அரசு பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய கிராம மக்கள்

Spread the love

பரமக்குடி அருகே தோளூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு, கிராம மக்கள் கல்வி சீர் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட தோளூர் கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இப்பள்ளியில் அதிக அளவில் மாணவர்கள் எண்ணிக்கை இருந்த நிலையில், தற்போது வெகுவாக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இப்பள்ளியில் இன்று இரண்டாம் ஆண்டு ஆண்டு விழா நடைபெற்றது. மாணவர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தும் வகையிலும், பள்ளியை மேம்படுத்தும் வகையிலும் தோளூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பள்ளிக்கு தேவையான கணினி, மேஜைகள், எழுது பொருட்கள் இருக்கைகள் உள்ளிட்டவற்றை கல்வி சீராக வழங்கி உள்ளனர். கல்விச்சீர் கொண்டு வந்த கிராம மக்களுக்கு பள்ளியின் சார்பில் ஆராத்தி எடுத்து வரவேற்கப்பட்டது. ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கல்வி சீராக வழங்கி கிராம மக்கள் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
—–

Related Posts

முதல்வர் வருகைக்கு எதிரான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ரத்து ! சமாதான கூட்டத்தில் விவசாயிகள் முடிவு !

Spread the love

Spread the loveபசும்பொன் வருகை தரும் முதல்வருக்கு எதிரான விவசாயிகளின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாக சமாதான கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு அக்டோபர் 30ஆம் தேதி தமிழக முதல்வர்மு க ஸ்டாலின்…

Read more

தொடர்மழையால் களையிழந்த ஆட்டுச் சந்தை !

Spread the love

Spread the loveதீபாவளியை முன்னிட்டு பரமக்குடி வார சந்தையில் ஆடுகள் வரத்து அதிகமாக இருந்ததால் விலை அடியோடு சரிந்ததுடன் தொடர் மழை காரணமாக ஆட்டுச் சந்தை களை இழந்து காணப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வாரம்தோறும் வியாழக்கிழமை கால்நடை சந்தை நடைபெறும்.…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏகமனதாக விடியல் ராஜூ தேர்வு  !

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏகமனதாக விடியல் ராஜூ தேர்வு  !

“அந்தோனி” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

“அந்தோனி” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

ஹாரர் & த்ரில்லர் படமாக உருவாகியுள்ள “99/66” திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியீடு !

ஹாரர் & த்ரில்லர் படமாக உருவாகியுள்ள “99/66” திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியீடு !