எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட காவலர்

Spread the love

மதுரை விமான நிலையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஈச்சனேறி பகுதியில் பாதி எரிந்த நிலையில், அடையாளம் தெரியாத இளைஞரின் சடலம் கிடந்துள்ளது. சடலத்தை கைப்பற்றி பெருங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில், கைப்பற்றப்பட்ட அந்த சடலம் விருதுநகர் மாவட்டம் அழகாபுரி முக்குலத்தைச் சேர்ந்த மலையரசன் என்பதும், இவர் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் பணிபுரிந்த தனிப்படை காவலர் என்பதும் தெரியவந்துள்ளது.

முன்னதாக இவரது மனைவி பாண்டி செல்வி கடந்த 1 ஆம் தேதி மானாமதுரை பகுதியில், வாகன விபத்தில் காயம் ஏற்பட்ட நிலையில், மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த ஐந்து நாட்களுக்கு முன் உயிரிழந்துள்ளார். இதையடுத்து காவலர் மலையரசன் மனைவி மரணம் குறித்து சிந்தாமணி பகுதியில் உள்ள மருத்துவமனையில் ரசீது உள்ளிட்ட ஆவணங்களை வாங்குவதற்காக வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த மருத்துவமனையில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஈச்சனேறி பகுதியில், பாதி எரிந்த நிலையில் மலையரசன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள மலையரசனின் உடலை, உறவினர்கள் பார்த்து உறுதி செய்ததை தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளியை கைது செய்யும் முறை சடலத்தை வாங்க மாட்டோம் என உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Related Posts

58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்காத தமிழ்நாடு அரசுக்கு பாஜக கண்டனம் !

Spread the love

Spread the loveவைகை அணையில் நீர் நிரம்பியுள்ள நிலையில், உசிலம்பட்டியின் ஜீவாதாரமான 58 கிராம கால்வாய் திட்டத்திற்கு தற்போது வரை தண்ணீர் திறக்காமல் இருக்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த…

Read more

பாலை ரோட்டில் கொட்டி, அரசுக்கு எதிராக முழக்கமிட்ட பால் உற்பத்தியாளர்கள் !

Spread the love

Spread the love தமிழ்நாடு அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். மதுரை ஆவின் நிர்வாகம் லாபத்தில் 50 சதவீதம் போனஸ்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏகமனதாக விடியல் ராஜூ தேர்வு  !

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏகமனதாக விடியல் ராஜூ தேர்வு  !

“அந்தோனி” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

“அந்தோனி” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

ஹாரர் & த்ரில்லர் படமாக உருவாகியுள்ள “99/66” திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியீடு !

ஹாரர் & த்ரில்லர் படமாக உருவாகியுள்ள “99/66” திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியீடு !