கவுண்டம்பாளையம் தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு !.?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி பரிவாரங்களுடன் அசுர பலத்துடன் ஆளும் கட்சியான திமுகவும், தற்போதைய எம்.எல்.ஏ மற்றும் அதிமுக கோட்டையாக களத்தில் எதிர்கட்சியான அதிமுகவும், இளைஞர்களின் கனவு நாயகனாகவும், தற்போது அரசியல் அவதாரம் எடுத்துள்ள நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க வும், சீமான் தலைமையிலான நாதகவும் கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் களம் காண்கின்றன.

அதிமுக சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ பி.ஆர்.ஜி.அருண்குமார், திமுக சார்பில் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் சார்பில் புதுமுகமாக கே.பி. சூர்யபிரகாஷ், தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கனிமொழி சந்தோஷம் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் கலாமணி ஜெகநாதன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
234 சட்டமன்ற தொகுதிகளில் இரண்டாவது பெரிய தொகுதியாக உள்ள கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் 4,65,228 வாக்காளர்கள் உள்ளனர். இதில் என்னற்ற கிராமப்புரங்களும் பேரூராட்சிகளும் உள்ள தொகுதியாகும்.

மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி

கடந்த 2011 ஆம் ஆண்டு தொகுதி சீரமைப்பின்போது உருவாக்கப்பட்ட புது தொகுதியாகும். நடைபெற்ற மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும் அதிமுகவே வென்றுள்ளது. 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் நடைபொற்ற இரண்டு சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக சார்பில் வி.சி. ஆறுக்குட்டி வெற்றி பெற்றார். தற்போது அவர் திமுகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி அருண்குமார் வெற்றி பெற்று எம.எல்.ஏ ஆனார். கடந்த மூன்று முறையும் நேரிடையாக திமுக களத்தில் இறங்கி தோல்வியுற்றது.
இந்த முறை கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அருண்குமார் அதிமுக வேட்பாளர்

கள நிலவரம் தொகுதியை பொறுத்தவரை எம்.எல்.ஏ., பி.ஆர்.ஜி. அருண்குமார் நற்பெயரையே பெற்றுள்ளார். அனைத்து பகுதிகளுக்கும் தேவையாள வளர்ச்சிப்பணிகளை சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து அளித்துள்ளார். தொகுதி மக்களின் அனைவரது இல்லத்தில் நடைபெறும் சுக துக்க நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார். அனைவரின் அன்பை பெற்றுள்ள அருண்குமார் திமுக கூட்டணி கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்வார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

சூர்ய பிரகாஷ் காங்கிரஸ் வேட்பாளர்

அடுத்தபடியாக காங்கிரஸ் வேட்பாளர் கே.பி.சூர்யபிரகாஷ் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக டஃப் கொடுத்தாலும் இவருக்கு பின்னாள் இருந்து இயக்கப்போவது செந்தில் பாலாஜி என்பது சற்றே சிந்திக்க வேண்டிய விசயம்.

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் களம் கானும் புதிய வேட்பாளர் கனிமொழி சந்தோஷ்க்கு தேர்தல் களம் புதியது. இவர் ஒரு வழக்கறிஞர் மற்றும் ஜோதிடத்த்தில் பிரபலமானவர். தேர்தலுக்கு தேவையான அடிப்படை பணிகளை கடந்த ஓராண்டாக செய்து வந்துள்ளார் என்கின்றனர் தவெக நிர்வாகிகள்.

கலாமணி ஜெகநாதன் நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சி சார்பில் கலாமணி ஜெகநாதன் கடந்த முறையும் இதே தொகுதியில் நாதக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு 17,897 வாக்குகள் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் அதிமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தாலும் அதிமுகவை எதிர்த்து களத்தில் நிற்பது காங்கிரஸ் அல்ல, செந்தில்பாலாஜி என்பதையும் நினைவில் வைத்து தேர்தல் பணிகளை கவனமாக கையாள்கிறார் என்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.

dhamaraimurasu

dhamaraimurasu

dhamaraimurasu admin

Related Posts

இளைஞர்களின் கலாச்சார அடையாளமாக மாறிய இசை நிகழ்ச்சி !

தென்னிந்திய ஹிப்-ஹாப் இசை உலகத்தை ஒன்றிணைக்கும் “வணக்கம் வணக்கம் பெங்களூர்” விழா மிகப்பெரிய வெற்றியாக நிறைவடைந்தது. ஏப்ரல் 11ஆம் தேதி பார்தியா மால் ஆஃப் பெங்களூரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மூன்று மாநிலங்களைச் சேர்ந்த 8க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஒரே மேடையில்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்கத்தவறிய செய்திகள்

“லெனின் பாண்டியன்” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

“லெனின் பாண்டியன்” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

“காலனி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“காலனி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

தொகுதி மறுசீரமைப்பு சட்டத்திருத்தம் ! கருப்புக் கொடி ஏற்றி போராட முதல்வர் அழைப்பு !

தொகுதி மறுசீரமைப்பு சட்டத்திருத்தம் ! கருப்புக் கொடி ஏற்றி போராட முதல்வர் அழைப்பு !

இளைஞர்களின் கலாச்சார அடையாளமாக மாறிய இசை நிகழ்ச்சி !

இளைஞர்களின் கலாச்சார அடையாளமாக மாறிய இசை நிகழ்ச்சி !

கண்ணதாசனின் “தாலாட்டும் பூங்காற்று” நூல் வெளியீடு மற்றும் விருது வழங்கும் விழா !

கண்ணதாசனின் “தாலாட்டும் பூங்காற்று” நூல் வெளியீடு மற்றும் விருது வழங்கும் விழா !

கவுண்டம்பாளையம் தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு !.?

கவுண்டம்பாளையம் தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு !.?

வினையும், எதிர்வினையும் பேசும் “அறுவடை” திரைப்படம் !

வினையும், எதிர்வினையும் பேசும் “அறுவடை” திரைப்படம் !

“TN 2026 தங்க நட்சத்திரம்” படத்தின் விமர்சனம்

“TN 2026 தங்க நட்சத்திரம்” படத்தின் விமர்சனம்

விஜய்க்கு எதிராக வைரம் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் நடிகர் தக்ஷன் விஜய் !

விஜய்க்கு எதிராக வைரம் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் நடிகர் தக்ஷன் விஜய் !

இயக்குனர் காந்தி கிருஷ்ணாவின் “பிரேக் பாஸ்ட்” படத்தின் டீசருக்கு அமோக வரவேற்பு !

இயக்குனர் காந்தி கிருஷ்ணாவின் “பிரேக் பாஸ்ட்” படத்தின் டீசருக்கு அமோக வரவேற்பு !