மலையாள திரையுலகில் சக்தி வாய்ந்த நிறுவனமாக உருவெடுக்கும் ஶ்ரீ கோகுலம் மூவீஸ் !

Spread the love

ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில், மோகன்லால் நடிக்கும் புதிய திரைப்படம் ஒன்றை பற்றி தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமாக’ #L367′ என  பெயரிடப்பட்டுள்ளது. தனது முதல் படமான ‘மெப்படியான் ‘ படத்தின் மூலம் தேசிய விருதை வென்ற இயக்குநர் விஷ்ணு மோகன் இப்படத்திற்கு கதை எழுதி, இயக்குகிறார். பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகும் #L367 எனும் திரைப்படம் – ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனத்தின் வரலாற்றின் மிகப்பெரிய தயாரிப்புகளில் ஒன்றாக அமையவிருக்கிறது. இந்தத் திரைப்படத்தை பைஜு கோபாலன் மற்றும் வி.சி. பிரவீன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். கிருஷ்ணமூர்த்தி நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

மிகப்பெரிய அளவில் உருவாகும் இந்தப் படத்தில் முன்னணி நடிகர்கள் மற்றும் பாலிவுட் மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களும் இணைய உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. படக் குழுவினர் படப்பிடிப்பை விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ளனர். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

தற்போது ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் – சுரேஷ் கோபியின் ‘ஒட்டக்கொம்பன்’, ஜெயராம் -‌ காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் ‘ஆசைகள் ஆயிரம் ‘, ஜெயசூர்யாவின் ‘கதனார்’, நிவின் பாலி- பி. உன்னிகிருஷ்ணன் இணையும் ஒரு படம் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் ‘கில்லர் ‘ உள்ளிட்ட பல படங்களை தயாரித்து வருகிறது. இந்த வரிசையில் #L367 படமும் இணைவதன் மூலம் மலையாள திரையுலகில் ஒரு சக்தி வாய்ந்த தயாரிப்பு நிறுவனமாக ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தன்னுடைய பணியையும், பங்களிப்பையும் மேலும் வலுப்படுத்தி கொள்கிறது.

Related Posts

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

Spread the love

Spread the loveபாடகரும், இசைக் கலைஞருமான ஹர்ஷவர்தன் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார் என உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கிறது. திரையிசை பாடலுக்கு நிகராக தற்போது திறமை வாய்ந்த இசை கலைஞர்கள் உருவாக்கும் இன்டிபென்டன்ட் மியூசிக் வீடியோ ஆல்பத்திற்கும் கிடைத்து வருகிறது. ஜென்…

Read more

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

Spread the love

Spread the loveMillion Dollar Studios மற்றும் Neo Castle Creations இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் இனிதே வெற்றிகரமாக நிறைவு பெற்றிருக்கிறது. தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களங்களை தொடர்ந்து வழங்கி வரும் Million Dollar Studios, ‘குட்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏகமனதாக விடியல் ராஜூ தேர்வு  !

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏகமனதாக விடியல் ராஜூ தேர்வு  !

“அந்தோனி” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

“அந்தோனி” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

ஹாரர் & த்ரில்லர் படமாக உருவாகியுள்ள “99/66” திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியீடு !

ஹாரர் & த்ரில்லர் படமாக உருவாகியுள்ள “99/66” திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியீடு !