“கிஸ்” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் ஈவன்ட் !

Spread the love

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், சதீஷ் இயக்கத்தில், நடிகர்கள் கவின், ப்ரீத்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கிஸ்’. செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் நடிகர் ஷக்தி பேசியதாவது, கவினுடன் படம் நடித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. வாய்ப்புக் கொடுத்த கவின், சதீஷுக்கு நன்றி. படத்தில் சோஷியல் அவேர்னஸூம் செய்து இருக்கிறேன். அது படம் பார்க்கும்போது உங்களுக்கு தெரியும். படக்குழுவினர் அனைவருடனும் பணிபுரிந்தது மகிழ்ச்சி. ஜாலியான கலர்ஃபுல்லான படமாக உருவாகி இருக்கிறது ‘கிஸ்’. உங்கள் ஆதரவு தேவை என்றார்.

நடிகை ப்ரீத்தி பேசும்போது, ‘கிஸ்’ மூவி ஜாலியாக எடுக்கப்பட்ட படம். முழுக்க என்டர்டெயின்மென்ட்டாக இருக்கும். படம் முழுக்க சிரித்துக்கொண்டே இருப்பீர்கள். சதீஷ் மாஸ்டருடைய ஃபீமேல் வெர்ஷனாக தான் என்னுடைய கேரக்டர் படத்தில் இருக்கும். ஜென் மார்ட்டின் இசை அருமையாக இருக்கும். தியேட்டரில் படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள் என்றார்.

நடிகர் மிர்ச்சி விஜய் பேசும்போது, நானும் கவினும் ஆரம்ப காலத்தில் இருந்தே நண்பர்கள். இப்போது ஒரு நண்பனாக அவருடன் சேர்ந்து பணிபுரிந்ததும் மகிழ்ச்சி. இன்னும் பல உயரங்கள் செல்ல வாழ்த்துக்கள். சதீஷ் அருமையாக படத்தை இயக்கியுள்ளார். படத்தில் பணிபுரிந்த எல்லோருமே சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள். படம் நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும் என்றார்.

நடிகர் விடிவி கணேஷ் பேசியதாவது, தூக்கத்தில் கூட எதாவது சேட்டை செய்து கொண்டே தூங்கும் ஹைப்பரான நபர்தான் சதீஷ். நடிகர் விஜய் என்றால் சதீஷ்க்கு ரொம்பவும் பிடிக்கும். நெல்சன் ஒரு டைம் சொன்னால் அதற்கு முன்பே சதீஷ் இருந்தால் விஜய் ஷூட்டிங் ஸ்பாட் வந்துவிடுவார். அவர் செய்யும் சேஷ்டை எல்லாம் பார்த்து விஜய் சிரிப்பார். செட்டே கலகலப்பாக இருக்கும். ‘பீஸ்ட்’ படத்தில் சதீஷூடன் நான் நடித்த லிஃப்ட் சீன் தெலுங்கில் பார்த்துவிட்டு நிறைய ரசிகர்கள் உருவாகி விட்டார்கள். கிஸ் என்றதும் எனக்கு கிடைத்த முதல் முத்தம் தான் நியாபகம் வருகிறது. மகாபலிபுரம் கடற்கரையில் பிரெஞ்ச் பெண் ஒருவரிடம் கேட்டு வாங்கிய முத்தம். என் வாழ்க்கையில் அதை மறக்க மாட்டேன். படக்குழுவினர் எல்லோருமே ஜாலியாக வேலை பார்த்திருக்கிறார்கள் என்றார்.

இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் பேசியதாவது, கவினுடன் மூன்றாவது படம் எனக்கு. டீமே ஜாலியாக இருந்தது. விடிவி கணேஷ், ப்ரீத்தி, தொழில்நுட்ப குழு என அனைவருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள். கவின், சதீஷூக்கு வாழ்த்துக்கள் என்றார்.

இயக்குநர் சதீஷ் பேசியதாவது, இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ராகுலுக்கு மிக்க நன்றி ! ‘கிஸ்’ என்ற டைட்டில் முதலில் மிஷ்கினிடம் தான் இருந்தது. ஆனால், இந்த கதைக்கு ‘கிஸ்’ டைட்டில் தான் பொருத்தமாக இருக்கும் என அவரிடம் கேட்டோம். உடனே சம்மதித்தார். அவருக்கு நன்றி ! கவினின் முதல் படத்திற்கு நான் கோரியோகிராப் செய்தேன். இயக்குநராக நான் அறிமுகமாகும் படத்தில் அவர் ஹீரோ. இது எனக்கு பெருமையான தருணம். ப்ரீத்தி, விடிவி என எல்லோரும் பெஸ்ட்டாக இந்தப் படத்தில் எனக்குக் கிடைத்தது மகிழ்ச்சி என்றார்.

நடிகர் கவின் பேசும்போது, உதவி இயக்குநர், ஒளிப்பதிவாளர், ஆக்ஷன் மாஸ்டர், தயாரிப்பாளர் ராகுல் என இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி. படத்தின் முதல் சிங்கிள் பாடி தந்த அனிருத்துக்கும் நன்றி. ‘என்னாலே…’ பாடல் எழுதி தந்த விக்னேஷ் சிவன், விஷ்ணு எடவன், அருண் ராஜா காமராஜா, வாய்ஸ் ஓவர் தந்த விஜய் சேதுபதி எல்லோருக்கும் நன்றி. பிஸி ஷெட்யூல்க்கு மத்தியில் இந்த நிகழ்வுக்கு நேரம் ஒதுக்கி வந்த விடிவி, ப்ரீத்திக்கு நன்றி. சதீஷ் இயக்குநராக அடுத்தடுத்த உயரங்கள் அடைய வேண்டும் என ஆசைப்படுகிறேன். ஜென் இசை இந்த படத்திற்கு பெரிய பலம். அவர் அடுத்தடுத்த உயரங்கள் செல்வார். செப்டம்பர் 19 அன்று படம் ரிலீஸ் ஆகிறது. நிச்சயம் குடும்பத்தோடு நீங்கள் பார்த்து என்ஜாய் செய்யலாம் என்றார்.

Related Posts

“திரௌபதி_2” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

Spread the love

Spread the loveநேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி, ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷனுடன் இணைந்து தயாரித்த ‘திரௌபதி 2’ திரைப்படம் 14 ஆம் நூற்றாண்டின் தென்னிந்தியாவில் வேரூன்றிய காலகட்டக் கதையை திரையில் பிரம்மாண்டமாக கொண்டுவரவுள்ளது. இயக்குநர் மோகன் ஜியின் வரலாற்று ஆக்‌ஷன் கதையான…

Read more

“வா வாத்தியார்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

Spread the love

Spread the loveஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”. இப்படம் பொங்கல் கொண்டாட்டமாக உலகமெங்கும் ஜனவரி 14 ஆம் தேதி…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

“திரௌபதி_2” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“திரௌபதி_2” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“வா வாத்தியார்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“வா வாத்தியார்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

சிவகார்த்திகேயனின் “பராசக்தி” படத்தின் விமர்சனம்

சிவகார்த்திகேயனின் “பராசக்தி” படத்தின் விமர்சனம்

ஜீவாவின் நடிப்பில் உருவாகியுள்ள “தலைவர் தம்பி தலைமையில்” படத்தின் முன்னோட்டம் வெளியீடு !

ஜீவாவின் நடிப்பில் உருவாகியுள்ள “தலைவர் தம்பி தலைமையில்” படத்தின் முன்னோட்டம் வெளியீடு !

பிரபல கஞ்சா வியாபாரி கைது, குற்றவாளிகளின் கூடாரமான திமுக !

பிரபல கஞ்சா வியாபாரி கைது, குற்றவாளிகளின் கூடாரமான திமுக !