
அரியலூர் அண்ணா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மகள் கனகவல்லி என்பவருக்கும் காரைக்குடியைச் சேர்ந்த செல்வராஜன் என்பவரின் மகன் செந்தில்குமார் வேலு என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது திருமணத்தின் போது 25 சவரன் நகை இரண்டு லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் திருமண செலவில் பாதி தொகையான 2 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பெண் வீட்டார் வரதட்சணையாக கொடுத்துள்ளனர்
இந்நிலையில் செந்தில்குமார் வேலு தனது குடும்பத்துடன் சேர்ந்து வரதட்சணை கேட்டு கனகவள்ளியை துன்புறுத்தியதோடு அவரை தாய் வீட்டில் கொண்டு வந்து விட்டுள்ளனர் இதனால் மன உளைச்சலில் இருந்த கனகவள்ளியின் தந்தை ராஜேந்திரன் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் இதை எடுத்து தனது தந்தையின் சாவுக்கு நான்தான் காரணம் என கனகவல்லி தனது உயிரிழப்புக்கு கணவனும் அவர்கள் குடும்பத்தாரும் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்

இது குறித்து அரியலூர் காவல் நிலையத்தில் கனகவள்ளியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கனகவள்ளியின் கணவர் செந்தில்குமார் வேலு அவரது அம்மா கலாவதி சகோதரர் முருகன் மற்றும் அரிகிருஷ்ண வேலு ஆகிய நான்கு பேரையும் கைது செய்து உள்ளனர் இதைத்தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது இந்நிலையில் விசாரணையில் வரதட்சனை கேட்டு துன்புறுத்தி இரண்டு பேரின் உயிரிழப்புக்கு காரணமான செந்தில்குமார் வேலு அவரது அம்மா கலாவதி சகோதரர் முருகன் மற்றும் அரிகிருஷ்ண வேலு ஆகிய நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனையும் 8 லட்சத்தி 81 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்