பல்லடம் அருகே நிலக்கரி சுரங்கமா ? கண்டுகொள்ளாத வருவாய்த்துறை அதிகாரிகள் !

Spread the love

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே மண் அள்ளும் குட்டையில் நிலக்கரி வெட்டி எடுக்கப்படுவதாக பொதுமக்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். பல்லடம் தாலுக்கா கே. அய்யம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில், அனுப்பட்டி செல்லும் சாலையின் இருபுறத்திலும் திடீரென பூமி உள்வாங்கியது போல் கோடிக்கணக்கான மதிப்பிலான கிராவல் மண் காணாமல் போயுள்ளது.

மேலும் குறிப்பிட்ட ஆழத்திற்கு பிறகு கருப்பு நிறத்தில் வெட்டி எடுக்கப்பட்டுள்ள பாறைத்துகள்கள் நிலக்கரி கல் போல் காட்சி அளிக்கிறது. இது வரை எந்த ஒரு இடத்திலும் சட்டவிரோதமாக மண் அள்ளப்படும்போது, கருப்பு நிறத்தில் மண் காணப்பட்டதில்லை. இந்த அதிசய நிகழ்வினை கண்டுபிடித்து விசாரணை மேற்கொள்ளவேண்டிய கிராம நிர்வாக அலுவலர் முதல் வருவாய் துறை வரையுள்ள அதிகாரிகள் உறக்கத்தை கலைத்து உண்மையை கண்டறிய வேண்டும். குளம் குட்டைகளை தூர்வாரிவநத நிலையில், தற்போது மண் வளம் மறைந்து நிலக்கரி கிடைக்க ஆரம்பித்திருக்கிறதா ? அல்லது மண் தன்மை விஷமாக மாறியுள்ளதா ? என மண் பரிசோதனை மூலம் வருவாய் துறை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

மேலும் மண் அள்ளப்பட்ட குட்டைக்கு மிக அருகிலேயே அதிக மின் அழுத்த டவர்லைன் செல்வதால் ஆபத்து ஏற்ப்படவும் வாய்ப்புள்ளது. திடீரென பல்லடத்தில் மக்கள் நடமாட்டமுள்ள சாலையின் இருபுறமும் சட்டவிரோத மண் அள்ளும் கும்பல் ரகசியமாக வெட்டப்பட்ட இடத்தை ஆய்வு செய்து மண் திருட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Posts

பொன்முடியின் ஆபாச பேச்சு ! சமூக ஆர்வலர் புகார்.. அமைச்சர் பதவியில் நீடிப்பாரா பொன்முடி !

Spread the love

Spread the loveகடந்த 06.04.2025 ஞாயிறு அன்று மாலை சென்னை அன்பகத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் தமிழ்நாடு அரசின் வனம் மற்றும் கதர் துறையின் அமைச்சர் க. பொன்முடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அமைச்சர் சைவமா? வைணவமா?…

Read more

கூலி வேலை செய்யும் விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை  நிறைவேற்ற வேண்டும். அண்ணாமலை வலியுறுத்தல் ! 

Spread the love

Spread the loveகோவை, திருப்பூர் மாவட்டங்களில், விசைத்தறிகள் மூலம், சுமார் ஏழு லட்சம் மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையும், ஜவுளி உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள், கோவை திருப்பூர் மாவட்ட ஆட்சியாளர்கள் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, விசைத்தறி…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

பொன்முடியின் ஆபாச பேச்சு ! சமூக ஆர்வலர் புகார்.. அமைச்சர் பதவியில் நீடிப்பாரா பொன்முடி !

பொன்முடியின் ஆபாச பேச்சு ! சமூக ஆர்வலர் புகார்.. அமைச்சர் பதவியில் நீடிப்பாரா பொன்முடி !

பாஜக, அதிமுக கூட்டணிக்கு வாழ்த்து தெரிவித்த துணை முதலமைச்சர் !

பாஜக, அதிமுக கூட்டணிக்கு வாழ்த்து தெரிவித்த துணை முதலமைச்சர் !

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அமித்ஷா வாழ்த்து !

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அமித்ஷா வாழ்த்து !

மாநகராட்சியின் புதிய திட்டம் ! நொந்துபோன அரசுப்பள்ளி ஆசிரியர்கள் !

மாநகராட்சியின் புதிய திட்டம் ! நொந்துபோன அரசுப்பள்ளி ஆசிரியர்கள் !

63 நாயன்மார்கள் திருவீதி உலாவில், சிவாச்சாரியார்கள் தகராறு !

63 நாயன்மார்கள் திருவீதி உலாவில், சிவாச்சாரியார்கள் தகராறு !