“குற்றம் புதிது” படத்தின் இசை வெளியீட்டு விழா !

Spread the love

ஜி.கே.ஆர் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘குற்றம் புதிது’. நோவா ஆம்ஸ்ட்ராங் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் தருண் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சேஷ்விதா கனிமொழி நடிக்கிறார். இவர்களுடன் மது சூதனராவ், நிழல்கள் ரவி, ராமச்சந்திரன் துரை, பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி ராஜகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இணைத்தயாரிப்பாளர் எஸ். கார்த்திகேயன் பேசுகையில், ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் இது.  இந்தப் படத்தை எனது மகன் தருண் விஜய் தயாரித்து கதையின் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் இந்த படத்தில் இரண்டு வருடங்கள் இணைத்தயாரிப்பாளராக நான் பணிபுரிந்து தமிழ் சினிமா பற்றி நிறைய கற்றுக் கொண்டேன். இந்த அனுபவத்தை வைத்து அடுத்தடுத்து படங்கள் தயாரிக்க உள்ளேன். அடுத்து ஒரு ஃபேமிலி எண்டர்டெயினர் ரொமாண்டிக் படத்திற்கான கதை விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அடுத்து அந்தப் படத்தின் பணிகள் தொடங்கும் என்றார்.

நடிகை சேஷ்விதா கனிமொழி பேசுகையில், நான் நடிக்க கமிட் ஆன முதல் படம் ‘குற்றம் புதிது’. எனக்கு ரொம்பவே ஸ்பெஷல், தருணுக்கு ஆல் தி பெஸ்ட். வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. ஹீரோயின் ஆனால் ஜாலியாக இருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால், பயமும் நிறைய இருக்கிறது என்றார்.

நடிகை பிரியதர்ஷினி பேசுகையில், இந்த படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. இயக்குநர் கதை சொல்லும் போதே புதிய முயற்சி என்பது புரிந்தது. தருண் எந்த தயக்கமும் இல்லாமல் தனது முழு நடிப்பு திறனையும் காட்டி நடித்துள்ளார். நிச்சயம் அவர் அடுத்த கட்டத்திற்கு செல்வார். சஸ்பென்ஸ் திரில்லர் படத்திற்கான உழைப்பை தொழில்நுட்பக் குழுவும் கொடுத்துள்ளது என்றார்.

‘கெவி’ பட இயக்குநர் தமிழ் தயாளன் பேசுகையில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையையும் நம்பி தமிழ் சினிமாவில் பல தொழிலாளர்களுடைய வாழ்க்கை உள்ளது. ஒரு படத்திற்காக 20, 30 வருடங்கள் காத்திருந்தவர்களை எனக்கு தெரியும். அப்படி இருக்கும் பொழுது தமிழ் சினிமாவில் ஒரு சிலர் விமர்சித்தால் மட்டும்தான் அந்த படம் கவனிக்கப்படும் என்ற பிம்பம் கட்டமைத்திருப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. பார்வையாளர்கள் நீங்கள் வந்து படம் பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். உங்களை நம்பி நாங்கள் வாழ்கிறோம் என்றார்.

தயாரிப்பாளர் கணேஷ் பேசுகையில், எத்தனை படங்கள் நடித்தாலும் அதனை முதல் படமாக நினைத்து வேலை செய்தால் மட்டுமே அடுத்தடுத்த உயரத்திற்கு போக முடியும். சமீபத்தில் நிறைய சின்ன படங்கள் விமர்சன ரீதியாக வெற்றியடைந்து இருக்கிறது. அதுபோல இந்த படமும் பேசப்படும் என்றார்.

நடிகர், தயாரிப்பாளர் தேனப்பன் பேசுகையில், படத்தின் டிரெய்லர் பார்க்கும் போதே படக்குழுவின் உழைப்பு தெரிகிறது. தமிழ் சினிமாவில் ஒரு வருடத்திற்கு 200க்கும் மேற்பட்ட படங்கள் வந்தால் அதில் ரஜினி, கமல், ஷங்கர் என பெரிய நட்சத்திரங்களின் படமும் வருகிறது. மீதம் வரும் 200 படங்களில் வெறும் பத்து படங்கள் தான் வெற்றி பெறுகிறது. அதனால் நல்ல படங்குக்கு  ஆதரவு கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன் என்றார்.

தயாரிப்பாளர், நடிகர் தருண் விஜய் பேசுகையில், சினிமா துறையில் இதுதான் என்னுடைய முதல் படம். என்னுடைய அம்மா, அப்பா ஆதரவு இல்லாமல் நான் ஹீரோவாக முடியாது. அவர்களுக்கு நன்றி, இயக்குநர் நோவா ஆம்ஸ்ட்ராங் என்னுடைய முதல் படத்திலேயே வித்தியாசமான கதாபாத்திரம் கொடுத்துள்ளார். பொறுமையாக தொடங்கும் படம் போகப்போக ஆடியன்ஸை சீட்டின் நுனியில் அமர வைக்கும். கதிரேசன் என்ற ஃபுட் டெலிவரி பையனாக நடித்திருக்கிறேன். உடன் நடித்தவர்கள் எல்லோரும் அனுபவசாலிகள் என்பதால் கொஞ்சம் பதட்டம் இருந்தது. ஆனால், எல்லோரும் ஆதரவு கொடுத்தார்கள் என்றார்.

