பிக் பாஸ் “விக்ரமன்” நாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் அப்டேட் !

Spread the love

கோல்டன் கேட் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில், திலகவதி கரிகாலன் தயாரித்திருக்கும் புதிய படம் மூலம் பிக் பாஸ் புகழ் விக்ரமன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். உறவுகள், நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான பல தருணங்களைக் கொண்ட இந்தப் படத்தை பிரீத்தி கரிகாலன் இயக்கியுள்ளார். குடும்ப பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் படத்தின் காட்சிகள், இசை, கதை என அனைத்தும் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.

இது பற்றி தயாரிப்பாளர் திலகவதி கரிகாலன் பேசுகையில், ஒரு படத்தை திட்டமிட்டபடி முடிக்க ஒவ்வொரு துறையும் அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டும். அந்தவகையில் படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் எங்கள் இயக்குநர் என அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி உள்ளனர். படத்தை வெளியிடுவதற்கான சரியான தருணத்தை திட்டமிட்டு வருகிறோம். பார்வையாளர்களிடம் படம் சரியாக சென்றடைய வேண்டும் என்பதற்கான மார்க்கெட்டிங், புரோமோஷன் பணிகள் போன்றவற்றையும் தெளிவாக திட்டமிடுவோம் என்றார்.

படத்தின் டைட்டில், டீசர், டிரெய்லர், ஆடியோ வெளியீடு மற்றும் உலகளாவிய திரையரங்க வெளியீடு குறித்து மிக விரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ரொமாண்டிக் எண்டர்டெயினரான இந்தப் படத்தில் விக்ரமன் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சுப்ரிதா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் ஜென்சன் திவாகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Related Posts

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

Spread the love

Spread the loveபாடகரும், இசைக் கலைஞருமான ஹர்ஷவர்தன் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார் என உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கிறது. திரையிசை பாடலுக்கு நிகராக தற்போது திறமை வாய்ந்த இசை கலைஞர்கள் உருவாக்கும் இன்டிபென்டன்ட் மியூசிக் வீடியோ ஆல்பத்திற்கும் கிடைத்து வருகிறது. ஜென்…

Read more

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

Spread the love

Spread the loveMillion Dollar Studios மற்றும் Neo Castle Creations இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் இனிதே வெற்றிகரமாக நிறைவு பெற்றிருக்கிறது. தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களங்களை தொடர்ந்து வழங்கி வரும் Million Dollar Studios, ‘குட்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏகமனதாக விடியல் ராஜூ தேர்வு  !

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏகமனதாக விடியல் ராஜூ தேர்வு  !

“அந்தோனி” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

“அந்தோனி” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

ஹாரர் & த்ரில்லர் படமாக உருவாகியுள்ள “99/66” திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியீடு !

ஹாரர் & த்ரில்லர் படமாக உருவாகியுள்ள “99/66” திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியீடு !