
ஆகஸ்ட் 17, 1942 அன்று, தெற்கு தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் ( இப்போது சிவகங்கை மாவட்டம் ) தேவகோட்டையில், சுதந்திரப் போராட்ட வீரர்களால் இரத்தக் குளியல் நடந்தது. 75 பேர் ( 14 பெண்கள் உட்பட ) கொல்லப்பட்டனர். 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் சின்ன அண்ணாமலை பங்கேற்று சிறையை உடைத்து அவரே வெளியேறினார். அந்த வருந்தத்தக்க சம்பவம், 1919 ஏப்ரல் 13 அன்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஜாலியன்வாலாபாக்கில் நடந்த படுகொலையை நமக்கு நினைவூட்டியது.
1942 ஆம் ஆண்டு நாடு தழுவிய ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’ தீவிரமாக வெடித்தது நாம் அனைவரும் அறிந்ததே. வேலு நாச்சியார் போன்ற வீர ராணிகளுக்கும், மருது சகோதரர்கள் போன்ற துணிச்சலான தலைவர்களுக்கும் பிறந்த இடமாக இருந்த தேவகோட்டை, சுதந்திரப் போராட்டத்தில் பின்தங்கியிருக்க முடியுமா ? அதே ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ( தேவர் பெருமகனார் ) வழிநடத்தி நூற்றுக்கணக்கானவர்களை ஐஎன்ஏக்கு அனுப்பியது என்பதையும் நினைவு கூர்வது பொருத்தமானது.

இந்த நாளை யாருமே நினைவு கூறவில்லை அதனால் தான் தாழ்ந்த தமிழகம் என்று சொல்கிறோம். திராவிட மாடல், அந்த மாடல், இந்த மாடல் என்றெல்லாம் சொல்கிறார்கள். 78 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இதை நினைவுக் கூறக்கூட தமிழ்நாட்டில் ஆட்கள் இல்லை என்பது தான் வேதனையான விஷயம். இந்தத் தேவகோட்டை சம்பவத்தின் நினைவாக அங்கே ஒரு வளைவு கட்டப்பட்டுள்ளது. குறைந்த பட்சம், மாவட்ட ஆட்சித் தலைவராவது அங்கே சென்று மரியாதை செலுத்தி இருக்கலாம். என்னவென்று தெரியவில்லை…
கே.எஸ். ராதாகிருஷ்ணன்.