“வெட்டு” படத்தின் இசை வெளியீட்டு விழா !

Spread the love

ஸ்ரீ பூவாயி அம்மன் மூவிஸ் சார்பில், சேலம் வேங்கை அய்யனார் தயாரிப்பிலும், பிரேம்நாத் இணைத் தயாரிப்பிலும் உருவாகியுள்ள படம் “வெட்டு”.

வெட்டு” படத்தின் இசை விழாவில், இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, கஸ்தூரிராஜா, அம்மா ராஜசேகர், நடிகர்கள் ராகின் ராஜ், சேலம் வேங்கை அய்யனார், பிரேம்நாத், ரவிமரியா, முத்துக்காளை, கிங்காங், விஜய் கணேஷ், கராத்தே ராஜா, காஜா செரிப், நடிகைகள் வனிதா விஜயகுமார், விஜி சந்திரசேகர், சுந்தரா டிராவல்ஸ் ராதா மற்றும் திரையுலக பிரமுகர் கலந்து கொண்டனர்.

மதுரையை சார்ந்த அம்மா ராஜசேகர், நடன இயக்குனராக தமிழில் பல படங்களுக்கு பணிபுரிந்து, தெலுங்கு திரையுலகில் 300 படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார். கோபி சந்த் நடிப்பில் ரணம் என்ற பெயரில் முதல் படம் தெலுங்கில் இயக்கி, மெகா ஹிட் கொடுத்தவர். தொடர்ந்து தனது இயக்கத்தில் 12வது படமாக தனது 17 வயது மகன் ராகின் ராஜை ஆக்ஷன் ஹீரோவாக்கி, தலா என்ற தெலுங்கு படத்தை சென்ற மாதம் வெளியிட்டார். அந்த படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, ‘வெட்டு’ என்ற பெயரில் இம்மாதம் 28ம் தேதி தமிழகமெங்கும் வெளியாக உள்ளது.

ஒரு 17 வயது பையன் செய்யும் மாபெரும் சம்பவம் தான் இப்படம். அம்மா சென்டிமென்ட், காதல், வீரம், விவேகம் என மண் சார்ந்த உண்மை சம்பவமாக ‘வெட்டு’ வெளியாகிறது!

ராகின் ராஜ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக  அங்கிதா நடிக்கிறார். இவர்களுடன் சேலம் வேங்கை அய்யனார், பிரேம்நாத், ரோகித் எஸ்தர், அவினாஷ், விஜி சந்திரசேகர், சுந்தரா டிராவல்ஸ் ராதா, இந்திரஜா ஆகியோர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, இயக்கம் அம்மா ராஜசேகர். இசை எஸ்.எஸ். தமன், பாடல் டி. ராஜேந்தர், ஒளிப்பதிவு ஷியாம் கே நாயுடு, நடனம் அம்மா ராஜசேகர், ஸ்டண்ட் சில்வா, கெவின், பிஆர்ஓ கோவிந்தராஜ். இணைத் தயாரிப்பு பிரேம்நாத், தயாரிப்பு சேலம் வேங்கை அய்யனார். இம்மாதம் 28ம் தேதி “வெட்டு” வெண் திரையில் வெளிவருகிறது!

Related Posts

“வானரன்” படத்தின் திரைவிமர்சனம்

Spread the love

Spread the loveஆரஞ்ச் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், ராஜேஷ் பத்மநாபன், சுஜாதா ராஜேஷ் தயாரிப்பில், ஶ்ரீராம் பத்மநாபன் இயக்கத்தில், பிஜேஷ் நாகேஷ், அக்ஷயா, தீபா சங்கர், நாஞ்சில் விஜயன், பேபி வர்ஷா, ஆதேஷ் பாலா, ஜூனியர் டிஆர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள…

Read more

“சொட்ட சொட்ட நனையுது” படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

Spread the love

Spread the loveஅட்லெர் எண்டர்டெயின்மெண்ட் ( Adler Entertainment ) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் S ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் “சொட்ட சொட்ட நனையுது”.…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

“வானரன்” படத்தின் திரைவிமர்சனம்

“வானரன்” படத்தின் திரைவிமர்சனம்

“சொட்ட சொட்ட நனையுது” படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

“சொட்ட சொட்ட நனையுது” படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

விசாரணைக்குச் சென்ற உதவி ஆய்வாளர் படுகொலை ! காவல்துறைக்கே இந்த நிலைமையா ?.!

விசாரணைக்குச் சென்ற உதவி ஆய்வாளர் படுகொலை ! காவல்துறைக்கே இந்த நிலைமையா ?.!

“சரண்டர்” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

“சரண்டர்” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

“ஜென்ம நட்சத்திரம்” படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா !

“ஜென்ம நட்சத்திரம்” படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா !