உற்சாகத்தில் ராமதாஸ் ! கலக்கத்தில் அன்புமணி ! என்ன நடக்கிறது பா.ம.கவில் ?.!

Spread the love

திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் நடந்த வடமண்டல மாவட்டங்களுக்கான வன்னியர் சங்க ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் 62 பேரில் 55 பேர் கலந்து கொண்டதால் ராமதாசுக்கு நெருக்கடி குறைந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பல்வேறு அணி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றறது. பாமக மாவட்ட செயலாளர் மற்றும் தலைவர்கள் கூட்டத்தை பலர் நிராகரித்த நிலையில், மகளிர் அணி நிர்வாகிகள் ஐந்து பேர் மற்றும் மாணவர் அணி நிர்வாகிகள் 100 க்கும் மேற்பட்டோர் மட்டுமே கலந்து கொண்டனர். இதனால் அன்புமணி அனைத்து நிர்வாகிகளையும் ராமதாசை சந்திக்க விடாமல் தடுத்து வருவதாகவும், கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் தைலாபுரம் தோட்டத்தில் வன்னியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என மாநில தலைவர் பு.தா.அருள்மொழி தெரிவித்திருந்தார். இந்நிலையில பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி, மாநில செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம், தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் ஆகியோர் முதலில் வந்தனர். தொடர்ந்து மாவட்ட, மாநில நிர்வாகிகள் திரளானோர் வந்துள்ளனர். பின்னர் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வன்னியர் சங்கத்தில் ஒரு மாநில தலைவர், 4 மாநில செயலாளர்கள், 62 மாவட்ட செயலாளர்கள், 62 மாவட்ட தலைவர்கள் உள்ளனர். அதேபோல் 2 துணை செயலாளர்கள், 2 துணை தலைவர்கள், ஒரு பொருளாளர் உள்ளனர். இதில் வட மண்டலத்தை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் 62 பேரில் 55 பேர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. மற்ற நிர்வாகிகள் 310 பேரில் 200 பேர் வரை கலந்து கொண்டனர். கூட்டத்தில் வன்னியர் சங்க செயல்பாடுகள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்தும் ராமதாஸ் ஆலோசனை வழங்கியுள்ளார். நிர்வாகிகளில் பலர் ராமதாசை கடவுள் என்றும், அவர் இடும் கட்டளைக்கு அடிபணிந்து நடப்பதாகவும் தெரிவித்து சென்றுள்ளனர். இந்நிலையில் முக்கியமான ஆலோசனை கூட்டமான வன்னியர் சங்க கூட்டத்தையும் அன்புமணி புறக்கணித்துள்ளது பாமகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே ராமதாஸ் பற்றி சமூக வலைதளங்களில் அரசியல் விமர்சகர் பெயரில் அவதூறாக விமர்சிக்கும் சி.என். ராமமூர்த்தியை கைது செய்ய வலியுறுத்தி, தைலாபுரத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக புதுச்சேரி மாநில இளைஞரணி செயலாளர் பாலு எச்சரித்துள்ளார்.

மிகப்பெரிய போராட்டம்
பாமக நிறுவனர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது, 1980ல் வன்னியர் சங்கம் தொடங்கப்பட்டது. பல ஆண்டுகளாக வன்னியர் சங்கம் சார்பில் வன்னிய மக்கள் பிரச்னைகளுக்காக பல்வேறு போராட்டங்கள் செய்திருக்கிறோம். வன்னியர்களுக்கு 20 விழுக்காடு இடஒதுக்கீடு பெற்று தந்துள்ளோம். மாமல்லபுரம் மாநாட்டில் கூறியதுபோல 10.5 சதவீத இடஒதுக்கீடு கொடுக்கப்படவில்லை என்று சொன்னால் மிகப்பெரிய போராட்டத்தை தமிழ்நாடு சந்திக்கும். அந்த கடுமையான போராட்டத்தை நடக்காமல் செய்ய வேண்டியது அரசின் கடமை. சங்கம் என்றால் ஒற்றுமையாக இருப்பது, ஒன்று கூடுவது, உரிமைக்காக போராடுவது. வன்னியர் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பேசுவதற்காகவும், சங்கத்தை வலுப்படுத்துவதற்காகவும் இந்த கூட்டம் நடைபெறுகிறது. வருகின்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவதற்காகவும் இந்த ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளோம். தற்போதைக்கு கட்சி பொறுப்புகளில் மாற்றம் ஏதுமில்லை. எப்போதும்போல கட்சியும், சங்கமும் செயல்பட்டு வருகிறது. 10.5 சதவீதம் இடஒதுக்கீட்டுக்கான போராட்டம் தொடர்பாக அனைவரையும் கூட்டி பேசிதான் அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

பாமக தலைவரான அன்புமணியை செயல் தலைவராக மோதலுக்குபின் ராமதாஸ் அறிவித்தார். பாமக கட்சிப் பொறுப்பில் ராமதாசுக்கு அடுத்த நிலையில் இருந்த அன்புமணிக்கு வாட்ஸ் அப் மூலம் தான் தகவல் அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகி வந்தன. வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி அளித்த பேட்டியில், அன்புமணிக்கும் வாட்ஸ்அப் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் வாட்ஸ்அப் மூலமாகதான் தகவல் அளிப்பார். பாமக கட்சிக்குள் இருக்கும் சலசலப்பு விரைவில் சீராகும். இந்த கூட்டத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. அதற்கான தேதியும் அறிவிக்க வாய்ப்புள்ளது என்றார்.

வன்னியர் சங்கத்தை தொடங்கிய பாமக நிறுவனர் ராமதாஸ், வன்னியர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டியிருந்தார். வழக்கம்போல் கட்சியின் செயல் தலைவரான அன்புமணி, பாமகவின் அனைத்து பிரிவு நிர்வாகிகளையும் தன்பக்கம் நிறுத்தியதுபோல வன்னியர் சங்கத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தீவிர முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கட்சியின் ஆணி வேராக இருக்கக் கூடிய வன்னியர் சங்கத்தையும் தன் பக்கம் இழுத்துவிட்டால் பாமகவையே முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடலாம் என அன்புமணி கருதி, பல்வேறு தடை முயற்சிகளை மேற்கொண்டதாக தெரிகிறது.

இதன் ஒருபகுதியாகவே அன்புமணி தைலாபுரம் தோட்டத்துக்கு (19ம்தேதி) வருவார் என்ற தகவலும் கசிய விடப்பட்டதாம். ஆனால் ராமதாஸ் எதிர்பார்த்தபடியே பெருவாரியான வன்னியர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றதால் அவர் உற்சாகமாக உள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அன்புமணியை தைலாபுரம் அழைத்துவந்து சுமுக பேச்சுவார்த்தைக்கான காய்களை மூத்த நிர்வாகிகள் சிலர் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி வருகின்றன.

அன்புமணி செயல் தலைவராக அறிவிக்கப்பட்டதும் கொதித்தெழுந்து சமூக வலைதளத்தில் கருத்துகளை பதிவிட்ட அக்கட்சியின் மாநில பொருளாளரான திலகபாமா, எந்தவொரு கூட்டத்திலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி அளித்த பேட்டியில், வன்னியர் சங்கம் என்பது வன்னியர்களுக்கான அமைப்பு மட்டுமல்ல, அனைத்து ஜாதியினருக்கான அமைப்பாகும். வன்னியர் சங்கம், பாமக எந்த சமுதாயத்துக்கும் எதிரான அமைப்புகள் இல்லை. வன்னியர் சங்கம் ஆரம்பித்து அதில் சாதிக்க முடியவில்லை என்று தான் பாமகவை தொடங்கினர். தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் வெள்ளை தாளில் கையெழுத்து வாங்கியதாக பரப்பப்படும் தகவல் பொய்யானது. கையெழுத்தை வாங்கி அன்புமணியை நீக்கப் போவதாக பரப்பப்படும் தகவல் வதந்தி. பாமக நிறுவனர் ராமதாசுக்குப்பின் அன்புமணிதான் கட்சியை வழிநடத்துவார் என்றார்.

Related Posts

18 ஆண்டுகள் மத்தியில் அதிகாரத்தில் இருந்த திமுக, மாநில உரிமைகளுக்காக பேசாதது ஏன் ? கனிமொழிக்கு கே.எஸ். ராதாகிருஷ்ணன் கேள்வி

Spread the love

Spread the loveதிமுக மக்களவை குழு தலைவரும், துணை பொதுச் செயலாளருமான கனிமொழி, மாநில உரிமையை பறிகொடுத்த எடப்பாடிபழனிச்சாமியை, தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கனிமொழி…

Read more

தமிழகத்தில் நிலுவையில் உள்ள பாலியல் வழக்குகளுக்கும் நீதி வேண்டும் ! பாஜக தலைவர் வலியுறுத்தல் !

Spread the love

Spread the loveஅண்ணா பல்கலைக் கழக பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ஞானசேகரனுக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தால் 30 ஆண்டுகளுக்கும் குறையாத ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருப்பதை வரவேற்றும், திமுக ஆட்சியில் எஞ்சியுள்ள பாலியல் வழக்குகளுக்கு நீதி கோரியும் தமிழக பாஜகவின் மாநிலத்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

“ரெட்ஃப்ளவர்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“ரெட்ஃப்ளவர்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“அக்யூஸ்ட்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“அக்யூஸ்ட்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

தலைவன் தலைவி படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

தலைவன் தலைவி படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“ஓஹோ எந்தன் பேபி” விமர்சனம்

“ஓஹோ எந்தன் பேபி” விமர்சனம்

“உசுரே” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

“உசுரே” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !