யார் அந்த சார் ? விவகாரத்தில்.. யாரையோ காப்பாற்ற யாருக்கோ தண்டனையா ? பல்லடத்தில் வானதி சீனிவாசன் பேட்டி

Spread the love

திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மகாராணி அகல்யா பாய் ஹோல்கரின் 300 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி பல்லடம் எம்.சி. பழனிச்சாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பாஜகாவின் தேசிய மகளிர் அணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கண்காட்சியை பார்வையிட்டு குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை துவக்கி வைத்தார்.

அதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், மகாராணி அகல்யா பாய் ஹோல்க்கரின் வாழ்க்கை வரலாறு குறித்து விரிவாக பேசினார். பின்னர் பல்வேறு வழக்குகளில் விரைந்து முடிக்க போலி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு,  வாய்ப்பிருப்பதாகவும், அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் விரைவாக செயல்பட்டதற்கு, வழக்கறிஞரான தான் வரவேற்பதாக கருத்து தெரிவித்தார்.

மேலும் கூறுகையில் மேற்படி விவகாரத்தில் யாரையோ காப்பாற்ற யாரோ ஒருவருக்கு தண்டனையா ? என்பது போன்று பல்வேறு அரசியல் தலைவர்களின் கேள்வியான யார் அந்த சார் ? என்கிற சந்தேகத்தை காவல்துறை தீர்க்கவில்லை எனவும், மேற்கூறிய சந்தேகங்களுக்கு தீர்வு ஏற்படுத்தாமல் நீதி கொடுத்து விட்டோம், தண்டனை கொடுத்து விட்டோம் என்பது ஏற்புடையதல்ல, திமுக ஆட்சியில் பட்டியல் இனத்தவர் மீது தாக்குதல் அதிகரித்திருப்பதாகவும், பெண்ணுரிமை, திராவிட மாடல் என சொல்லக்கூடிய திமுக ஆட்சியில் பெண்கள் மீதான குற்றங்கள் அதிகரித்திருப்பதாகவும் பெரியார் மண் என கூறிக்கொண்டு பட்டியல் இனத்தவரை அடக்கி ஒடுக்குவதாக திமுக மீது குற்றம்சாட்டினார்.

மேலும் பாமக வில் தற்போதைய நிலை குறித்த கேள்விக்கு, தந்தை மகன் விவகாரத்தில் அரசியல் கருத்து கூறமுடியாது என தெரிவித்தார். மேலும் மக்களை பாதிக்கின்ற கொரோனா பரவல் விஷயங்களில் அந்த பொறுப்பில் இருப்பவர்கள் அக்கறையோடு பார்த்துகொள்ளவேண்டும். பேருந்து கட்டணம், ஆட்டோ கட்டணம் பரிசீலிக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்திருப்பது குறித்த கேள்விக்கு, குறைக்கப்படும் என கூறாமல் பரிசீலிக்கப்படும் என கூறுவது என்ன அர்த்தம் என கேள்வி எழுப்பினார்.

எளியவர்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு உயர்வு என்பதை தொடர்ச்சியாக செய்து கொண்டிருப்பதாகவும் தீர்வு தான் என்ன எனவும், மின் கட்டணம், அரசு ஊழியர்கள் விவகாரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆனது ? இதெல்லாம் இன்றைய முதல்வர் எதிர்கட்சியாக இருந்தபோது கொடுத்த வாக்குறுதிகள் எனவும் நான்கு ஆண்டுகளாகியும் இது வரை நிறைவேற்றப்படாமல் பரிசீலிக்கப்படும் என இவர்கள் கூறுவதை, இனி இவர்களுக்கு ஓட்டு போடுவதா ? வேண்டாமா ? மக்கள் பரிசீலனை செய்வார்கள் என்றார்.

இந்நிகழ்சியில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்

Related Posts

தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டம் ! நயினார் நாகேந்திரன் கண்டனம் !

Spread the love

Spread the loveதமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடக்கும் தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகமே பற்றி எரிவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்.. திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி 285-ன்…

Read more

முதலமைச்சருக்கு தமிழக பாஜக வேண்டுகோள் !

Spread the love

Spread the loveதமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதாவது நமது பாரதத்தின் துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ள தமிழ் மண்ணின் மைந்தரும், மகாராஷ்டிரா ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

“பிளாக்மெயில்” படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு !

“பிளாக்மெயில்” படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு !

“லோகா” படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு நிகழ்வு !

“லோகா” படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு நிகழ்வு !

“இரவின் விழிகள்” படப்பிடிப்பில் நாயகியை சில்மிஷம் செய்த இளைஞர்கள் !

“இரவின் விழிகள்” படப்பிடிப்பில் நாயகியை சில்மிஷம் செய்த இளைஞர்கள் !

“குமார சம்பவம்” படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“குமார சம்பவம்” படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“கட்டா குஸ்தி-2” படப்பிடிப்பு பூஜையின் துவங்கியது !

“கட்டா குஸ்தி-2” படப்பிடிப்பு பூஜையின் துவங்கியது !