மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி கிஷோர், ரோஷினி, ஜார்ஜ் மரியம் உள்ளிட்டோர் நடிப்பில், கார்த்திகேயன் மணி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “மெட்ராஸ் மேட்னி”.
கதைப்படி.. ஆட்டோ ஓட்டுநரான காளி வெங்கட் மனைவி மற்றும் மகள், மகனுடன் அன்றாட கிடைக்கும் வருமானத்தை வைத்து சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். தான் பட்ட கஷ்டங்களை தனது பிள்ளைகள் படக்கூடாது என நன்றாக படிக்க வைக்கிறார். தனது மகள் வேலைக்குப் போனதும், குடும்ப சுமையை பிள்ளை தலையில் சுமத்திவிட்டோமே என, மனம் வருந்தி மகளின் திருமணத்திற்கு ஏதாவது பணம் சேர்க்க வேண்டும் என கார் ஓட்ட முயற்சிக்கிறார்.

மகள் தேர்வு செய்த பையனை வேண்டாம் என உதறிய வருத்தத்தில், வேறு ஒருவரை தேர்வு செய்து மகளை பார்க்கச் சொல்கிறார். பையனின் குடும்பத்தினர் மகளின் மனம் வருந்தும் படியாக சில தகவல்களை கேட்கின்றனர்.

அதன்பிறகு என்ன ஆனது என்பது மீதிக்கதை…
அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை கண்முன்னே நிறுத்திய இயக்குநர், படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம். வந்த காட்சிகளே மீண்டும் மீண்டும் வருவதால் எப்போது படம் முடியும் என்கிற மனநிலை உருவாகிறது.

காளி வெங்கட் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்றிருக்கிறார். அதேபோல் அவரது மனைவியாக நடித்துள்ள ஷெல்லி கிஷோர் சிறப்பாக நடித்திருக்கிறார். மகள் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ரோஷினி, மகனாக நடித்துள்ள இருவருமே அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.





