
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டாமல் செயலற்ற நிலையில், இருப்பதை கண்டித்து சங்கத்தின் உறுப்பினர்களின் கண்டனம் மற்றும் ஆலோசனை கூட்டம் தனியார் விடுதியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசும்போது, சங்கத்தின் நிர்வாகிகள் வருடந்தோறும் கூட்ட வேண்டிய பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டாமல் இருப்பதால், பொதுக்குழு கூட்டத்தைக் கூட்ட வலியுருத்தியும், கலைஞர் நூற்றாண்டு விழா குறித்தான முறையான வரவு, செலவு கணக்கு வழக்குகளை உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். கேபிள் டிவி விவகாரத்தில் நிர்வாகிகளின் முடிவு என்னவென்பதை தெளிவாக தெரியப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இக்கூட்டத்தில் தங்க சேகர், திருமலை, ராஜேஸ்வரி, மணிமாறன், தமிழரசு, சண்முகம், ஜெயக்குமார், சிவக்குமார், வடிவேல், சுரேஷ் கண்ணன், வெற்றி வீரபாண்டி, இளமாறன், தீர்த்தமலை, ராஜ சிம்மன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.