“தாஷமக்கான்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

Spread the love

IDAA Productions  மற்றும் Think Studios சார்பில் இயக்குநர் வினீத் வரபிரசாத் இணைந்து தயாரிக்க, ஹரீஷ் கல்யாண், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில், வட சென்னையின் பின்னணியில், ராப் இசைக் கலையை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படம் “தாஷமக்கான்”. சென்னையின் மற்றொரு முகத்தைக் காட்டும் வகையில், மாறுபட்ட களத்தில் புதுமையான அனுபவமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார். ஹரீஷ் கல்யாண் இப்படத்தில் ராப் இசைக் கலைஞராக நடித்து வருகிறார். படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இறுதி கட்ட post production பணிகள் நடந்து வருகிறது, இப்படத்தின் டைட்டில் புரமோ மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வினில் நடிகர் ஹரீஷ் கல்யாண் பேசியதாவது.., தாஷமக்கான் பற்றி நாம் கேள்விப்பற்றிருபோம், தமிழ்நாட்டிற்கு கறி சப்ளை செய்யும் இடம் தான் தாஷமக்கான். நான் இப்படத்தில் ராப்பராக நடித்துள்ளேன். தமிழில் ராப் இசைக்கு பெரிய வரலாறு உள்ளது. பலர் இதற்கு முன் ராப் இசையில் கலக்கியுள்ளனர். இண்டி மியூசிக்கிலும் பலர் கலக்கி வருகின்றனர். எனக்கு அவர்கள் எல்லோரும் தான் இன்ஸ்பிரேஷன். இந்த மாதிரி திறமையாளர்களை அடையாளப்படுத்திய இயக்குநருக்கு நன்றி. இசை இந்தப்படத்தில் மிக முக்கியம். ராப், பேட்டில் இசை, ரொமான்ஸ் என பல ஜானரில் பாடல்கள் உள்ளது. சூப்பராக இசையமைத்துள்ளார். இந்த கதாபாத்திரத்திற்கு நான் செட்டாவேனா எனச் சந்தேகம் இருந்தது. இயக்குநர் எல்லோருமே தயங்கினார்கள் என்றார், அப்போதே நாம் செய்ய வேண்டும் என முடிவு செய்துவிட்டேன். எல்லோருமே பெரும் உழைப்பைத் தந்துள்ளனர். மதன் லப்பர் பந்துவிற்கு பிறகு என்னுடன் மீண்டும் இணைந்துள்ளார். அவருக்கு நன்றி. அமீர் நடிகராக வந்து, ஒரு பாடல் கொரியோகிராஃபும் செய்துள்ளார். அவருக்கு இந்தப்படம் திருப்புமுனையாக இருக்கும். ஸ்டண்ட் மிகச்சிறப்பாக செய்து தந்த ஓம் பிரகாஷ் மாஸ்டர், தினேஷ் சுப்பராயன் மாஸ்டர் இருவருக்கும் நன்றி. சுனில், சத்யராஜ் இருவரும் முக்கியமான ரோல் செய்துள்ளனர். ஃப்ரீத்தி நன்றாக நடித்துள்ளார். இந்தப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் புது அனுபவம் தரும் என்றார்.

இயக்குநர் வினீத் வரபிரசாத் பேசியதாவது., எனது முதல் படத்தில் எனக்கு இந்த மேடை கிடைக்கவில்லை, ஏன் என்பதை ஆராய்வதை விட்டுவிட்டு, நமக்கான மேடையை நாமே உருவாக்கலாம் என ஆரம்பித்தது தான் இந்தப்படம். இந்தப்படத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நடிகர்கள் அறிமுகமாகியிருக்கிறார்கள். 8 க்கும் மேற்பட்ட ராப் கலைஞர்கள் அடையாளப்பட்டுள்ளார்கள். ஹரீஷ் இப்படத்தில் ராப்பராக நடித்துள்ளார். நிறைய பேர் தயங்கிய ரோல் இது. அவர் வந்ததே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. இசை சம்பந்தமான படம், நிறைய விவாதித்து, அலைந்து தேடி, இப்படத்தில் ராப் இசையைக் கொண்டுவந்துள்ளோம். எனக்குத் தெரிந்த சென்னையை, அதன் வாழ்க்கையை இப்படத்தில் கொண்டுவந்துள்ளோம். இப்படத்தில் உழைத்த அனைத்து உதவியாளர்கள், கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. அமீர் நடித்த ரோலுக்கு முதலில் வேறு வேறு நபர்களை அறிமுகம் செய்து கொண்டிருந்தார், நம்ம படத்திற்கு இவர் வேலை பார்க்கிறாரே எனக் கடைசியில் அவரையே நடிக்க வைத்துவிட்டோம். அவர் மிகச்சிறந்த கலைஞர். அவருக்கு இந்தப்படம் முக்கியமானதாக இருக்கும். இந்தப்படம் எல்லோருக்கும் பெரிய வெற்றியைத் தரட்டும் என்றார்.

