போதையில் மருத்துவர்களை தாக்கிய இளைஞர்கள் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பேகேப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் நவீன் குமார், இவரது உறவினரான சுவாதி என்பவருக்கு ஓசூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. நள்ளிரவு நேரத்தில் மருத்துவமனையில் உள்ள தாயையும், குழந்தையையும் பார்ப்பதற்காக நவீன் குமார் குடிபோதையில் அங்கு சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது மருத்துவமனை ஊழியர்கள் அவரைப் பார்ப்பதற்கு அனுமதிக்காமல் காலையில் வந்து பார்க்குமாறு கூறியுள்ளனர். அதற்கு நவீன் குமார் உடனடியாக குழந்தையை பார்க்க வேண்டும் எனக் கூறி, அங்கு பணியில் இருந்த மருத்துவரையும், மருத்துவ பணியாளர்களையும் தகாத வாக்குத்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டுள்ளார். அதனைத்தட்டி கேட்ட மருத்துவர் ராம் பிரபாகர் என்பவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து நவீன் குமார் வெளியே சென்று அவரது நண்பர்கள் சிலரை மருத்துவமனைக்கு அழைத்து வந்து மீண்டும் தகராறு ஈடுபட்டுள்ளார். அப்போது மருத்துவமனை நிர்வாக இயக்குனர் அக்ஷயா ராம் என்பவரையும், அவர்கள் அனைவரும் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து காயம் அடைந்த மருத்துவர்கள் ஓசூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து ஓசூர் பேகேப்பள்ளி பகுதியைச் சேர்ந்த நவீன் குமார், அவரது நண்பர்களான அம்ரேஷ் மற்றும் விக்னேஷ் ஆகிய மூன்று இளைஞர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Posts

கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 7525 லிட்டர் எரி சாராயம் பறிமுதல் !

தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்கள் வழியாக, அண்டை மாநிலங்களுக்கு  காவல்துறையினர் கண்ணில் படாமல், எரி சாராயம் கடத்துவதை சில கும்பல், தொழிலாக செய்து வருகின்றனர்.  இந்நிலையில் கோயம்புத்தூர் மண்டலம் சிஐயூ (CIU) போலீசாருக்கு கர்நாடக மாநிலத்திலிருந்து, எரிசாராயம் கடத்தி வரப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.…

Read more

கிருஷ்ணகிரி அருகே தீடீரென கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு !

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகேயுள்ள திப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த பசுபதி, தனது நண்பர்களுடன் துக்க நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது சந்தூர் சாலையில் காரை நிறுத்திவிட்டு, ஈமச்சடங்கிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தபோது, இவர்கள் வந்த காரில் திடீரென தீப்பற்ற தொடங்கியுள்ளது.…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

“பிரசாந்த் 55” படத்தின் அறிவிப்பு வெளியீடு !

“பிரசாந்த் 55” படத்தின் அறிவிப்பு வெளியீடு !

“காலிங்கராயன்” படத்தின் திரைவிமர்சனம்

“காலிங்கராயன்” படத்தின் திரைவிமர்சனம்

“தரைப்படை” படத்தின் திரைவிமர்சனம்

“தரைப்படை” படத்தின் திரைவிமர்சனம்

கூலி வேலை செய்யும் விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை  நிறைவேற்ற வேண்டும். அண்ணாமலை வலியுறுத்தல் ! 

கூலி வேலை செய்யும் விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை  நிறைவேற்ற வேண்டும். அண்ணாமலை வலியுறுத்தல் ! 

“சர்தார்-2” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு !

“சர்தார்-2” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு !

சீயான் விக்ரமின் “வீர தீர சூரன்” படத்தின் திரைவிமர்சனம்

சீயான் விக்ரமின் “வீர தீர சூரன்” படத்தின் திரைவிமர்சனம்