
தமிழ்நாடு அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்
பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். மதுரை ஆவின் நிர்வாகம் லாபத்தில் 50 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். 50 சதவிகித மானியத்தில் கால்நடை தீவனம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பங்கேற்ற பால் உற்பத்தியாளர்கள் பாலை ரோட்டில் கொட்டி அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.