பழனியில் தடைசெய்யப்பட்ட லாட்டரி, போதைப்பொருள் விற்பனை காவல்துறைக்கு தெரியாமல் நடைபெறுகிறதா ?.!

Spread the love

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள், பள்ளி, கல்லூரி வளாகங்களில் போதை பொருள் விற்பனை நடைபெறுவதை சுட்டிக்காட்டி ஏற்கனவே செய்திகள் வெளியாகியும், பழனி காவல்துறையினர் இதுவரை லாட்டரி விற்பனையை தடுக்கவில்லை. இருசக்கர வாகனத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வது, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தினர் பணத்தைப் பெற்றுக்கொண்டு, லாட்டரி விற்பனை செய்ய அனுமதிக்கின்றனர். இதனை உயர் அதிகாரிகளுக்கு தெரியாத வண்ணம் மறைத்து விடுகின்றனர் என்கிற குற்றச்சாட்டும் அப்பகுதியினர் மத்தியில் உள்ளது. 

இந்நிலையில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பழனி போலீசாருக்கு ரகசியமாக தகவல் கிடைத்ததாகவும். தகவலையடுத்து பழனி உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர் மணிமாறன் தலைமையில், நகர காவல் சார்பு ஆய்வாளர் விஜயுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது பழனி ஆண்டவர் கலைக்கல்லூரி அருகே சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த அப்பர் தெருவை சேர்ந்த நாகேந்திர பிரசாத், புது நகர் மருது, தட்டாங்குளம் பீட்டர் ஜீவன், அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் ஆகியோரை அழைத்து விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால், சம்பந்தப்பட்டோரை சோதனை செய்ததில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனைக்கு செய்வதற்காக வைத்திருந்த 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளார்களாம்.

மேலும், கஞ்சா விற்பனை செய்தவர்களிடம் உள்ள இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை, போதைப்பொருள் விற்பனை பழனி நகரில் விற்பனை செய்வது நகர் காவல்நிலைய காவலர்கள் ஒரு சிலர் துணையோடு தான் நடைபெறுகிறது. உயர் அதிகாரிகள் நெருக்கடியை சமாளிப்பதற்காகவே, அவ்வப்போது இது போன்று வழக்கு பதிவு செய்து சாதிக்தது போல் காட்டிக் கொள்கிறார்கள் என்கிறார்கள்.

Related Posts

டாஸ்மாக் பாரில் பெண்களுக்கு சம உரிமை ! திராவிட மாடல் சாதனை !

Spread the love

Spread the loveதிண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கியமான நகரம் பழனி. இங்கு தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி மலை அமைந்திருப்பதால், தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த நகரம் எப்போதும் மக்கள் நெருக்கம் நிறைந்த நகரமாகவே…

Read more

தாறுமாறாக ஓடும் மணல் லாரிகள் ! பணியாளர்கள் சென்ற வேன் விபத்துக்குள்ளாகி பெண்கள் படுகாயம் !

Spread the love

Spread the loveதிண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாப்பம்பட்டியிலிருந்து ஐவர் மலை செல்லும் சாலையில் பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற வேண் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் நான்கு பெண்கள் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

“சொட்ட சொட்ட நனையுது” படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

“சொட்ட சொட்ட நனையுது” படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

விசாரணைக்குச் சென்ற உதவி ஆய்வாளர் படுகொலை ! காவல்துறைக்கே இந்த நிலைமையா ?.!

விசாரணைக்குச் சென்ற உதவி ஆய்வாளர் படுகொலை ! காவல்துறைக்கே இந்த நிலைமையா ?.!

“சரண்டர்” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

“சரண்டர்” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

“ஜென்ம நட்சத்திரம்” படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா !

“ஜென்ம நட்சத்திரம்” படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா !

“கெவி” திரைவிமர்சனம்

“கெவி” திரைவிமர்சனம்