
திண்டுக்கல் மாவட்டம், பழனியில், மார்ச்-8 மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக பெண்களுக்கான தொழில் முனைவோர் விழா தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. முன்னதாக பழனி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் PSKL லட்சுமிபதி ராஜு, அவரது மருமகள் லோகநாயகி, PSKL. குழுமம் உரிமையாளர் G.ராஜு, லில்லி புட்ஸ் மாண்டிசோரி பள்ளி ஆசிரியர்கள் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.


பெண்கள் தங்களுடைய தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக, கைவினைப் பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. மருத்துவம், இயற்கை உணவு, சிறுதானியம், ஓவியம், விளையாட்டு, கைவினைப் பொருட்கள், எம்பிராய்டரி ஒர்க்ஸ், ஆரி ஒர்க், போட்டோகிராபி, மணப்பெண் அலங்காரம், ஆபரணம், கைத்தறி ஆடைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், போன்ற தலைப்புகளில் பலர் தங்களது சொந்தமாக தயாரித்த பொருட்களை காட்சிக்கு வைத்துள்ளனர்.


இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள், பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். PSKL லில்லி ஃபுட்ஸ் மாண்டிசோரி பள்ளி நிர்வாகம் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தது.