“சுமதி வளவு” திரைப்படம் செப்டம்பர் 26 முதல் ஜீ-5 தளத்தில் வெளியீடு !

Spread the love

இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இயக்கியுள்ள மலையாள ஹாரர்–திரில்லர் படத்தில் அர்ஜுன் அசோகன், கோகுல் சுரேஷ், சைஜு குரூப், பாலு வர்கீஸ், மாளவிகா மனோஜ், ஷிவதா ஆகியோர் நடித்துள்ளனர். ZEE5-இல் வரும் செப்டம்பர் 26 முதல் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது.

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் மலையாள ஹாரர்–காமெடித் திரைப்படமான சுமதி வளவு திரைபபடம்  உலக டிஜிட்டல் பிரீமியராக வெளியிடுகிறது. இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் அர்ஜுன் அசோகன், கோகுல் சுரேஷ், சைஜு குரூப், பாலு வர்கீஸ், மாளவிகா மனோஜ் மற்றும் ஷிவதா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், நாடு முழுவதும் பார்வையாளர்கள் ரசிக்கும்படி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.

இப்படம் கேரளாவில் உள்ள ஒரு புகழ்பெற்ற வளைவை மையமாகக் கொண்டது. சுமதி வளவு எனப்படும் அந்த வளைவில், சுமதி என்ற இளம் பெண் துயரமான முறையில் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிறகு, அது பீதியூட்டும் இடமாகப் பேசப்பட்டு வருகிறது. அந்த வளைவைக் கடக்கும் ஒவ்வொருவரும் விசித்திரமான அதீத அனுபவங்களில் சிக்கிக் கொள்கிறார்கள். அந்த வளைவில் நேரிடும் அமானுஷ்ய சம்பவங்கள் பலரின் வாழ்க்கையை மாற்றி விடும் விதத்தில், புராணமும் நிஜமும், துயரமும் பயமும், கடந்தகாலமும் நிகழ்காலமும் ஒன்றோடொன்று கலந்த கதையாக இது நகர்கிறது.

இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் கூறியதாவது.., சுமதி வளவு கேரளா மக்களின் வாழ்க்கை கதைகளிலிருந்து வந்தாலும், இது நவீன பார்வையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. பயத்தைத் தாண்டி, துயர சம்பவங்கள் நினைவில் விட்டுச்செல்லும் மனித உணர்ச்சிகளையும் இப்படம் வெளிப்படுத்துகிறது. நினைவு, புராணம் மற்றும் மர்மம் ஆகியவற்றுக்கிடையிலான முரண்பாட்டை இந்தப் படம் காட்டுகிறது. ZEE5 மூலமாக உலகெங்கும் பார்வையாளர்களிடம் இப்படம் செல்லும் வாய்ப்பு கிடைத்ததில்  மகிழ்ச்சி என்றார்.

நடிகர் அர்ஜுன் அசோகன் கூறியதாவது.., இந்த படம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அமானுஷ்ய சம்பவங்களையும் உணர்ச்சிகளையும் இணைத்துக் காட்டுகிறது. பீதியூட்டும் அந்த வளைவில் சிக்கிக் கொள்கிற கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. பயம், பலவீனம், தைரியம் ஆகியவற்றை ஒரு வித்தியாசமான முறையில் ஆராய முடிந்தது. சுமதி வளைவு பல மொழிகளில் ZEE5-இல் வெளிவருவது எனக்குப் பெருமை தருகிறது என்றார்.

நடிகை மாளவிகா மனோஜ் கூறியதாவது.., சுமதி வளவு கேரளாவின் கலாச்சார வேர் கொண்டதோடு, அதில் நிறைய மர்மமும் சஸ்பென்ஸும் நிரம்பியுள்ளது. இப்படத்தில் ஒரு திறமையான நட்சத்திரக் குழுவுடன் பணிபுரிந்தது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. மர்மம், உணர்ச்சி, திகில் ஆகியவற்றை ஒருங்கே இணைக்கும் இந்தப் படம் பார்வையாளர்களை நிச்சயம் கவரும். ZEE5-இல் படம் வெளியாகும் தருணத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.

Related Posts

“பூங்கா” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

Spread the love

Spread the loveஅழகு மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள “பூங்கா” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஜாகுவார் தங்கம்,  “லவ் டுடே” படத்தின் இயக்குனர் பாலசேகரன், நடிகர் ஜாவா சுந்தரேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு,…

Read more

“வீர தமிழச்சி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

Spread the love

Spread the loveமகிழினி கலைக்கூடம் நிறுவனத்தின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சுரேஷ் பாரதி இயக்கத்தில் நடிகர்கள் சஞ்சீவ் வெங்கட், இளயா, சுஷ்மிதா சுரேஷ் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘வீர தமிழச்சி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

“பூங்கா” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

“பூங்கா” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

“வீர தமிழச்சி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“வீர தமிழச்சி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

34 ஆண்டுகளாக பொது மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

34 ஆண்டுகளாக பொது மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

இராமநாதபுரத்தில் தொகுதி அளவிலான விளையாட்டு போட்டிகள் !

இராமநாதபுரத்தில் தொகுதி அளவிலான விளையாட்டு போட்டிகள் !

“சுமதி வளவு” திரைப்படம் செப்டம்பர் 26 முதல் ஜீ-5 தளத்தில் வெளியீடு !

“சுமதி வளவு” திரைப்படம் செப்டம்பர் 26 முதல் ஜீ-5 தளத்தில் வெளியீடு !