இயக்குநர் பேரரசு பேசுகையில், வழக்கமாக தந்தை தன் மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் பொழுது கலர் கலரான காஸ்டியூம், அறிமுக பாடல் என்றுதான் அழகு பார்ப்பார். ஆனால், இப்படி ஒரு வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்திருக்கிறார் கார்த்திகேயன். திரில்லர் படத்தில் அந்த த்ரில்லை பார்வையாளர்களுக்கு கடத்துவது சாதாரண விஷயமில்லை. அது ‘குற்றம் புதிது’ படத்தில் இருக்கிறது என்று நினைக்கிறேன். இயக்குநர்கள், ஹீரோவாக மாறுவது தான் இப்பொழுது ட்ரெண்ட். அதனால், இயக்குநர் ஆம்ஸ்ட்ராங் இரண்டு படங்கள் ஹிட் படங்கள் பிறகு ஹீரோ வாய்ப்பு கிடைத்தால் அதிலும் நடித்து விடுங்கள். விமர்சனங்களை நம்பாமல் எல்லா படங்களையும் மக்கள் நீங்கள் பார்த்து ஆதரவு கொடுக்க வேண்டும் என்றார்.

இயக்குநர் நோவா ஆம்ஸ்ட்ராங் பேசுகையில், கதை சொல்ல போன முதல் நாளில் இருந்து தற்போது இந்த விழா சிறப்பாக நடப்பது வரை அதற்கு முதல் காரணம் கார்த்திகேயன் சார். தருணுக்கு மிகச் சிறப்பான எதிர்காலம் உள்ளது. கொரிலாவாக நடிக்க கடுமையான பயிற்சி எடுத்தார். நடிகர்கள் சேஷ்விதா, பிரியதர்ஷினி, நிழல்கள் ரவி, தினேஷ் என எல்லாருமே சிறப்பாக நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். அதுபோல தொழில்நுட்பக் குழுவும் சிறப்பாக பணிபுரிந்து இருக்கிறார்கள். இது திரில்லர் படமாக இருந்தாலும் நிறைய எமோஷன் உள்ளது. படம் முடிந்து வரும் பொழுது ‘குட்’டாக ஃபீல் செய்வீர்கள். என்னுடைய அண்ணன், அண்ணி, என்னுடைய மனைவி எல்லோருக்கும் நன்றி என்றார்.

உத்ரா புரொடக்சன்ஸ், ஹரி உத்ரா பேசுகையில் கேரளா, தமிழ்நாடு என எல்லா மாநிலங்களிலும் ‘குற்றம் புதிது’ ஆகஸ்ட் 29 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த வாய்ப்பு எனக்கு கொடுத்த கார்த்திகேயன் சாருக்கு நன்றி. படத்தை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்காக இரவு பகல் பாராது உழைத்திருக்கும் ஹீரோ, ஹீரோயின், இயக்குநர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.

Related Posts

“திரௌபதி_2” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

Spread the love

Spread the loveநேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி, ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷனுடன் இணைந்து தயாரித்த ‘திரௌபதி 2’ திரைப்படம் 14 ஆம் நூற்றாண்டின் தென்னிந்தியாவில் வேரூன்றிய காலகட்டக் கதையை திரையில் பிரம்மாண்டமாக கொண்டுவரவுள்ளது. இயக்குநர் மோகன் ஜியின் வரலாற்று ஆக்‌ஷன் கதையான…

Read more

“வா வாத்தியார்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

Spread the love

Spread the loveஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”. இப்படம் பொங்கல் கொண்டாட்டமாக உலகமெங்கும் ஜனவரி 14 ஆம் தேதி…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

“திரௌபதி_2” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“திரௌபதி_2” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“வா வாத்தியார்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“வா வாத்தியார்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

சிவகார்த்திகேயனின் “பராசக்தி” படத்தின் விமர்சனம்

சிவகார்த்திகேயனின் “பராசக்தி” படத்தின் விமர்சனம்

ஜீவாவின் நடிப்பில் உருவாகியுள்ள “தலைவர் தம்பி தலைமையில்” படத்தின் முன்னோட்டம் வெளியீடு !

ஜீவாவின் நடிப்பில் உருவாகியுள்ள “தலைவர் தம்பி தலைமையில்” படத்தின் முன்னோட்டம் வெளியீடு !

பிரபல கஞ்சா வியாபாரி கைது, குற்றவாளிகளின் கூடாரமான திமுக !

பிரபல கஞ்சா வியாபாரி கைது, குற்றவாளிகளின் கூடாரமான திமுக !