ராபர் படத்தின் பின்னணி இசையால் கவனம் ஈர்த்த ஜோகன் சிவனேஷ் !

ஜோகன் சிவனேஷ் தமிழ்நாட்டின் சென்னையில் இசைப்பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். இவர் 9 வயது முதலே கீபோர்டு இசைக்கப் பழகினார். பின்னர் ஏ.ஆர். ரஹ்மானின் தற்போதைய கே.எம். கன்ஸர்வேட்டரி & ‘வாப்பா’ கன்ஸர்வேட்டரி என்ற பெயரில் செயல்பட்டுவந்த இசைப்பள்ளியில், சவுண்ட் இன்ஜினீயரிங் படித்துள்ளார்.

மறுபுறம் முன்னனி இசைக்குழுக்களில் கீபோர்டு வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் முதல் இளையராஜா வரை பல இசை மேதைகளோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 2008 ஆம் ஆண்டு இளையராஜாவின் ராஜா ஒன் மேன் ஷோ நிகழ்ச்சியில் கீபோர்டு  வாசித்தார்.

2012 ஆம் ஆண்டு முதல்முறையாக கொள்ளைக்காரன் படத்துக்காக இசையமைத்திருந்தார். இதை தொடர்ந்து, இவர் இசையமைத்த  மெட்ரோ படம் ஜோகனுக்கு திரையுலகில் பெரும் வரவேற்பையும், ரசிகர்களிடம் தனி இடத்தையும் தந்தது.

இப்படங்களை தொடர்ந்து ஆள், உரு, அகடு, ஆயிரம் பொற்காசுகள், ஒயிட் ரோஸ் ,
கன்னட படமான கப்பட்டி போன்ற படங்களும், தற்போது வெளியாகியுள்ள
ராபர் படத்தைத் தொடர்ந்து தனது சிறந்த இசை வேலைப்பாடுகளை கொடுத்து வருகிறார்.

ராபர் படத்தில் இவரது பின்னணி இசை படம் பார்த்த மக்களிடையே கவனத்தை ஈர்த்து, பெரிதளவில் பேசப்படுகிறது. மேலும் பல படங்களில் தற்போது இவர் பிசியாக வேலைபார்த்து வருகிறார்.

Related Posts

“பிரசாந்த் 55” படத்தின் அறிவிப்பு வெளியீடு !

அந்தகன் படத்திற்குப் பிறகு, பிரஷாந்த் நடிக்கும் புதிய  படத்திற்கு தற்காலிகமாக பிரஷாந்த் 55 என்று பெயரிடப்பட்டுள்ளது. அழுத்தமான கதை அம்சம், விறுவிறுப்பான திரைக்கதை, என சூடு பறக்கும் விதமாக, சமரசமற்ற பட்ஜெட்டில் தயாரிக்கப்பட உள்ள, இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம்…

Read more

“சர்தார்-2” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு !

பிரின்ஸ் பிக்சர்ஸ், ஐ.வி. என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சர்தார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் PS மித்ரன் றஇயக்கத்தில், அதன் இரண்டாம் பாகமாக “சர்தார் 2” உருவாகியுள்ளது. முதல் பாகத்தை விட பரபரப்பான திரில்லராக, பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

“பிரசாந்த் 55” படத்தின் அறிவிப்பு வெளியீடு !

“பிரசாந்த் 55” படத்தின் அறிவிப்பு வெளியீடு !

“காலிங்கராயன்” படத்தின் திரைவிமர்சனம்

“காலிங்கராயன்” படத்தின் திரைவிமர்சனம்

“தரைப்படை” படத்தின் திரைவிமர்சனம்

“தரைப்படை” படத்தின் திரைவிமர்சனம்

கூலி வேலை செய்யும் விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை  நிறைவேற்ற வேண்டும். அண்ணாமலை வலியுறுத்தல் ! 

கூலி வேலை செய்யும் விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை  நிறைவேற்ற வேண்டும். அண்ணாமலை வலியுறுத்தல் ! 

“சர்தார்-2” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு !

“சர்தார்-2” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு !

சீயான் விக்ரமின் “வீர தீர சூரன்” படத்தின் திரைவிமர்சனம்

சீயான் விக்ரமின் “வீர தீர சூரன்” படத்தின் திரைவிமர்சனம்