“பிளாக்மெயில்” படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு !

Spread the love

மு. மாறன் இயக்கத்தில், JDS ஃபிலிம் ஃபேக்டரி பேனரில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ்குமார் நடித்துள்ள ‘பிளாக்மெயில்’ திரைப்படம் செப்டம்பர் 12, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

நிகழ்வில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் அமல்ராஜ் பேசுகையில், கடந்த ஜூலை 18 படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. படத்திற்கு மேலும் பக்கபலமாக தனஞ்செயன்  படத்தை விநியோகம் செய்கிறார். இந்தப் படத்தை ஜிவி பிரகாஷ் சரியான நேரத்தில் முடித்துக் கொடுத்தார். தேஜூ அஸ்வினி, ரமேஷ் திலக், வேட்டை முத்துக்குமார், பிந்து மாதவி என நடிகர்கள் அனைவரும் சரியான நேரத்தில் நல்லபடியாக படத்தை முடித்துக் கொடுத்தனர். இயக்குநர் மாறன், கேமராமேன், எடிட்டர், ஆர்ட் டைரக்டர் எனத் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. படத்தில் ‘ஒத்துக்கறியா…’ பாடலை இசையமைத்துக் கொடுத்த இமான் மற்றும் சாம்.சி.எஸ். இருவருக்கும் நன்றி என்றார்.

ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய் பேசுகையில், இந்த படத்தின் வாய்ப்பு ஜிவி பிரகாஷ்  மூலம்தான் வந்தது. தயாரிப்பாளர் ரொம்பவே வெள்ளந்தியானவர். அவருக்கு இந்தப் படம் மூலம் நல்லது நடக்க வேண்டும். கண்டிப்பாக உங்கள் ஆதரவு தேவை. படத்தின் நடிகர்கள் எல்லாரும் நண்பர்களாக பழகினார்கள். இயக்குநர் மற்றும் உடன் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி என்றார்.

கலை இயக்குநர் ராம் பேசுகையில், மாறன் சொன்ன கதை லைவ்வாக இருந்தது. யதார்த்தம் மீறாமல் செட் இருக்க வேண்டும் என அவர் எதிர்பார்த்தார். அதுபோலவே செய்திருக்கிறேன். வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் அமல்ராஜ் அவருக்கும் நன்றி என்றார்.

நடிகர் ரமேஷ் திலக், தயாரிப்பாளரின் நல்ல மனதுக்கு படம் ஜெயிக்க வேண்டும். இயக்குநர் மாறன் பழகுவதற்கு ரொம்பவே தன்மையானவர். தேஜூவுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. ஜிவி பிரகாஷூடன் முதல் முறை பணிபுரிகிறேன். நல்ல நண்பர் கிடைத்திருக்கிறார். மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு இந்தப் படம் வெளியாகிறது என்றார்.

நடிகர் முத்துக்குமார் பேசுகையில், பல சோதனைகள் கடந்து வந்த தயாரிப்பாளருக்கு நன்றி. அவருக்கு இந்தப் படம் பெரிய லாபமாக அமைய வேண்டும். நான் இதுவரை நடிக்காத கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் மாறனுக்கு நன்றி. தேஜூவுக்கு வாழ்த்துக்கள்! மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.

நடிகர் லிங்கா பேசுகையில், இந்தப் படத்தில் வேலை செய்த அனைவருக்காகவும் இந்தப் படம் வெற்றியடைய வேண்டும். தயாரிப்பாளர் மிகவும் தன்மையானவர். இயக்குநர் மாறன் ரொம்பவே சின்சியர். புது திறமையானவர்களை ஊக்குவிப்பதில் ஜிவி பிரகாஷ் அதிக ஆர்வம் காட்டுவார். தனஞ்செயனுக்கு நன்றி என்றார்.

நடிகை தேஜூ அஸ்வினி பேசுகையில், தனஞ்செயன் சாருக்கு நன்றி. இந்தப் படம் எனக்கு பெரிய ஓப்பனிங்காக இருக்கும். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. தியேட்டருக்கு வந்து கண்டிப்பாக படம் பாருங்கள் என்றார்.

இயக்குநர் சசி பேசுகையில், பிளாக்மெயில் படத்தின் கதையை ஜிவி சொன்னபோது ரொம்பவே ஆர்வமாக இருந்தது. இந்தப் படம் மாறனுக்கு மட்டுமல்ல, படக்குழுவினர் அனைவருக்குமே வெற்றியாக அமையும். அவருக்கு நடிப்பு இயல்பாகவே வருகிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள். தனஞ்செயனின் முயற்சிக்கும் நன்றி என்றார்.

இயக்குநர் சதீஷ் செல்லகுமார், தயாரிப்பு செய்துவிட்டு, அதை வழங்குவது பெரிய விஷயம். அதை செய்த தனஞ்செயனுக்கு நன்றி. மாறனின் படங்களுக்கு நான் ரசிகன். இந்தப் படமும் சிறப்பாக வந்துள்ளது என்ற நம்பிக்கை உள்ளது. ஜிவி பிரகாஷ், தேஜூ அஸ்வினி அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.

இயக்குநர் ரிதேஷ் பேசுகையில், பிளாக்மெயில் படத்தின் டிரெய்லர், பாடல்கள் எல்லாமே நம்பிக்கையாக உள்ளது. இந்த நல்ல படம் அதற்கான நல்ல வெளியீட்டு தேதியை தேர்ந்தெடுத்துள்ளது. ஜிவியிடன் இணைந்து ஒரு படம் பணிபுரிய வேண்டும். தனஞ்செயனுக்கு வாழ்த்துக்கள் என்றார்.

இயக்குநர் பிவி சங்கர் பேசுகையில், மாறனுடைய எல்லா படங்களுமே த்ரில்லிங்காக இருக்கும். இந்தப் படமும் நிச்சயம் அந்த நம்பிக்கையை காப்பாற்றும். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.

இயக்குநர் விஜய் பேசுகையில், தயாரிப்பாளர் அமல்ராஜூக்கு வாழ்த்துக்கள். தனஞ்செயன்  இந்தப் படத்தை தன்னுடைய படமாக எடுத்து செல்வார். அவருக்கும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள். நான் ‘சைவம்’ படம் எடுத்தபோது எனக்கு சம்பளம் வாங்காமல் இசையமைத்தார் ஜிவி. எனக்கும் அவருக்கும் 20 வருட நட்பு உள்ளது. எனது கரியரில் ஜிவி மிகப்பெரிய சப்போர்ட் கொடுத்திருக்கிறார். நடிகர், இசையமைப்பாளராக அவரது வளர்ச்சி பிரம்மிக்க வைக்கிறது. ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.

அம்மா கிரியேஷன்ஸ், டி. சிவா, படக்குழுவினர் அனைவருமே ஆத்மார்த்தமாக தயாரிப்பாளருக்காக பேசினார்கள். இவ்வளவு பேரின் வாழ்த்து நிச்சயம் அவருக்கு லாபகரமானதாக மாறும். தனஞ்செயனுக்கு நன்றியும் வாழ்த்துக்களும். புது இயக்குநர்களுக்கு அதிக படம் செய்து கொடுத்தவர் ஜிவி பிரகாஷ். பேரம் பேசாமல் போதும் என்ற மனதோடு இசையும் அமைத்து கொடுப்பார் படங்களும் நடிப்பார். அவர் இன்னும் பெரிதாக சாதிக்க ஆசை. ரமேஷ் திலக்கின் பெரிய ரசிகன் நான். எம்.எஸ். பாஸ்கர் போலவே ரமேஷ் திலக்கும் தேசிய விருது பெற வேண்டும். தேஜூவுக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.

தயாரிப்பாளர் விநியோகஸ்தகர் தனஞ்செயன் பேசுகையில், சில காரணங்களால் இந்தப் படம் தள்ளிப்போனது. பின்பு நான் படம் பார்த்தபோது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. கதையில் எல்லோருக்கும் முக்கியத்துவம் இருக்கும். இயக்குநர் மாறனுக்கு வாழ்த்துக்கள். படம் பார்த்து முடித்ததும் நல்ல படம் பார்த்த திருப்தி கிடைக்கும். எப்படி பிளாக்மெயில் செய்கிறார்கள், எப்படி கடத்துகிறார்கள் என பல லேயர்களில் கதை செல்லும். லிங்கா, பிந்து மாதவி, தேஜூ, ரமேஷ் திலக், முத்துக்குமார் என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். யதார்த்தமாக நமது வாழ்வில் நடக்கும் விஷயங்களை வைத்து நல்ல த்ரில்லர் படம் கொடுத்துள்ளார் மாறன். அமல்ராஜூக்கு 12ஆம் தேதி நல்ல வெற்றி கிடைக்கும். உங்களுக்கும் படம் பிடிக்கும் என நம்புகிறேன். மாறன் பொறுப்புணர்ச்சியோடு ஒரு படம் கொடுத்திருக்கிறார். சினிமாவை சுற்றி பல நெகட்டிவான விஷயங்கள் நடந்து வருகிறது. நல்ல படங்கள் வரும்போது அதை கெடுக்க வேண்டும் என பல விஷயங்கள் செய்கிறார்கள். அதை எல்லாம் தாண்டிதான் ஒரு படம் ஜெயிக்க வேண்டியதாக இருக்கிறது. அதனால், சினிமாவை மிஸ்யூஸ் செய்யாதீர்கள். நல்ல சினிமாவிற்கு எப்போதும் ஆதரவு கொடுங்கள். இது எனது தனிப்பட்ட கருத்துதான். இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷை நெருங்குவது கடினம். ஆனால், நடிகராக அவரை அணுகுவது எளிது. சம்பளமே வாங்காமல் கூட நடிப்பார். ஏனெனில், நடிப்பது அவருக்கு பிடிக்கும். தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் ஜிவி பிரகாஷ். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியாக மாற வேண்டும் என்றார்.

இயக்குநர் மு. மாறன் பேசுகையில், தயாரிப்பாளர் எனக்குக் கொடுத்த ஒத்துழைப்பு மகத்தானது. இவரைப் போல ஒரு தயாரிப்பாளர் கிடைப்பது கஷ்டம். இந்தப் படம் வெற்றியடைந்து அவர் அடுத்தடுத்து படங்கள் தயாரிக்க வேண்டும். இதுபோன்ற ஒரு இக்கட்டான சூழலில் தனஞ்செயன் மாதிரியான ஒருத்தர் கைக்கொடுத்தது பெரிய விஷயம். சரியான படங்களையும் திறமையாளர்களையும் வெளிச்சம் போட்டு காட்டுவார். அவர் எங்கள் படத்திற்கு கொடுத்த ஆதரவிற்கு நன்றி. படக்குழுவினர் அனைவரின் ஒத்துழைப்பிற்கும் நன்றி. ஜிவி பிரகாஷூடன் அடுத்தடுத்து படங்கள் செய்ய வேண்டும் என எனக்கும் ஆசை இருக்கிறது. உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை என்றார்.

நடிகர் ஜிவி பிரகாஷ் பேசுகையில், படக்குழுவினர் அனைவரும் சின்சியராக வேலை பார்த்துள்ளார்கள். நல்ல படத்தை மாறன் கொடுத்துள்ளார். படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. உங்களை கட்டிப்போடும் த்ரில்லராக படம் இருக்கும். இந்தப் படம் தயாரிப்பாளருக்கு லாபகரமானதாக அமைய வேண்டும். எங்கள் படத்திற்கு ஆதரவு கொடுத்த தனஞ்செயனுக்கும் நன்றி. ரமேஷ், முத்துக்குமார், தேஜூ, லிங்கா மற்றும் தொழில்நுட்பக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இடைவேளைக்கு முன்பு வரும் 40 நிமிடங்கள் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள் என்றார்.

Related Posts

“லோகா” படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு நிகழ்வு !

Spread the love

Spread the loveதுல்கர் சல்மானின் Wayfarer Films  தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளிவந்த “லோகா சாப்டர் 1   சந்திரா” உலகம் முழுவதும் பார்வையாளர்களின் உற்சாக வரவேற்பைப் பெற்று, 10 நாட்களில் 100 கோடி வசூலைக் குவித்து, பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது.…

Read more

“இரவின் விழிகள்” படப்பிடிப்பில் நாயகியை சில்மிஷம் செய்த இளைஞர்கள் !

Spread the love

Spread the loveமகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் மகேந்திரன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘இரவின் விழிகள்’. இப்படத்தை இயக்குநர் சிக்கல் ராஜேஷ் இயக்குகிறார்.மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க கதாநாயகியாக நீமா ரே நடித்திருக்கிறார். இவர் கன்னடத்தில் வெளியான  பிங்காரா என்கிற படத்தில்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

“பிளாக்மெயில்” படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு !

“பிளாக்மெயில்” படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு !

“லோகா” படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு நிகழ்வு !

“லோகா” படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு நிகழ்வு !

“இரவின் விழிகள்” படப்பிடிப்பில் நாயகியை சில்மிஷம் செய்த இளைஞர்கள் !

“இரவின் விழிகள்” படப்பிடிப்பில் நாயகியை சில்மிஷம் செய்த இளைஞர்கள் !

“குமார சம்பவம்” படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“குமார சம்பவம்” படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“கட்டா குஸ்தி-2” படப்பிடிப்பு பூஜையின் துவங்கியது !

“கட்டா குஸ்தி-2” படப்பிடிப்பு பூஜையின் துவங்கியது !