சமூகத்தை எதிர்க்கும் தமிழ்ச்செல்வியின் சாகச பயணம் !

Spread the love

தமிழ் சின்னத்திரை உலகில், மக்களின் பேராதரவைப் பெற்ற, தமிழின் முன்னணி தொலைக்காட்சியான  விஜய் தொலைக்காட்சியில், திங்கள் முதல் வெள்ளி வரை ஒவ்வொரு நாளும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் “சின்ன மருமகள்”. மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இத்தொடர் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

பொதுவாகவே தமிழில் நெடுந்தொடருக்கு,  தமிழக பெண்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது. குடும்ப கதைகள், குடும்பத்தில் சிக்கி உழலும் பெண்களின் வலிகளைச் சொல்லும் கதைகளுக்கு, நம் தமிழ்ப்பெண்களிடம் தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில் மருத்துவராகும் கனவோடு திருமண வாழ்க்கையில் உழலும், தமிழ்செல்வியின் கதையை சொல்லும், “சின்ன மருமகள்” தொடர், மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.

இத்தொடரின் கதை,  இப்போது உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. மருத்துவருக்குப் படிக்க வேண்டும் என்ற கனவில் இருக்கும் தமிழ்ச்செல்வி, திருமணமான நிலையில், மாமியார் வீட்டின் சிக்கல்களால், தான் கர்ப்பமாக இருப்பதாகப் பொய் சொல்கிறாள். அந்த உண்மை தெரியவர, அவள் தந்தை வீட்டுக்கு விரட்டப்படுகிறாள். ஆனால் தந்தையும் கடன் வாங்கி குடித்துவிட்டுத் திரிய, தந்தை வீட்டை உதறுகிறாள். அவள் உண்மையிலேயே கர்ப்பம் என்பது தெரிய வர, அதை நம்ப மறுக்கும் கணவனையும் உதறி, நான் தனியாக என் கனவை அடைவேன் எனச் சவால் விட்டுக் கிளம்புகிறாள்.

தனியாகக் கணவனையும், தந்தையையும் எதிர்த்து வெளியே வரும் தமிழ்ச்செல்வி எப்படி வாழ்க்கையை எதிர்கொள்வாள் ? தடைகளை மீறி அவள் ஜெயிப்பாளா ?,  அவள் மருத்துவகனவு என்னவாகும் ? என, இந்தத் தொடர் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தொடரின் புதிய எபிஸோடுகளை, விஜய் டிவி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் கண்டு ரசிக்கலாம்

Related Posts

“திரௌபதி_2” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

Spread the love

Spread the loveநேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி, ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷனுடன் இணைந்து தயாரித்த ‘திரௌபதி 2’ திரைப்படம் 14 ஆம் நூற்றாண்டின் தென்னிந்தியாவில் வேரூன்றிய காலகட்டக் கதையை திரையில் பிரம்மாண்டமாக கொண்டுவரவுள்ளது. இயக்குநர் மோகன் ஜியின் வரலாற்று ஆக்‌ஷன் கதையான…

Read more

“வா வாத்தியார்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

Spread the love

Spread the loveஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”. இப்படம் பொங்கல் கொண்டாட்டமாக உலகமெங்கும் ஜனவரி 14 ஆம் தேதி…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

“திரௌபதி_2” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“திரௌபதி_2” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“வா வாத்தியார்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“வா வாத்தியார்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

சிவகார்த்திகேயனின் “பராசக்தி” படத்தின் விமர்சனம்

சிவகார்த்திகேயனின் “பராசக்தி” படத்தின் விமர்சனம்

ஜீவாவின் நடிப்பில் உருவாகியுள்ள “தலைவர் தம்பி தலைமையில்” படத்தின் முன்னோட்டம் வெளியீடு !

ஜீவாவின் நடிப்பில் உருவாகியுள்ள “தலைவர் தம்பி தலைமையில்” படத்தின் முன்னோட்டம் வெளியீடு !

பிரபல கஞ்சா வியாபாரி கைது, குற்றவாளிகளின் கூடாரமான திமுக !

பிரபல கஞ்சா வியாபாரி கைது, குற்றவாளிகளின் கூடாரமான திமுக !