“பூங்கா” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

Spread the love

அழகு மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள “பூங்கா” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஜாகுவார் தங்கம்,  “லவ் டுடே” படத்தின் இயக்குனர் பாலசேகரன், நடிகர் ஜாவா சுந்தரேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு, “பூங்கா” படத்தின் இசையை, பூங்காவில் வெளியிட்டனர்.

இவ்விழாவில் இயக்குநர் கே.பி. தனசேகர் பேசுகையில், ‘பூங்கா’ என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு வாழ்வியல். பலதரப்பட்ட மக்கள் ஒன்று கூடும் சங்கமம். சொர்க்கம் ஆகாயத்தில் இருக்கிறது என்பார்கள், பூங்கா மண்மீது உள்ள சொர்க்கம் என்றார்.

ஒரு நாலு பசங்க பிரச்சனைகளோடு பூங்கா வருகிறார்கள். அங்கு அவர்களின் பிரச்சனை தீர்ந்ததா என்பதுதான் கதை. கதாநாயகனாக கௌசிக் நடிக்கிறார். கதாநாயகியாக ஆரா நடிக்கிறார். இவர்களுடன் சசி தயா, பிரணா, பாலசுப்பிரமணியம், பூங்கா ராமு, திண்டுக்கல் மணிகண்டன், நோயல் ரெஜி, மேஜிக் சரவணகுமார், ஸ்மூல் ராஜா, சாய் ஜேபி, வரன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் கே.பி.தனசேகர். ஒளிப்பதிவு ஆர்.ஹெச். அசோக், இசை அகமது விக்கி, எடிட்டிங் முகன் வேல், கலை குணசேகர், சண்டை பயிற்சி எஸ்.ஆர். ஹரி முருகன், நடனம் சுரேஷ் சித், பிஆர்ஓ கோவிந்தராஜ். தயாரிப்பு கே.பி.தனசேகர், பூங்கா ஆர்.ராமு லட்சுமி, கீதாஞ்சலி லெனினிய செல்வன் மூவரும் இணைந்து தயாரத்து உள்ளனர்.

Related Posts

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

Spread the love

Spread the loveபாடகரும், இசைக் கலைஞருமான ஹர்ஷவர்தன் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார் என உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கிறது. திரையிசை பாடலுக்கு நிகராக தற்போது திறமை வாய்ந்த இசை கலைஞர்கள் உருவாக்கும் இன்டிபென்டன்ட் மியூசிக் வீடியோ ஆல்பத்திற்கும் கிடைத்து வருகிறது. ஜென்…

Read more

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

Spread the love

Spread the loveMillion Dollar Studios மற்றும் Neo Castle Creations இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் இனிதே வெற்றிகரமாக நிறைவு பெற்றிருக்கிறது. தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களங்களை தொடர்ந்து வழங்கி வரும் Million Dollar Studios, ‘குட்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏகமனதாக விடியல் ராஜூ தேர்வு  !

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏகமனதாக விடியல் ராஜூ தேர்வு  !

“அந்தோனி” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

“அந்தோனி” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

ஹாரர் & த்ரில்லர் படமாக உருவாகியுள்ள “99/66” திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியீடு !

ஹாரர் & த்ரில்லர் படமாக உருவாகியுள்ள “99/66” திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியீடு !