ் வரலாற்றை பற்றிய படமாக ‘திரெளபதி2’ திரையரங்குகளில் வரவிருக்கிறது என்றார்.

நடிகர் ரிச்சர்ட் ரிஷி பேசுகையில், இந்தப் படத்திற்கு சிறப்பான உழைப்பை நாங்கள் கொடுத்துள்ளோம். கதையை நம்பிய தயாரிப்பாளருக்கும் கடின உழைப்பு கொடுத்த மோகனுக்கும் நன்றி என்றார்.

தயாரிப்பாளர் சோலா சக்ரவர்த்தி பேசுகையில், பல வருடங்களாக கதை எடுக்கலாம் என்ற யோசனையில் இருந்தபோது சரியான கதையோடு மோகன் சார் வந்தார். 31 நாட்களில் படத்தை முடித்துள்ளார் இயக்குநர் மோகன். காலை 9 மணிக்கு ஆரம்பித்து இரவு வரை படப்பிடிப்பு நடக்கும் என்றார்.

இயக்குநர் மோகன் ஜி பேசுகையில், பீரியட் படம் இது என்பதால் முதல் படம் போலவே சின்சியராக வேலை பார்த்தேன். அதற்கு பெரும்பலமாக இருந்த தொழில்நுட்பக்குழுவினருக்கு மிகப்பெரிய நன்றி. அவர்கள் இல்லாமல் இந்த பட்ஜெட்டில் 31 நாட்களுக்குள் படம் எடுப்பது சாத்தியமே இல்லை. ரிச்சர்ட் சார் இல்லாமல் ‘திரெளபதி2’ இல்லை. இந்தப் படத்திற்காக இன்னும் ஒரு ரூபாய் சம்பளம் கூட அவர் வாங்கவில்லை. குதிரை பயிற்சி, கத்தி சண்டை என ஒரு வருடமாக இந்தப் படத்திற்காக ஒரு நாளில் 16 மணி நேரம் உழைத்துள்ளார். நான் சொன்ன பட்ஜெட்டை விட கொஞ்சம் அதிகமாய் போயிருந்தாலும் கதை மீது நம்பிக்கை வைத்து ஆதரவு கொடுத்த தயாரிப்பாளர் சோலா சக்ரவர்த்தி சாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நன்றி. படத்தின் முக்கியமான நபர் ஒளிப்பதிவாளர் சுந்தர். நான் எதிர்பார்த்ததை போலவே சிறப்பான  தரமான பணியைக் கொடுத்துள்ளார். அவருக்கு இணையான உழைப்பை கலை இயக்குநர் கொடுத்துள்ளார். இந்தப் படம் பெரிய வெற்றி பெற்றால் பலருக்கும் உந்துதலாக இருக்கும்.

25 ஹீரோயின்களை பார்த்த பிறகு ரக்‌ஷனாவை தேர்ந்தெடுத்தேன். மிகவும் தைரியமானவர். திறமையான நடிப்பை கொடுத்துள்ளார். அவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு. பரணி அண்ணனுடன் முதல் படத்திலேயே வேலை செய்ய வேண்டியது. ஐந்தாவது படத்தில்தான் அது கைகூடியுள்ளது. அவர் பேசும் வசனம் படத்தில் முக்கியமானது. சிராக் ஜானி, தினேஷ் லம்பா இரண்டு பேரும் மும்பையை சேர்ந்தவர்கள். இரண்டு பேரின் நடிப்பும் நிச்சயம் பேசப்படும். மற்ற இரண்டு ஹீரோயின்களுக்கும் தமிழ் தெரியாது என்றாலும் புரிந்து கொண்டு நடித்துள்ளனர். நட்டி அண்ணனுக்கு சிறப்பான உடல்மொழி உள்ளது. அவருடைய கரியரில் இந்த கதாபாத்திரம் நிச்சயம் மணிமகுடமாக இருக்கும். வேல ராமமூர்த்தி சாரின் நடிப்பும் குரலும் சிங்கம் கர்ஜிப்பதுபோல இருக்கும். தென்மாவட்டத்தை சார்ந்த நல்ல கதை அவரிடம் இருந்து எனக்கு வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்.

எழுத்தாளர் பத்மாவை பெண் சாண்டில்யன் என சொல்வார்கள். நிறைய புது தமிழ் வார்த்தைகளை இந்த தலைமுறைக்கு அறிமுகம் செய்திருக்கிறார். அருமையான பல கதைகள் வைத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் அவருக்கு உண்டு. அரியலூர் சிமெண்ட் தொழிற்சாலையால் மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பது பற்றிய ஒரு கதை எடுப்பதுதான் முதலில் எங்கள் திட்டம். அந்த சமயத்தில் காசி சென்றிருந்தேன். நான் சிவபக்தர். அங்கு ஒரு கோயிலுக்கு சென்றபோது அங்கிருந்த நந்தி, நம் இஸ்லாமிய மக்கள் வழிபடும் ஞானவாபி மசூதியை பார்த்தார்போல இருந்தது. அதை பற்றி விசாரித்தபோது ஒளரெங்கசீப் அங்கிருந்த கோயிலை நோக்கி மசூதி உருவாக்கிய வரலாறு தெரியவந்தது. அது தமிழ்நாட்டுடனும் கனெக்ட் ஆகிறது. அதைப்பற்றி விரிவாக படித்தவுடன் இதுதான் நான் பண்ண வேண்டிய படம் என முடிவு செய்தேன். ’சாவா’ படம் பார்த்தபிறகு என் நம்பிக்கை இன்னும் அதிகமானது. ஜிப்ரான் இந்தப் படத்திற்குள் வந்ததும் இந்தப் படம் இன்னும் பெரியதானது. எம் கோனே பாடல் இப்போது பத்மலதா மேடம் குரலில்தான் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அவருக்கு நன்றி. பல இடங்களில் அவரது இசை உணர்வுப்பூர்வமாக உள்ளது.

நம்முடன் சகோதரர்களாக வாழ்ந்து வரும் இந்திய இஸ்லாமியர்களை இந்தப் படம் எந்தவகையிலும் காயப்படுத்தவில்லை. அவர்களின் தொடக்கம் எது என்று இந்தப் படம் புரிய வைக்கும். மற்றபடி கமர்ஷியலான படம்தான் இது. வீரபாண்டிய கட்டபொம்பன், சிறை, மதரசாப்பட்டிணம் போன்ற படங்களில் பிரிட்டிஷ்காரர்களை காட்டும்போது மத, அடையாளங்கள் இல்லாமல் அவர்களை பிரிட்டிஷ்காரர்களாக மட்டுமே எப்படி ஏற்றுக்கொண்டீர்களோ அதேபோல இந்தப் படத்தை துருக்கியில் இருந்து நம் நாட்டை கைப்பற்ற வந்த அந்நியர்களாக எண்ணிதான் கதையை நான் எழுதியுள்ளேன். அவர்களின் வாழ்க்கையை மத அடையாளங்களோடு தொடர்புபடுத்தி பார்க்காதீர்கள். இந்த நாட்டை அடிமைப்படுத்த துருக்கியில் இருந்து படை எடுத்து வந்தவர்கள் பற்றிய கதை. மூன்று வில்லன்கள் படத்தில் உள்ளனர். ஐந்து மொழிகளில் இந்தப் படம் உருவாகியுள்ளது. நல்லபடியாக பொங்கலுக்கு படம் வெளியாகிறது. என்னை நம்பிய தயாரிப்பாளர்களுக்கு இதுவரை நஷ்டம் வந்ததில்லை. வீர வல்லாள மகாராஜா வரலாற்றை வெளியே கொண்டு வருவது எனக்கு பெருமை.  அனைவரையும் ‘திரெளபதி2’ திருப்திப்படுத்தும் என்றார்.

Related Posts

“வா வாத்தியார்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

Spread the love

Spread the loveஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”. இப்படம் பொங்கல் கொண்டாட்டமாக உலகமெங்கும் ஜனவரி 14 ஆம் தேதி…

Read more

சிவகார்த்திகேயனின் “பராசக்தி” படத்தின் விமர்சனம்

Spread the love

Spread the loveபராசக்தி என்றால் பரபரப்பு தான், வெளியாவதற்கு முன்பும், வெளியான பிறகும் பராசக்தி திரைப்படம் ஏற்படுத்திய பரபரப்புகள் கொஞ்சநஞ்சமல்ல, அதனால்தான் தமிழ் சினிமாவின் தனித்துவ அடையாளங்களில் ஒன்றாக விஞ்சி நிற்கிறது. கதைப்படி… இந்தி திணிப்புக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் ஒன்றினைந்து…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

“திரௌபதி_2” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“திரௌபதி_2” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“வா வாத்தியார்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“வா வாத்தியார்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

சிவகார்த்திகேயனின் “பராசக்தி” படத்தின் விமர்சனம்

சிவகார்த்திகேயனின் “பராசக்தி” படத்தின் விமர்சனம்

ஜீவாவின் நடிப்பில் உருவாகியுள்ள “தலைவர் தம்பி தலைமையில்” படத்தின் முன்னோட்டம் வெளியீடு !

ஜீவாவின் நடிப்பில் உருவாகியுள்ள “தலைவர் தம்பி தலைமையில்” படத்தின் முன்னோட்டம் வெளியீடு !

பிரபல கஞ்சா வியாபாரி கைது, குற்றவாளிகளின் கூடாரமான திமுக !

பிரபல கஞ்சா வியாபாரி கைது, குற்றவாளிகளின் கூடாரமான திமுக !