ஸ்டண்ட் இயக்குநர் ஓம் பிரகாஷ் பேசியதாவது, தாஷமக்கான் வட சென்னையின் மைய பகுதியாக இருக்கும் ஒரு ஏரிவை இயக்குநர் பலமுறை சுற்றிக்காட்டினார், க்ளைமாக்ஸ் சண்டை காட்சியில் 1000 பேர் கலந்துகொள்ளும் ஒரு ஃபைட், அதை சிங்கிள் ஷாட்டில் எடுத்தோம். சிங்கிள் ஷாட் எடுக்கும் போது நிறைய ஒத்துழைப்பு தந்து அசத்தினார் ஹரீஷ். சிங்கிள் ஷாட் அவ்வளவு பெரிய ஃபைட் சீன் எடுக்கக்   காரணம் இயக்குநர் வினீத் தான் என்றார்.

எடிட்டர் மதன் பேசியதாவது..,2019 வரை வெறும் டிரெய்லர்கள் தான் செய்து கொண்டிருந்தேன். நண்பர் ரஞ்சித் மூலம் வினீத் அறிமுகமானார். அவரை சந்தித்த 10 நிமிடத்தில் லிஃப்ட் பட வாய்ப்பை தந்தார். அவர் தந்த வாய்ப்பு தான் தமிழ் சினிமாவில் எனக்கு வாழ்க்கை தந்தது. இப்படத்தில் நிறைய சர்ப்ரைஸ் இருக்கிறது. மிகக்கடினமாக உழைத்துள்ளார். ஹரீஷ் உடன் லப்பர் பந்து படத்திற்குப் பிறகு இணைந்துள்ளேன். இப்படத்திற்காக முழுதாக உடலை மாற்றியுள்ளார். இந்தப்படம் அவருக்கு மிகப்பெரும் திருப்புமுனையாக இருக்கும். ஹீரோயினும் நன்றாகச் செய்துள்ளார். எல்லோருமே மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார்கள் என்றார்.

இசையமைப்பாளர் பிரிட்டோ மைக்கேல் பேசியதாவது.., ஹரீஷ் வந்தபிறகு தான் இந்தப்படம் மாறியது. அண்ணாநகரில் இளைஞர்கள் ராப் செய்து கொண்டிருந்ததை வீடியோ எடுத்து வந்து இது போல செய்யலாம் என்றார். அந்த ராப் கலைஞர்களுடன் வேலை பார்த்தது எனக்கு புது அனுபவமாக இருந்தது. அமீர் இப்படத்தில் சிறப்பாகச் செய்துள்ளார். எல்லா காட்சியிலும் நிறையக் கூட்டம் இருக்கும். இவ்வளவு பேரை வைத்து எடுப்பது எவ்வளவு கஷ்டம் எனத் தோன்றும். படத்தில் நிறைய ஆச்சரியங்கள் இருக்கிறத என்றார்.

நடன இயக்குநர் அமீர் பேசியதாவது.., இந்தப்படத்தில் வேறொருவரை அறிமுகம் செய்யத் தான் இயக்குநரைச் சந்தித்தேன், அவர் என்னை நம்பி வாய்ப்பு தந்தார். அவர் கொடுத்த பவுண்ட் படித்த பிறகு, இதைவிட ஒரு பெரிய வாய்ப்பு கிடைக்காது எனத் தோன்றியது. எனக்கு கோரியோகிராஃபர் ஆக ஆசை, ராஜுசுந்தரம் மாஸ்டர் பாபா பாஸ்கர் மாஸ்டர் பெயருக்கு அடுத்து, அமீர் என்ற பெயர் இருப்பது எனக்குப் பெருமை. ஹரீஷ் கல்யாணுடன் நடித்துள்ளேன், நடன இயக்கமும் செய்துள்ளேன் என்பது மிகப்பெரிய மகிழ்ச்சி என்றார்.

Related Posts

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

Spread the love

Spread the loveபாடகரும், இசைக் கலைஞருமான ஹர்ஷவர்தன் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார் என உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கிறது. திரையிசை பாடலுக்கு நிகராக தற்போது திறமை வாய்ந்த இசை கலைஞர்கள் உருவாக்கும் இன்டிபென்டன்ட் மியூசிக் வீடியோ ஆல்பத்திற்கும் கிடைத்து வருகிறது. ஜென்…

Read more

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

Spread the love

Spread the loveMillion Dollar Studios மற்றும் Neo Castle Creations இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் இனிதே வெற்றிகரமாக நிறைவு பெற்றிருக்கிறது. தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களங்களை தொடர்ந்து வழங்கி வரும் Million Dollar Studios, ‘குட்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏகமனதாக விடியல் ராஜூ தேர்வு  !

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏகமனதாக விடியல் ராஜூ தேர்வு  !

“அந்தோனி” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

“அந்தோனி” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

ஹாரர் & த்ரில்லர் படமாக உருவாகியுள்ள “99/66” திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியீடு !

ஹாரர் & த்ரில்லர் படமாக உருவாகியுள்ள “99/66” திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியீடு !