
ஒரு நொடி’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து அதே அணியினர் ’ஜென்ம நட்சத்திரம்’ படத்திற்காக ஒன்றிணைந்துள்ளனர். ஹாரர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன். இந்தப் படத்தை மணிவர்மன் இயக்கியுள்ளார். அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வைட்லேம்ப் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிடும் இந்தப் படம் ஜூலை 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
அமோகம் ஸ்டுடியோஸ் விஜயன் பேசுகையில், எங்கள் தயாரிப்பு நிர்வாகத்தின் முதல் படம் இது. ‘ஒரு நொடி’ படத்தின் பிரிவியூ ஷோவில் இருந்துதான் இந்தப் படம் தொடங்கியது. அந்த அணி மீது எங்களுக்கு நம்பிக்கை வந்தது. அவர்களை வைத்துதான் ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் தயாரித்தோம் என்றார்.
ஒளிப்பதிவாளர் கேஜி பேசுகையில், பேய்ப்படம் என்பது ஒளிப்பதிவாளருக்கு சவாலான விஷயம். அதை நான் சரியாக செய்திருக்கிறேன் என நம்புகிறேன். பார்த்துவிட்டு சொல்லுங்கள் என்றார்.
நடிகர் அருண் கார்த்தி பேசுகையில், பேய்ப்படம் பொருத்தவரைக்கும் லொகேஷன் ரொம்பவே முக்கியம். சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் படமாக்கியுள்ளோம். உடன் நடித்த அனைவருக்கும் நன்றி. இயக்குநர் மணிவர்மன் எப்போதும் புதிதாக செய்ய வேண்டும் என்று யோசிப்பவர். அவருக்காகவே இந்தப் படம் பெரிய வெற்றி பெறும் என்றார்.

நடிகர் மைத்ரேயன் பேசுகையில், இது எனக்கு முதல் படம். இந்த நிகழ்வின் விழா நாயகன் சஞ்சய். அவரது இசை அருமையாக இருக்கும். இரவு நேரத்தில்தான் பெரும்பாலும் ஷூட் இருக்கும். ஆனால், நடிகர்கள் தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் எந்தவிதமான சோர்வும் இல்லாமல் கடினமாக உழைத்துள்ளனர். ரோமியோ பிக்சர்ஸ் படத்தை வெளியிடுவது மகிழ்ச்சி என்றார்.
கரூர் மாவட்ட அறநிலையத்துறை தலைவர் பரணி பால்ராஜ் பேசுகையில், தமன், ஈரோடு மகேஷ் எல்லாம் என்னுடைய வழிகாட்டுதல்படி வளர்ந்த பிள்ளைகள். 2025-ல் தான் தமனின் வாழ்க்கை திருப்புமுனையாக அமையும் என்றேன். என் மகளை தான் அவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளேன். படம் நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.
கேபிள் சங்கர் பேசுகையில், இந்தப் படத்தின் தொடக்கத்தில் இருந்து நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். கமர்ஷியல் ஹாரர் படம் பார்க்க வேண்டும் என விரும்புவர்கள் நிச்சயம் இந்தப் படம் பார்க்கலாம். பயம் காட்டும் பேய் இது. கமர்ஷியல் வெற்றிப் படமாக அமைய வாழ்த்துக்கள், மொத்த அணியினருமே கடினமாக உழைத்துள்ளனர் என்றார்.
நடிகர் தலைவாசல் விஜய் பேசுகையில், இந்தப் படத்தின் புரொடக்ஷன் மேனேஜர் மூலமாகதான் வாய்ப்பு வந்தது. படத்தில் சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் தவிர்க்க முடியாத முக்கிய கதாபாத்திரம். தனக்கு என்ன வேண்டும் என்பதில் இயக்குநர் மணி தெளிவாக இருப்பார். தமன், மாளவிகா கடினமாக உழைத்துள்ளனர் என்றார்.

நடிகர், தொகுப்பாளர் ஈரோடு மகேஷ் பேசுகையில், என்னுடைய நண்பர் தமன் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் இது. நம்பிக்கையோடு கதவு தட்டுபவர்களுக்குதான் வாய்ப்பு கிடைக்கும். தமன் அப்படியான நபர். ஐடியில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தவர் நடிப்பின் மீது ஆசைப்பட்டு கற்றுக்கொண்டு சினிமாவில் நுழைந்தார். உங்கள் நண்பர் ஜெயிக்க வேண்டும் என்று நீங்கள் மனதார நினைத்தால் உங்களுடைய வெற்றிக்கான நாளும் நிச்சயம் வரும். இன்றைய விழாவின் கதாநாயகன் சஞ்சய். இன்னும் பெரிய இடத்திற்கு வருவார். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்றார்.
இயக்குநர் லோகேஷ் பேசுகையில், சினிமா மீது ஆர்வம் உள்ளவர்கள் இணைந்து எடுத்த படம் இது. ஹாரர் படத்திற்கு இசைதான் பெரிய பலம். அதை சஞ்சய் சரியாகக் கொடுத்துள்ளார். டீசர், டிரைய்லர் போலவே படமும் ஆர்வமாக இருக்கும் என நம்புகிறேன். வாழ்த்துக்கள் என்றார்.
இயக்குநர் மீரான் பேசுகையில், இரவு நேரங்களில் படம் எடுப்பது சாதாரண விஷயம் கிடையாது. ஒரு ஷாட் எடுப்பதே கடினம். அந்த வகையில் இந்தப் படத்தை கடினமாக எடுத்துள்ளார்கள். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் படத்தை வெளியிடுகிறார் . நிச்சயம் படம் வெற்றி பெறும். பாண்டிச்சேரி போய் காஃபி சாப்பிடும் அளவிற்கு படக்குழுவினர் சின்சியராக உழைத்திருக்கிறார்கள் என்றார்.
இயக்குநர் அறிவழகன் பேசுகையில், என் நண்பர் கேபிள் சங்கர் இந்த படக்குழு படத்தை சிறப்பாக செய்திருப்பதாக சொன்னார். மேலும், இந்தப் படம் ஹாரர் ஜானரில் உருவாகி இருப்பதால் என்னையும் இங்கு அழைத்திருக்கிறார்கள். ‘ஜென்ம நட்சத்திரம்’ என்பது கிளாசிக் ஹாரர் ஹிட். அதே டைட்டிலில் படமும் உருவாகி இருக்கிறது. ஹார் ஜானரில் நிறைய சப் கேட்டகிரி இருக்கிறது. ஆனால், என்னைப் பொருத்தவரை எழுத்து மற்றும் அதை எப்படி திரையில் கொண்டு வருகிறோம் என்பதுதான் திரைப்படத்திற்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும். இந்தப் படத்தின் டிரெய்லர் பார்க்கும் போது ‘ஜென்ம நட்சத்திரம்’ பிராப்பர் ஹாரர் படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ரசிகர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஒரு விருந்தாக அமையும். ஹாரர் படங்களுக்கு காட்சிகள் மட்டுமே முக்கியமல்ல, அதை உருவாக்குவது மிகப்பெரிய சவால். இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர், கலை இயக்குநர் மற்றும் குழுவினர் என அனைவரின் ஒத்துழைப்பும் முயற்சியும் முக்கியம். குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்றார்.

நடிகை மால்வி மல்ஹோத்ரா பேசுகையில், “’ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் தொழில்நுட்பக் குழுதான் பெரிய பலம். அவர்கள் இந்தப் படத்தை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். தமன் திறமையான நடிகர். நிச்சயம் அவருக்கு அடுத்தடுத்த நல்ல படங்கள் கிடைக்கும். தமிழ் சினிமாவில் நல்ல கதைக்கு வரவேற்பு உண்டு. ‘ஜென்ம நட்சத்திரம்’ எங்கள் அனைவருக்கும் ஸ்பெஷலான படம். நீங்கள் எதிர்பார்க்காத பல விஷயங்கள் இருக்கும். கிளைமாக்ஸ் வரை அடுத்து என்ன என்பதை ரசிகர்கள் யூகித்து கொண்டே இருப்பார்கள். அதிர்ச்சிகரமான ஹாரர் நிகழ்வை சுற்றி கதை இருக்கும் என்றார்.
இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம் பேசுகையில், எனக்கு மீண்டும் இசையமைக்க வாய்ப்பு கொடுத்த தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி. படம் நன்றாக வந்துள்ளது. இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் எனக்கான கிரியேட்டிவ் ஸ்பேஸ் கொடுத்ததற்கு நன்றி. மொத்த படக்குழுவும் கடினமாக உழைத்துள்ளனர். படத்தில் இரண்டு பாடல்கள் உள்ளது. அதில் டூயட் பாடலை சிநேகன் எழுதியிருக்க நானும் சின்மயியும் சேர்ந்து பாடியிருக்கிறோம் என்றார்.
நடிகர் தமன் பேசுகையில், எக்ஸோர்சிஸ்ட்’, ‘ஓமன்’, ‘போல்டர்ஜிஸ்ட்’ மற்றும் பல கிளாசிக் ஹாரர் படங்கள் இப்போதும் ரசிகர்களுக்கு பிடித்தமானதாக இருக்கிறது. ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் கிட்டத்தட்ட ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும். இந்தப் படம் ஸ்பின் ஆஃப் போல அதாவது ப்ரீக்குவலாக இருக்கும். எப்படி ‘ஒரு நொடி’ படத்தின் கிளைமாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியானதாக இருந்ததோ அதுபோல இந்தப் படத்தின் கிளைமாக்ஸூம் அதிர்ச்சியானதாகவும் கணிக்க முடியாததாகவும் இருக்கும். ஒட்டுமொத்தக் குழுவும் குடும்பம் போல பழகியிருக்கிறோம். எங்களை வாழ்த்தும் ரசிகர்களுக்கு நன்றி. சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறேன் என நம்புகிறேன். ‘ஒரு நொடி’ படத்தை விட இது இன்னும் மேம்பட்டதாக இருக்கும். ’ஒரு நொடி’ படம் பார்த்த பிறகு எப்படி எங்கள் அனைவருக்கும் இந்த வாய்ப்பு வந்ததோ அதுபோலவே, இந்தப் படம் பார்த்த பிறகும் எங்கள் அனைவருக்கும் வாய்ப்பு வரும். தலைவாசல் விஜய்யுடன் எனக்கு சில நாட்கள் மட்டுமே காம்பினேஷன் சீன் இருந்தது. அறிவழகனின் ‘ஈரம்’ மற்றும் ‘சப்தம்’ படங்களின் சவுண்ட் குவாலிட்டி அற்புதமாக இருக்கும். ‘லெவன்’ பட இயக்குநர் லோகேஷூக்கும் வாழ்த்துக்கள். ஈரோடு மகேஷ் என்னைப் போலவே. என்னுடைய ஒட்டுமொத்த குழுவினருக்கும் நன்றி. ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் போலவே அடுத்த படத்திலும் ரசிகர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுப்போம். அனைவருக்கும் நன்றி. இயக்குநர் மணிவர்மன், “’ஒரு நொடி’ படம் பார்த்த பிறகு விஜயன் தான் ‘ஜென்ம நட்சத்திரம்’ படத்திற்கான வாய்ப்பு கொடுத்தார். அவர் இல்லாமல் இந்த படம் நடந்திருக்காது. தயாரிப்பாளர் சுபாஷினி இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இந்தப் படத்தை வெளியிடுவதற்கு நன்றி. பல சவாலான அனுபவங்களுடன் இந்தப் படத்தில் எங்களுக்கு கிடைத்தது. 29 இரவுகள் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறோம். பட சமயத்தின்போது எனது ஒளிப்பதிவாளர் கேஜி டைபாய்டால் பாதிக்கப்பட்டார். காலையில் மருத்துவமனை கவனிப்பில் மருந்துகள் எடுத்துக் கொண்டு இரவு படப்பிடிப்பிற்காக வந்தார். நான் நினைத்ததை திரையில் கொண்டு வரக் காரணமாக இருந்த எனது குழுவினருக்கு நன்றி என்றார்.