“சாரி” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

Spread the love

ஆர்ஜிவி ஆர்வி புரொடக்ஷன்ஸ் எல்எல்பி பேனரின் கீழ் ரவிசங்கர் வர்மா தயாரிப்பில் இயக்குநர் ராம் கோபால் வர்மா திரைக்கதையில் கிரி கிருஷ்ணா கமல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சாரி’. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஏப்ரல் 4, 2025 அன்று ஒரே நேரத்தில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்  நடைபெற்றது.

நடிகை ஆராத்யா தேவி பேசுகையில், நான் கேரளா பொண்ணு. ‘சாரி’ படத்தின் டிரெய்லர், பாடல்கள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். ‘கேர்ள் நெக்ஸ்ட் டோர்’ கதாபாத்திரத்தில்தான் இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். சோஷியல் மீடியாவின் நெகட்டிவ் மற்றும் இருட்டு பக்கங்களை இந்தப் படம் பேசுகிறது. நிச்சயம் பெண்கள் இதை தங்களுடன் தொடர்பு படுத்திக் கொள்ள முடியும். ஆராத்யா என்ற கதாபாத்திரத்தில் எனக்கு நடிக்க வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் ராமுக்கு நன்றி என்றார்.

நடிகர் சத்யா யாது பேசுகையில், நான் உத்ரபிரதசேத்தை சேர்ந்தவன். ‘சாரி’ படம்தான் எனக்கு அறிமுகப் படம். இதற்கு முன்பு சில சீரியல்களில் நடித்திருக்கிறேன். ‘சாரி’ திரைப்படம் ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர். சோஷியல் மீடியா ஸ்டாக்கிங் பற்றி படம் பேசுகிறது. பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் இந்தப் படத்தை தங்களுடன் தொடர்பு படுத்திக் கொள்ளலாம் என்றார்.

தயாரிப்பாளர் ரவி ஷங்கர் வர்மா பேசுகையில், ராம் கோபால் வர்மா சாருடன் எனக்கு இது முதல் படம். நல்ல படங்களை உருவாக்குவதே எங்கள் நோக்கம் என்றார்.

கேரள விநியோகஸ்தர் ஷானு பேசுகையில், உலகம் முழுவதும் இந்தப் படம் ஏப்ரல் 4 அன்று வெளியாகிறது. இப்போது சோஷியல் மீடியாவில் என்ன நடக்கிறது என்பதை அப்படியே இந்தப் படத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். படம் பார்த்துவிட்டு ஜாபர் ஸ்டுடியோஸ் வினோத் அவர்களை படம் பார்க்க அழைத்தேன். படம் பிடித்தால் மட்டுமே தமிழ்நாட்டில் விநியோகிக்க கேட்டுக் கொண்டோம். 100 செண்ட்ருக்கும் மேலாக தமிழகத்தில் நானே ரிலீஸ் செய்கிறேன் என சொன்னார். படத்தை புரமோட் செய்யுங்கள் என்றார்.

தமிழ்நாடு விநியோகஸ்தர் வினோத் பேசுகையில், இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் ரசிகன் நான். ‘சாரி’ படம் பார்த்துவிட்டு மிகவும் பிடித்திருந்தது. தமிழகத்தில் படத்தை நானே ரிலீஸ் செய்ய ஒத்துக் கொண்டேன். விநியோகஸ்தராக இது என்னுடைய முதல் படம். உங்கள் ஆதரவு தேவை என்றார்.

இயக்குநர் ராம் கோபால் வர்மா பேசுகையில், ஒவ்வொரு படத்திற்கு ஒரு மையக்கரு உள்ளது. ‘சாரி’ படத்தின் கரு சோஷியல் மீடியாவின் தாக்கம் உறவுகளில் எப்படி இருக்கிறது என்பதுதான். சில நேரங்களில் கெட்ட விஷயங்கள் நடந்து அது உறவில் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தலாம். ஆராத்யா கதாபாத்திரம் போல பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். அதைத்தான் ‘சாரி’ திரைப்படம் பேசுகிறது என்றார்.

Related Posts

“தேசிங்குராஜா_2” விமர்சனம்

Spread the love

Spread the loveஇன்பினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி ரவிச்சந்திரன் தயாரிப்பில், விமல், ஜனா, பூஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா, ஜுஹி, ரவி மரியா, சிங்கம்புலி, லொள்ளு சபா சாமிநாதன், சாம்ஸ், வையாபுரி, மொட்டை ராஜேந்திரன், புகழ் உள்ளிட்டோர் நடிப்பில், எழில் இயக்கத்தில் வெளிவந்துள்ள…

Read more

“உருட்டு உருட்டு” படத்தின் இசை வெளியீட்டு விழா !

Spread the love

Spread the loveஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு  ஜெய்சங்கர் தயாரிப்பில்,   பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில்,  சமூக அக்கறை மிக்க களத்தில், காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் “உருட்டு உருட்டு”. நாகேஷின் பேரன்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

“தேசிங்குராஜா_2” விமர்சனம்

“தேசிங்குராஜா_2” விமர்சனம்

“உருட்டு உருட்டு” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“உருட்டு உருட்டு” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“டிரெண்டிங்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“டிரெண்டிங்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“கைமேரா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“கைமேரா” படத்தின் இசை வெளியீட்டு விழா !